சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jun 2013

உண்மை கதை...


பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்.

ஒரு நாள் இரவு மழை சோவென்று பெய்து கொண்டு இருந்தது.வயதான ஒரு தம்பதியினர் அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு அங்கு பணிபுரியும்மேனேஜரிடம் ரூம் கேட்டு கொண்டிருந்தனர்.

                                   

ரூம் எதுவும் காலியாக இல்லீங்களே என்றார்,இருந்தாலும் இந்த இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போது உங்களை வெளியில் அனுப்ப மனம் இல்லை அதனால் நீங்கள் என் ரூமில் தங்கி கொள்ளுங்கள் என்றார்.
என் ரூம் அந்த அளவுக்கு வசதியாக இருக்காது உங்களுக்கு சம்மதமா என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.பரவாயில்லை தம்பி நாங்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறோம் என்றார்.நீங்கள் எங்கே தம்பி படுப்பீற்கள் என்று பெரியவர் கேட்டார்.என்னை பற்றி கவலைப்படாதீர்கள் நீங்கள் சென்று ஓய்வு எடுங்கள் என்றார்.

பொழுது விடிந்தது பெரியவரும் அவர் மனைவியும் புறப்படத் தயாராயினர்.தம்பி உங்கள் நல்ல மனசுக்கு நீங்க மிகப்பெரிய ஹோட்டலுக்கு மேனேஜராக இருக்கத் தகுதியானவர் என்று பெரியவர் சொன்னார்.ஒரு நாள் நான் ஹோட்டல் கட்டும்போது உங்களுக்கே மேனேஜர் வேலை தருகிறேன் என்றார்.மூவரும் சிரித்தனர் பிறகு வயதான தம்பதியினர் விடை பெற்றுக் கொண்டனர்.உண்மையில் அந்த தம்பி தங்கமானவர் என்று தன் மனைவியுடன் சொல்லியபடியே சென்றார்.
இரண்டாண்டுகள் உருண்டோடின, அந்த பெரியவர் தம்பி நீங்கள் நியு யார்கில் உள்ள எனது இல்லத்துக்கு வர வேண்டும் என்று கடிதம் எழுதினார்.இவரும் புறப்பட்டு சென்றார்.வாங்க தம்பி என்று அழைத்து கொண்டு நியுயார்கில் உள்ள 5 வது அவென்யு 34 வது தெருவுக்கு போனார்.’இதோ இருக்கிறதே ஹோட்டல் இதற்கு நீங்கள் தான் மேனேஜர் ,உங்களுக்காகத் தான் இந்த ஹோட்டலை கட்டினேன் என்றார்.’

                           

விளையாடாதீர்கள் சார் என்றார்.இல்லை தம்பி உண்மையாகத்தான் சொல்கிறேன் என்றார்.William Waldorf-Aster என்பவர் தான் அந்த பெரியவர்.படத்தில் இருக்கும் Waldorf-Astoria Hotel தான் அந்த பெரியவர் கட்டியது.George C. Boldt என்பவர் தான் அந்த தம்பி,அந்த பிரமாண்ட ஹோட்டலின் முதல் மேனேஜர். சொன்னதை செய்து காட்டினார் William Waldorf-Aster.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
No comments:

Post a Comment