சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jun 2013

சீனாவின் கோர முகம்.


சீனாவை பல நாடுகள் புரிந்து கொள்ள முடியாத காரணம், அதன் மொழி, அதன் கலாசாரம், எல்லாமே ரகசியம். வெளியில் வராத பல இருட்டு ரகசியங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வருகிறது வெளியில். பல விஷயங்கள் உண்டு. 

புதிர் மாதிரியான சீனா.. பல பயங்கரமான வேலைகளை அதன் நாட்டு மக்களுக்கே செய்கிறது. நமக்கு மேலே உள்ள திபெத் கண்டிப்பாய் சீனாவுடையது அல்ல.. திபெத்தும் சீனாவின் கலாச்சாரமும் வெவ்வேறு.திபெத்தியர்கள் புத்தர் சொன்ன வழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் கூட தலாய் லாமா என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். என்றாவது ஒரு நாள் விடியும் அவர்களுக்கு. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பலுன் குங் ... இது தான் நாம் பார்க்கும் விஷயம். அப்படி என்றால் தர்ம சக்ரம் என்ற அர்த்தம். இந்த புத்த பிரிவு ஆன்மீக ஒழுக்கத்தை போதிக்கிறது. உடல் மற்றும் அடிதடிக்கே முக்கியம் கொடுக்கும் சீன மதப்பிரிவுகளில், இது ரொம்பவே சாத்வீகமான ஒரு பிரிவு. 1992 இல் லீ கோன்க்சீ என்பவர் ஆரம்பித்தார். இது உடல் ஆரோக்கியமும் முக்கியம். அதற்கு நல்ல உடற்பயிற்சி தேவை. அதை விட  முக்கியமாய், மனம் ஆரோக்யமானதாக இருக்க வேண்டும் என்று..சகிப்புத்தன்மை, நேர்மை மற்றும் இரக்கம் இந்த மூன்றை மையமாய் வைத்தே இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இது சீனாவில் சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது. 4 கோடி பேர்கள் இதை பின்பற்ற ஆரம்பிக்க, கவர்மெண்டே வட்டம், மாவட்டம் எல்லாம் கிளைகள் ஆரம்பித்து ஊக்குவிக்க..பெரிய அளவில் எல்லோருமே இதில் சேர்ந்து விட்டனர். 70 நாடுகளில் இது பரவவும் ஆரம்பித்து விட்டது.

                           

ரொம்ப சிம்பிள் விஷயம் இது. மேலே சொன்ன மூன்று விஷயங்கள், அதோடு, தீய பழக்கங்களை அடியோடு நீக்குதல். (குடி, கூத்து, ட்ரக்ஸ், எல்லாம்..) பலுன் குங் ஈமெயில், ஆன்லைன் மற்றும் இணையத்திலேயே முழுதுமாய் பயணித்தது. அதனால், இதை அரசோடு இணைத்தும், இதை சொல்லி தருபவர்களுக்கு அதிகமாய் டுஷன் பீஸ் கொடுக்க சொல்லப்போக..லீ மறுக்க, சும்மா தான் சொல்லி கொண்டுக்க வேண்டும். இது ஒரு சர்வீஸ் என்று சொல்ல ரகளை ஆரம்பித்தது ...அரசுக்கும் லீக்கும் கொஞ்சம் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. லீ சீனா முழுக்க சுற்றி ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு போய்விட.. அரசு கொஞ்சம் அதிர்ந்து தான் போனது. லீ நியூயோர்க்கில் போய் செட்டில் ஆகி விட்டார்..
அரசு சார்பு புத்த மத அஸ்ஸோசியேஷன், புத்த மதம் பின்பற்றுபவர்கள் இதன் பின்னால் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். 

அப்படி என்றால்.. போனால் தொலைந்தீர்கள் என்று அர்த்தம். ஆரம்பித்தது அடக்குமுறை, டெலிபோன் லைன், இன்டர்நெட் ப்ளாக்.. இதை எதிர்த்து ஆரம்பித்தது ஊர்வலங்கள். கன்னா பின்னா வென்று கோவம் அடைந்தது அரசு. நாம் எல்லோரையும் கழுவி ஊதுகிறோம்.. எல்லோரும் துடைத்து விட்டு போகிறார்கள். ஆனால் சீனாவில் அப்படி இல்லை... பிடித்து சாத்தி விட்டார்கள். 45000-65000 பேர் செத்துப் போனார்கள்.

நிறைய பேரை நாஜி காம்ப் மாதிரி வேலை வாங்கினர், இதை விட கொடுமை, பலரையும் எல்லா டெஸ்ட் பண்ணி, அவர்களின் உறுப்பை அறுத்து, கிட்னியோ , கண்ணோ, எது வேண்டுமானாலும் ஒரு விலையில் விற்றது ஜியாங் ஜெமின் அரசு.

சீனாவில் இருந்து எழுதிய லெட்டர் ஒன்று இன்று உலகை கலக்க ஆரம்பித்து இருக்கிறது.
(
சீனா, இந்தியாக்குள் ரோடு போட்டத பத்தி சிலாகித்து எழுதி இருந்த மக்களுக்கு ஒன்று.. உங்க ஊர் ரோடு போடனுமின்னா.. முதல்ல உங்கள பிடிச்சி தான் வேல வாங்குவான் சீனாக்காரன். ரெடின்னா கூப்பிடுங்க அவனை.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !

No comments:

Post a Comment