கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. அவர் வாழ்ந்த போது நான் பிறக்கவே இல்லை. இருந்தாலும் அவரின் புத்தகங்களை படித்த போதும், பிறர் சொல்லியும் கேட்ட செய்திகள் நிறைய. தான் செய்தது தவறு என்றாலும் அதை உணர்ந்து கொண்டு யாரும் அதனால் பாதிக்கபடாத வகையில் வாழ்ந்தவர். தமிழ் தெரிந்த கடைசி தமிழன் உள்ளவரையில் அவரின் புகழ் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.
அவரை
பற்றிய
சில
சின்ன
சின்ன
குறிப்புகள்...........
1) காட்டுக்கு ராஜா சிங்கம், கவிதைக்கு ராஜா, கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது.
2) நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கண்ணதாசனே அறிவித்தார்.
3) கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல.
அழகான கண்களைப் பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதை படிப்பதிலும்ஆசை அதிகம். அதனால் இந்த பெயரை வைத்துக்கொண்டேன் என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
4) சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர்கள் பெயர் நாராயணன்.
5) “கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்று கன்னியின் காதலியில் எழுதிய முதல்பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த “கண்ணே கலை மானே” கவிஞரின் கடைசிப்பாட்டு.
6) எப்போதும் மஞ்சள் பட்டுச்சட்டை,வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும், திடீரென்று காணாமல் போய்விடும். பள்ளிக் கூடத்துக்கு போயிருக்கு என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை நகைச்சுவையாக சொல்வார்.
7) மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல்
இரண்டும் தான் கவிஞருக்கு பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்கு தான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
8) வேட்டியின் ஓரத்தை பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்து கொண்டே இருந்தால் தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும் போது செருப்பு அணிய மாட்டார்.
9) கொஞ்சம் மது அருந்தி விட்டால் என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம்.
அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.
10) கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,தனக்கு பிடித்த பாடல்களாக என்னடா பொல்லாத வாழ்க்கை, சம்சாரம் என்பது வீணை ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
11) காமரசர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால்முற்றுப்பெறவில்லை.
12) கண்ணதாசனுக்கு பிடித்த இலக்கியம் கம்பராமயணம்.நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதில் இருந்து தான் என்பார்.
13 ) ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால் சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் பராசக்தி, ரத்தத்திலகம், கறுப்புபணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
14) முதல் மனைவி பெயர் பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தலா ஏழு குழந்தைகள்.
50 வயதில் வள்ளியம்மையை திருமணம் செய்தார். இவர்களுக்குபிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்.
15) படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய் அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கி விட்டுத் தான் செல்வார்.
16) கண்ணதாசன் இறந்து விட்டார் என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடி பலரும் அழுது கூடிவிட,பிறகு இவரே முன்னால் தோன்றி சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
17) உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தகங்களைப் பின்பற்றுங்கள்.
அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள்.
18) தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படிவாழக்கூடாது
என்பதற்கான உதாரணங்கள் என்றார்.
19) திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள். தென்றலா, தென்றல் திரை, முல்லை, கடிதம், கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
20) திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன்பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. இது எனக்கு சரிவராது என்றார்.
21) குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொண்டுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒருதனி மனிதன் தன் உடல்நிலைக்கும், வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தில் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
22) இறப்புக்கு 11ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதி வைத்துக் கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்....
“ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு..!”
அவன் பாட்டை எழுந்து பாடு..!”
இப்படியொரு விந்தையான மனிதரை இதுவரை இந்த உலகம் பார்த்ததும் இல்லை. இனி பார்க்க போவதும் இல்லை. எத்தனை கவிஞர்கள் வந்தாலும், எத்தனை விதமான பாட்டுக்கள் எழுதினாலும் ஏதோ ஒரு வரி, அல்லது ஒரு வார்த்தையாவது கண்ணதாசனுக்கு சொந்தமானதாக இருக்கும்.
விறுவிறுப்பாக
வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து
கொள்ளுங்கள்.! நல்ல
கருத்துக்களை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
ரசித்துப் படித்தேன்... சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteமானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்...
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை...!