அதிகாலையில் எழுந்து மொட்டை மாடியில் படித்துக் கொண்டு இருந்தாய்.
சத்தம் போடாமல் சுவரு ஏறிக் குதித்து உன் அருகில் வந்து, என்ன, இவ்வளவு சீக்கிரம் எழுந்து படிக்கிறாய் என்றேன்.
'எக்ஸாம்' என்றாய்.
என்னது, சரஸ்வதிக்கே எக்ஸாமா, எந்த முட்டாள் வச்சது.
'ஐயோ... ஒரு சாமியையும் விட மாட்டியா... உன்னை யாரு விடியக் காலையிலேயே எழுந்து வர சொன்னது...
நீ தான்...
'நானா... உங்க வீடு தேடி வந்து நான் உன்னை எழுப்பினேனா'...
நீ எழுப்பவே வேண்டாம். நீ எழுந்தால் நான் எழுந்து கொள்வேன். நீ தூங்கினால் நான் தூங்கி விடுவேன். ஏன்னா, நீ தான் என் கண்ணாச்சே...
'போச்சு... போச்சு... படிச்சது எல்லாம் மறந்து போச்சு' என்று சிணுங்கினாய். உன் சிணுங்கலைக் காண எழுந்து வந்தான் சூரியன்!
- தபு சங்கர்

No comments:
Post a Comment