சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jun 2013

நாங்கெல்லாம் விண்வெளில இருக்க வேண்டியவங்க...!மூன்றாம் வகுப்பு மாணவன் :- "டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன..?"

ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி. நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம்...
அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார்...

ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின் எடை என்ன என்ற கேள்விக்கு யாரேனும் விடை கண்டுபிடித்தீர்களா...?

யாருமே பதில் பேசவில்லை...

ஆசிரியை :- (பெருமையாக ) தான் கண்டுபிடித்த விடையை சொல்ல...

மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா...

ஆசிரியை :- ?????????????????

நாங்கெல்லாம் விண்வெளில இருக்க வேண்டியவங்க...!

"என் வாட்ச், கேமரா, கால்குலட்டர், கம்ப்யூட்டர், ரேடியோ, டோர்ச் லைட் எல்லாம் தொலைஞ்சுப் போச்சுனு கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன்!"

ஏன் ?

"
வெறும் செல்போன் தொலைஞ்சதா சொன்னா, கண்டுக்க மாட்டேன்குறாங்க
!"

"அக்கம் பக்கத்துலே கடன் வாங்கியாவது இப்ப சினிமா பார்த்தாகணுமா?"

"
படம் எடுக்கறவங்களே கடன் வாங்கித் தாங்க எடுக்கறாங்க. அதனால இது ஒண்ணும் தப்பில்லே!"

"மசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக் கூடாதுன்னு என்னைச் சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்?"

"
ஆமாம். இதுல என்ன சந்தேகம்?"

"
பொறாமையில சொல்லலியே
?!"

"ம்ம நாராயணசாமி, ஒரு நூறு ரூபாகூடஇல்லாம கஷ்டப்படறாண்டா?"

"
ன் உன்கிட்ட கேட்டானா?"

"
இல்லைடா நாந்தான் அவன்கிட்டகேட்டேன். ல்ன்னு சொல்லிட்டான்."

மாணவன் : டீச்சர் உங்களுக்கு லவ்வுன்னா பிடிக்காதா?

டீச்சர் : பிடிக்குமே... ஏன் கேட்கிறே?

மாணவன் : உங்க பொண்ணுகிட்ட நான் லவ்வ சொன்னப்போ, எங்க அம்மாவுக்கு பிடிக்காதுன்னு சொல்றா. கொஞ்சம் உங்க மகளுக்கு எடுத்துச் சொல்லுங்க
.

No comments:

Post a Comment