சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Jun 2013

புலம்பல்ஸ் ஆப் ஆண்மகன்கள்

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்ட அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயல்ன்னு மட்டம் தட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு ஒதுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழுறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு சொல்லுவாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா"என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க.. ?"அப்படின்னு ஒரு நக்கல்.

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா"ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!"ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?"ன்னு ஏச்சு.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு புலம்பல்..

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.



No comments:

Post a Comment