சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jun 2013

காதல் என்றால் என்ன ???


ந் கேள்வியை பத்து பொண்ணுங்க கிட்ட சாட்டிங்ல கேட்டேன் :)

அதுக்கு பொண்ணுங்க சொன்ன பதிலும் .. நான் கொடுத்த பதிலும்

முதலாவது பொண்ணு
நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :- காதல்ன்னா ஒரு அழகான பட்டாம்பூச்சி .. அத மெதுவா பிடிச்சா பறந்திடும் .. டைட்டா புடிச்சா செத்திடும் .. :(

நான் :- சினிமா படம் பாத்து கேட்டுப்போனவங்க வரிசையில கடைசி ஆளா நீ ???

(
சினிமா பட டைலாக் ஒண்ணு விடாம மனப்பாடம் பண்ணி வைச்சிருக்கு பக்கி ,,, யாருக்காச்சும் Fan Page ஆரம்பிக்க சினிமா டைலாக் வேணுன்னா இவளை கேக்கலாம் போல )
இரண்டாவது பொண்ணு
நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :- அது வேஸ்ட்டா .. லவ் என்ற பேர்ல யாரோ ஒரு பையன் போடுற கண்டிஷன்ல வாழுறதுக்கு சிங்கிளாவே வாழ்ந்திடலாம்

நான் :- உன்கிட்ட வேஸ்ட்டா இருக்கிற காதலை என்கிட்டயாச்சும் கொடுக்கலாமே ??? அவ்வ்வ்வ்
நாங்களும் அணுகுவமுல்ல ?? 

மூன்றாவது பொண்ணு
நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :- அன்பு .. பாசம் ...

நான் :- உன்கிட்ட காதல் என்ற சொல்லுக்கு பதில் சொல்லு என்னன்னா கேட்டேன் ??? உங்க அப்பா தமிழ் வாத்தியா ???

அவ்வ்வ்வ்  பட் சொன்னது 10 % சரி 


நாலாவது பொண்ணு
நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :- தெரியலையே 

நான் :- இதுக்காக கவலைப்படலாமா ??? நான் சொல்லிக்குடுக்கிறேன்!!!  டோன்ட் வொரிம்மா ... 

( அடுத்தவங்க மனசு கஷ்டப்பட்டா தாங்குமா என் மனம்?? )


ஐந்தாவது பொண்ணு
நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :- சந்தியா பரத் நடிச்ச படம் :)

நான் :- உன்னையெல்லாம் ஒருத்தன் கட்டி குடுமபம் நடத்தி ... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....

நீயெல்லாம் நல்லா வருவடி ... நல்லா வருவ ...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 
இவள ஏன் சுனாமி மிஸ் பண்ணிச்சு ??? 

ஆறாவது பொண்ணு
நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :- ஒரு ஆணும் பெண்ணும் மனசுக்கு பிடிச்சவங்ககூட உயிர் பிரியும் வரை சேர்ந்து வாழுறது காதல்

நான் :- உன்னை லவ் பண்ண போற நாதாரிக்கு எனது நல் வாழ்த்துக்கள்

வாழ்க பல்லாண்டு
உயிர் பிரியும் வரை சேர்ந்து வாழுறது காதல் அப்போ சேர்ந்து வாழலன்னா கருமாதியா... ராஸ்கல்ஸ் 

ஏழாவது பொண்ணு

நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :- ஒருவரது மனதை புரிந்து அவரது உணர்வுகளை உணர்ந்து அவருக்காக தனது மனதை மாற்றி அன்பையும் துணையையும் வழங்கி இறுதி வரை ஒருவருக்காக ஒருவர் வாழுது......!  கரெக்டா ???

நான் :- உனக்கு ஸ்கைப் இருக்கா ???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 
(
ஸ்டார்ட் மியூசிக் :- எனக்கென ஏற்க்கனவே பிறந்தவள் இவளோ ??)


எட்டாவது பொண்ணு
நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :-  ப்ளீஸ் .. வேற எதாவது பேசுங்க .. ஏன் எல்லா பாய்ஸ்சும் இப்பிடி இருக்கிறீங்க ?? பிரண்ட்ஸ்சா பேசுங்கப்பா ... இல்லனா பிளாக் பண்ணிடுவேன்

நான் :- காதல்ன்னா என்னான்னு கேட்டதே ஒரு குற்றமா ??? ப்ளீஸ் சென்னையில ஒருதடவை மழை பெய்யனும்ன்னு உத்தரவு போடேன் ... ??? ஏன்னா பத்தினிங்க சொன்னா மழை வருமாம் சென்னையில மழை வரட்டுமே உன்னாலே..........

 கடுப்பாக்கிட்டாள் மை லோர்ட் 


ஒன்பதாவது பொண்ணு

நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு (பையன் ) :- டேய் .. நான் *****ன்டா ... இது என்னோட பேக் ஐடிடா ... ஒரு பையன் கிட்ட கேக்குற கேள்வியா இது ???

நான் :- அடச்சீ .... உங்க இம்சை தாங்க முடியலடா டேய் ,.... :@
இவங்க வேற இடையில காஞ்சனா போல வந்து கரகாட்டம் ஆடிக்கிட்டு 


பத்தாவது பொண்ணு
நான் :- காதல்ன்னா என்ன ???

அந்த பொண்ணு :- தெரியலையே .. என் ஹஸ்பெண்ட்கிட்ட கேட்டு சொல்லவா ???

நான் :- ஓகே அக்கா .. அவசரமில்லை .. பொறுமையா கேட்டு சொல்லுங்க அக்கா ... 
மாமாவை எனக்காக தொந்தரவு பண்ணாதிங்க 
தப்பிச்சண்டா சாமி ..அவ்வவ் 

#
காதல்ன்னா என்னான்னு கேட்டதுக்கு நேக்கு இப்பிடி ஒரு கொலைவெறி பதில்ஸ் ... அவ்வ்வ்வ்வ்வ்வ்


No comments:

Post a Comment