சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jun 2013

ஊர் பெருமைகள் - திருநெல்வேலி


ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன் நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என அழைக்கப்படுகிறார், "நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி "எனப்படுகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.நல்ல பசுமை வளமும் கொண்டது.

திருநெல்வேலி தமிழ் தனி இனிமையானதாகவும் வித்தியாசமான வழக்கும் கொண்டது. தமிழ் மொழி வளர்ந்த பொதிகை மலையும் இங்கே உள்ளது"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

வீர வரலாறு:
பாண்டியர்கள் காலத்தில் திருநெல்வேலி தென்பகுதியின் தலைநகரமாக விளங்கியது. ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் இது முக்கிய வர்த்தகநகரமாக இருந்தது. அவர்கள் திருநெல்வேலியை நெல்லை சீமை என்று அழைத்தனர்.
பாண்டியர்கள் ஆட்சிக்கு பின் கி.பி. 900 முதல்1200 வரை சோழ பேரரசின் முக்கிய நகரமாக திருநெல்வேலி இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டிலும்,மறவர்,நாயக்கர்கள், நவாப்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது.
பாண்டிய பேரரசு வீழ்ந்தவுடன் பாண்டிய வம்சத்தினரும் நிர்வாகிகளும் குறுநில மன்னர்களாய் ஆண்ட பூமி . வெள்ளையனை, நவாப் ,மருதநாயகம் யூசுப்கான் போன்றவர் கூடிய படையை குறைந்த வீரர்களைக் கொண்டு வெற்றி பெற்ற மன்னர் புலித்தேவர் பிறந்தமண். வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட மன்னர் கட்டபொம்மன், அவர் சகோதரர் ஊமைத்துரை, தளபதி வெள்ளையத்தேவன் வாழ்ந்த மண் அது. ஒரு நாயக்கர் பாளையமும் 24 மறவர் பாளையமாகவும் கடுமையாக வெள்ளையர்களை எதிர்த்தவர்களின் பூமி. இந்திய விடுதலை போரட்டத்திற்கு விதையை போட்டு வெற்றியையும் பெற்ற வர்கள்.

புரட்சி களம்:
சத்ரியர்கள் மட்டுமே ஆளவும், படைகளில் பங்கேற்கும் உரிமை பெற்றதை மாற்றி தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகம் சார்ந்த ஒண்டி வீரனை தளபதி ஆக்கி பல சமூகங்களை படைகளில் சேர்த்தவர். கட்டபொம்மனும் தாழ்த்தப்பட்ட சமூக சுந்தரலிங்கம் என்பவரை படைவீரனாக சேர்த்தார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் மன்னர்கள் கவலை கொள்ளாமல் புரட்சி விதைகளை முதலில் தூவினர். புலித்தேவரையும் ஒண்டிவிரனையும் கடவுளாக்கி வழிபடுகின்றனர்.

திருநெல்வேலி அல்வா:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா
தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே
திருநெல்வேலி என்றாகி விட்டது . திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின்எதிரே இருக்கும் "இருட்டுக்கடை"அல்வாவிற்குத்தான் முதலிடம். இந்த இருட்டுக் கடையில் அல்வா மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 82 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக்கடை என்று அழைத்தனர்.

இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் அதாவது வெறும் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகிவிட்டது.மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி, சென்பகாதேவி, பழைய குற்றாலம் என பல அருவிகள் உள்ளன.No comments:

Post a Comment