1937 தமிழக சட்டசபைத் தேர்தல், காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் கடும் போட்டி,தேவர் காங்கிரசின் சார்பில் பிரச்சாரம் செய்கிறார்.
செட்டிநாடு வட்டாரத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் சர்.அண்ணாமலை செட்டியார் போட்டியிடுகிறார்,அவரது ஆட்கள் அங்கு பிரச்சாரத்திற்கு போகும் காங்கிரஸ் கார்களை தாக்குவது,ஆட்களை அடிப்பது என்று அராஜகம் செய்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்து வந்தனர்.
போலீசிடம் புகார் செய்தால் எந்த பயனும் இல்லை,காரணம் சர்.அண்ணாமலை செட்டியார் வீட்டிற்கு வெள்ளைக்கார கவர்னரே வந்து உணவருந்திவிட்டு செல்லுவார்.அந்த அளவு செல்வாக்கு படைத்தவர்.

கானாடுகாத்தானில் காங்கிரசின் மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் மேடயில் பேசும்போது,’இந்த கூட்டம் 144 தடை உத்தரவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது,மீறி பேசினால் சுடுவேன்’ என்று ரிவால்வாரை அவரது நெஞ்சுக்கு நேரே காட்டி ஒரு சப் இன்ஸ்பெக்டர் மிரட்டிய நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றது.
இதையெல்லாம் கேள்விப்பட்ட தேவர் செட்டிநாட்டிற்கு பிரச்சாரத்திற்கு புறப்பட்டார்,வழியில் தேவரின் காரை அண்ணாமலை செட்டியாரின் ஆட்கள் பம்பரோடு மோதி நிறுத்தினர்.கார் நின்றது.உள்ளிருந்து தேவர் தனியாய் இறங்கினார்.அந்த காரின் உள்ளிருப்பவர்களை நோக்கி,”காரை எடுப்பதாக உத்தேசமா இல்லையா? என்றார்.தேவரைப் பார்த்ததும் அந்த காரில் இருந்தவர்கள் இறங்கி ஓடி வந்து துண்டை இடுப்பில் கட்டி,”அய்யா உங்கள் கார் என்று தெரியாது,யாரோ காங்கிரஸ்காரர் கார் என்று மறைத்துவிட்டோம்,நீங்கள் போகலாம்” என்றனர் வழிவிட்டு.
அப்போது தேவர்,”அண்ணாமலை செட்டியார் போடும் பிச்சைக்காசுக்கு இப்படி தேச துரோகமான செயல்களை செய்யாதீர்கள்” என்று சொல்லிவிட்டு சென்றார்.தேவர் கானாடுகாத்தானில் நடந்த மாநாட்டிற்கு சென்று சேர்ந்தார்.நேற்று சத்தியமூர்த்தி ஐயரை மிரட்டிய சப் இன்ஸ்பெக்டர் தேவரை பேச விடுவாரா?என்று காண சுமார் 50000 பேர் அங்கு கூடினர்.
தேவர் மேடையேறியதும் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் கரகோஷம் வானைப் பிளந்தது,கரகோஷம் ஓய்ந்ததும் தேவர் கர்ஜிக்கத் தொடங்கினார்,”நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தியை ரிவல்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்த சப் இன்ஸ்பெக்டர் அவர்களே,உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவல்வாரில் மாட்டி மேடைக்கு வரும்படி அடியேன் அரைக்கூவல் விடுக்கிறேன்,இந்த தேசம் விடுதலை ஆக,பாரத மாதா அடிமை விலங்கு உடைய அடியேனும் இந்த மேடையிலே சாகத் தயார்,சப் இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா?” என்று சவால் விட்டார்.கடைசிவரை ஒருவரும் அங்கு வரவில்லை.தன் கொள்கைக்கு முன் உயிரை துச்சமென நினைத்தவர் தான் தேவர்.
“வீரம் என்ற குணம் மட்டுமே எதிரியையும் உன்னை மெச்சும்படி செய்யும்”
ஆம் அவர் தான் தேவர்.
No comments:
Post a Comment