கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.
குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.
குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.
குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.
உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.
உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.
உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.
அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.
உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.
நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.
விறுவிறுப்பாக
வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து
கொள்ளுங்கள்.! நல்ல
கருத்துக்களை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !
No comments:
Post a Comment