சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jun 2013

ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?


ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று ரேஷன் கார்டு மற்றும் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும்,என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

ரேஷன் கார்டு:

புதிய ரேசன் கார்டு வாங்க கிராமப்புறங்களி ல் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையைத் தர வேண்டும்.

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய ரேசன் கார்டு கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துதர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்:

மாவட்டப் போக்குவரத்து அதிகாரியை அணுக வேண்டும். பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண் வழங்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகனம் இரண்டுக்குமே கட்டணம் ரூ.315 செலவாகும். விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரத்தில் புதிய டிரைவிங் லைசன்ஸ் கிடைக்கும்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR (NONTRACEABLE) சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்...!

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !

No comments:

Post a Comment