சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jun 2013

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை - சுவாரசியமான 13 பிண்ணணி தகவல்கள்!

1. 1957 செப்டம்பர் 28 ம் தேதி மதுரையில் நடைபெற்ற ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் தேவர் பேசிவிட்டு வைகைக்கரை ஆற்றுப் பாலத்தில் வந்து கொண்டிருக்கும் போது 1950 ம் வருடத்திய தடுப்பு காவல் சட்டப்படி தேவரை கைது செய்தனர், தன் கழுத்தில் கிடந்த ருத்ராட்சை மாலையை கழட்டி கொடுத்துவிட்டு இங்குதான் போலீஸ் ஜீப்-ல் ஏறினார்.


2.விடுதலை இந்தியாவில் அரசியல் ரீதியாக பழிவாங்க முதன்முதலில் சட்டத்தை ஏவிய நிகழ்வாக அரசியலர்கள் கணிக்கிறார்கள்... பின்னாளில் இந்த வழக்கை பயன் படுத்தியே தேவரை ஜாதிய தலைவராக்க முயன்றனர்

3.1966
ஜனவரி மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் பார்வர்ட் பிளாக் கட்சி மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் தேவரை கைது செய்த இடத்தில் தேவருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. 1969
ல் - நகரசபை தலைவர் ,துணைத்தலைவர் பதவிக்கு பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் போட்டியிட முன் வந்த "சோனை சேர்வை"- யையும் "முத்துமாயத்தேவர்"-ரையும் திமுக வினர் எதிர்த்தனர்.இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் திரு ஆனந்தன் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெறவே திமுகவினர்க்கு கலக்கமானது .திமுகவினரால் முத்துமாயத் தேவருக்கு நகரமைப்பு குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது .இதன் மூலம் பார்வர்ட் ப்ளாக் திமுக-வை சேர்த்துக்கொண்டு "தேவருக்கு சிலை வைப்போம்" என் தீர்மானம் கொண்டுவந்து வெற்றிக்கரமாக நிறவேற்றினார்கள்.

                                       

5.1969-
ல் தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம், தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் என்று சிலை அமைக்கும் பணியை தொடர்கிறார் மூக்கையாத் தேவர்!

6.
வெண்கல சிலை வடிவமைக்க தேவையான பணம் வசூலாக வில்லை, பணத்திற்காக தேவர் வீசுவாசிகள் வீட்டையும் தட்டினார்,பணத்திற்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்றார் திரு.மூக்கையாதேவர்.கூலித்தொழிலாளி முதல் பெரியமனிதர்கள் வரை பணம் தந்தனர்

7.
எந்தத் தலைவனுக்கும் இல்லாத அளவில் 14 (பதினாலு) அடி உயரத்தில் தேவரது முழுவுருவ வெண்கலச்சிலை உருவானது.

8.
அண்ணாதுரை இறந்த பின்பு தி.மு.-வினார் கோரிப்பாளையத்தில் அண்ணா சிலையை வைக்கப்போகிறோம் என்றும், தேவர் சிலைக்கு வேறு இடம் பார்க்கலாம் என்றும கோரினர்.
பார்வட்பிளாக் விடாப்பிடியாக இருந்து கோரிபாளைய இடத்தை தன் வசப்படுத்தியது.

9.1974
ஜனவரி 5ம் தேதி சிலை திறப்பு விழா, சிலை திறப்புக்கு இந்திய ஜனாதிபதி திரு.வி.வி.கிரியும், அப்போதைய தமிழக முதல்வரும் அழைக்கப்பட்டனர்.

                                   

10.
இந்திய ஜனாதிபதி திரு.வி.வி.கிரி நம் தேசிய தலைவர் தேவர் சிலையை திறந்து வைத்து பேசுகையில் "தனக்கு திருக்குறளை கற்றுத் தந்தவர் திரு.பசும்பொன் தேவர் அவர்கள்" என்றார். விடுதலைப் போராட்டத்தில் தேவரோடு ஒரே சிறையில் இருந்தோம், தேவர் ஒரு மகான்" என்றார்.நீண்டமணி நேரம் தேவரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். தேவரின் நிழலிலேயே வளர்ந்த திரு..ஆர்.பெருமாள் நன்றி கூறினார்.

11.
இது முழுக்க முழுக்க பார்வர்ட் பிளாக் கட்சியின் நிகழ்ச்சி மட்டுமே. சிலை அமைந்த இடத்திற்கு பணமும் ,அந்த சிலையை பராமரிக்க மாநகராட்சிக்கு கட்டவேண்டிய பணமும் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் செலுத்தப்பட்டது.

12.
கோரிப்பாளையம் தேவர் சிலை முழுக்க முழக்க மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்டது இதில் அரசாங்க பணமோ அரசாங்க உதவியோ கிடையாது.இந்த விழா அரசாங்கம் சார்பாக நடைபெறவில்லை .திமுகவின் ஆட்சிக் காலத்தில் கருணாநிதி முதல்வர் என்ற முறையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமே திமுகவின் பங்கு .இதில் திமுகவின் கருணாநிதிக்கு எந்த சம்பந்தமுமில்லை

13.
எந்த இடத்தில் தேசியத் தலைவர் பசும்பொன் தேவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜாதியத் தலைவராக களங்கம் சுமத்தினார்களோ அதே இடத்தில் தமிழக முதல்வர் தலைமை வகிக்க ,இந்தியாவின் முதல் குடிமகன் தேவரின் சிலையை திறந்து வைத்து தேவரின் களங்கம் துடைக்கப்பட்டு தேசியத் தலைவராக அடையாளப்படுத்தப்படுகிறார்!

14.
அன்று தேவரை வேண்டாத விரோதிகள் கையில் மத்திய அரசும் மாநில அரசும் இருந்தன ,இன்று மத்திய அரசும் மாநில அரசும் தேவருக்கு வேண்டியவர்கள் கையில் இருக்கிறது.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !


No comments:

Post a Comment