இது ஒரு தனி மனிதனின் துதி பாடும் பதிவு அல்ல என்பதை அனைவருக்கும் முதலில் சொல்லி கொள்கிறேன்...தந்தை தன் மகனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ததற்காகவே இன்றும் சில கையாலாகாதவர்களின் அநாகரிகமான பேச்சுகளை வாங்கி கொண்டிருக்கும் ஒருவனை பற்றி மட்டுமே சொல்வதுதான் இந்த பதிவு.. அவர் வேறு யாருமல்ல.... ஜூன் 22 ல் பிறந்த நாள் காணும் "இளைய - தளபதி விஜய்" தான்.
இயக்குனர் S.A.C. சினிமாவில் இருந்ததினால் மட்டுமே விஜய் சினிமாவில் அறிமுகமாவது சுலபமாக இருந்தது. தன் சொந்த பேனரில் தான் முதல் நான்கு படங்கள் விஜய் நடிக்க வேண்டி வந்தது. அவரை நம்பி அப்போது எந்த தயாரிப்பாளர்களும் படம் எடுக்க வரவில்லை.
அதே போல இயக்குனர் S.A.C ம் பெரிய செல்வாக்குடன் அப்போது இல்லை. தன் திரைப்படங்கள் மூலம் பல நாயகர்களை உருவாக்கியிருந்தார். அதனால் தன மகன் விஜயை வைத்து தானே தான் படம் எடுக்க வேண்டி வந்தது. இதனால் விஜய்க்கு சினிமா உலகத்தில் அறிமுகமாவது மட்டுமே சுலபமாக இருந்தது. அப்போதும் படங்கள் சரியாக போகவில்லை. விஜயின் ஆரம்பகால படங்கள் சங்கவி போன்ற நடிகைகளின் கவர்ச்சிக்காவே ஓடின.
முதன் முதலில் விஜய் வேறு ஒரு பேனரில் நடித்த படம் விஷ்ணு. எதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை. அப்போது தான் இயக்குனர் S.A.C. ன் படங்களில் நடித்து புகழ்பெற்ற கேப்டன் விஜயகாந்த் தன் படத்தில் நடிக்க வைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் விஜயை கொண்டு சென்றார். பின் விக்ரமனின் "பூவே உனக்காக " படம் பெண்கள் மத்தியிலும் ஒரு மதிப்பை பெற்றது. சாதரணமாக பெண்கள் ஆண் நடிகர்களை தங்களது "கனவு நாயகனாக"
தான் நினைப்பார். ஆனால் "பூவே உனக்காக" படம் பார்த்து விஜயை பெண்கள் தங்கள் சகோதரனாக நினைத்தனர். dream
boy என்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அண்ணன்,தம்பி என்ற உறவு முறை எப்போதும் நிலைத்து நிற்கும். இன்றளவும் அந்த ரசிகர் வட்டம் இருக்க தான் செய்கிறது.
பூவே உனக்காக" படத்திற்கு பின்பு பாசில் இயக்கத்தில் "காதலுக்கு மரியாதை"
படம் விஜயை முன்னணி ஹீரோவாக்கியது. ரஜினி,கமலுக்கு பின் விஜய், அஜித் என்ற அடுத்த வரிசை வர ஆரம்பித்தது. குஷி, பத்ரி , பிரியமானவளே என பெண்களுக்கு பிடித்த படங்களாக நடித்து வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்தார் விஜய். இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை.வெற்றி வந்து கொண்டே இருந்ததில் சில தோல்விகளை பெரிதுபடுத்தினர் சிலர். இனி விஜயின் ஆட்டம் முடிந்தது என்றனர்.
அப்போதுதான் ஒரு புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தார். வழக்கமான பாதையிளிருந்து ஆக்சன் ஹீரோவாக மாறினார். கதை என்னமோ எம்ஜிஆர் காலத்து கதைதான். ஆனாலும் படம் பட்டையை கிளப்பியது. அந்த படம் " திருமலை ". இயக்குனர் ரமணா. அதன்பின்பு புதுமுக இயக்குனர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்தார் விஜய். திருப்பாச்சி, சிவகாசி என வெற்றி படங்கள் வந்த போது " குருவி" யில் மற்ற படங்களை காப்பி அடித்து சொதப்பினார் இயக்குனர் தரணி.
தனக்கென்று ஒரு சில இயக்குனர்களை வைத்து கொண்டு அவர்களின் படங்களில் மட்டுமே நடித்து வெற்றி படங்களை கொடுக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். சூர்யா ஹரி ( ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2), கௌதம் மேனன் (காக்க காக்க, வாரணம் ஆயிரம் ) , முருகதாஸ் ( கஜினி, ஏழாம் அறிவு ), K.V.ஆனந்த் ( அயன், மாற்றான், அடுத்து துருவன் நடிக்க போகிறார் ) என பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பார்.
இப்படி இருக்கையில் புதுமுக இயக்குனர்கள் சொதப்புவதற்கு கதாநாயகன் எப்படி காரணம் ஆக முடியும்.? இப்போது கடைசியாக வெளிவந்த காவலன் ( சித்திக் ), வேலாயுதம் ( ஜெயம் ராஜா ), நண்பன் (ஷங்கர் ) தற்போது சூப்பர் டூப்பர் ஹிட்டான துப்பாக்கி ( முருகதாஸ் ) போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்ததால் படங்கள் வெற்றி பெற்றது . இப்போது எல்லோரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்.
இது
மட்டுமில்லாமல்
சொந்த
வாழ்க்கையிலும்
பல
சோதனைகளையும்
அவமானங்களையும்
தாண்டி
வந்தவர்
தான்
விஜய்.
விஜய்
தன்
திருமணம்
முடிந்து
தேன்நிலவு
சென்ற
சமயம்
அவரது மனைவி ஏற்கனவே
திருமணம்
ஆனவர்
என்றும்
அது
தெரிந்த
விஜய்
தற்கொலை
செய்து
கொண்டார்
என்றும்
வதந்தி
பரவியது.
இன்னொன்று
பிரியமுடன்
படத்தின்
சூட்டிங்கின்
போது
விபத்தில்
அடிபட்டு
சிகிச்சை
எடுத்தார்.
அப்போது
அவர்க்கு
பலத்த
அடிபட்டுவிட்டதாகவும்
இனிமேல்
எழுந்து
நடந்தாலும்
படங்களில்
நடனம்
ஆட
முடியாது
என்றும்
பேசினார்கள்.
ஆனால்
அதே
பிரியமுடன்
படத்தில்
"பாரதிக்கு கண்ணம்மா"
"பூஜா வா
பூஜா
வா"
என்ற இரண்டு பாடல்களிலும்
வேகமாக
நடனம்
ஆடியிருப்பார்.
எத்தனை
தடைகள் வந்தாலும் அதை
தாண்டி
வெற்றி
என்ற
இலக்கை
அடைபவன்
தான்
"இளைய தளபதி விஜய். இன்றைய தலைமுறை நடிகர்களில் விஜய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து "ஒன்ஸ்மோர்" படத்தில் நடித்தது தான். அந்த படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவர் சொன்னாராம் " டேய் பிரபு இந்த விஜய் ஒரு ரவுண்ட் வருவாண்டா " என்று இளைய திலகம் பிரபு அவர்களிடம் சொன்னாராம்.அந்த ரவுண்ட் இன்னும் முடியவில்லை என்று பிரபு வும் விஜய் அவார்ட்சில் சொன்னார்.
தனக்காக
தன்
உழைப்பை
கொடுத்து
உயிரை
கொடுக்கவும்
தயாராய்
இருக்கும்
ரசிகனை
நீ
என்
படத்தை
பார்த்தால்
மட்டும்
போதும்,
எனக்கு
காசு
வரும்
என்னை
யாரும்
பார்க்க
வரவேண்டாம்
என்று
ரசிகர்களை
விட்டு
விலகி
செல்லும்
நடிகர்கள் மத்தியில்
அவர்களை
தன்
வழியில்
அரவணைத்து
செல்லும்
எங்கள்
இளைய
தளபதி
விஜய்
தலைவன்
தான்.
இன்று போல் என்றும் வெற்றி பாதையில் வலம் வர விஸ்வரூபம் வலைபதிவு மனமார வாழ்த்துகிறது.
விறுவிறுப்பாக
வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து
கொள்ளுங்கள்.! நல்ல
கருத்துக்களை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
I have read many articles mocking Vijay and his films.But first time reading positive article about him and his career...which is in a way is fact...Congrats.
ReplyDeleteவருகைக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றிகள் பல ராஜாமுகம்மது அவர்களே,
Delete