சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jun 2013

ஐடி கம்பேனியும் டாஸ்மாக் பாரும்

சிரிக்க மட்டும் 

1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்

டாஸ்மாக் வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக தள்ளுவண்டி பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்

2)
காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .

எல்லா நேரமும் ஒரு ஐந்து பேர் , வாசலுக்கருகே மப்பில் கிடந்து கொண்டு தொல்லை கொடுத்து கொண்டு இருப்பார்கள் 

3)
பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.

பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 ஆட்கள் எப்போதும் வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.

4)
வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

வரும் அனைத்து நபர்களின் பர்சுகளும் காலியாகும். இருந்தும் அவர்கள் பாக்கெட்டுக்கு அடியில் எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

5)
அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.

அலுவலத்தில் இருந்து வருபவர்கள் அடையாள அட்டையோடு பந்தாவாக உள்ளே வருவார்கள்.

6 )
கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.

கிச்சன் முதல் கக்கூஸ் வரை (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை மஞ்சள் பூத்த வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.

7)
கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.

அங்கே இருக்கும் தொலைகாட்சியில் குத்துப் பாட்டு மட்டுமே ஓடும்.

8) IT
சர்வீஸ்இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .

சர்வீஸ்இவர்களை எப்போது அழைத்தாலும் உடனே வரவே மாட்டார்கள் .

9)
இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .

இலவசமாக அறிவுரை கிடைக்கும் .

10) “EMERGENCY EXIT”
ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.

உள்ளே போய் சிறிது நேரத்திலேயே வெளியே போகும் வழி மறந்துவிடும்

11)
சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.

சில வெளிநாட்டு சரக்கு பாட்டல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.

12) hand dryer
யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .

ஒரு மூலையின் கண்டிப்பாக ஒருவன் எப்போது வேணுமின்னாலும் வாந்தி .வந்துவிடும் கண்டிசனில் இருப்பான். 

13)
மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .

எப்போதும் துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா டேபிளில் இடம் பிடிக்க வேண்டும் .

14)
வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.

பெசல் ஐட்டங்கள் ஆடர் பண்ணா நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்.

15)
வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .

குடிக்க மட்டும்தான் அனுமதி என்றில்லை, வேடிக்கை பார்க்கவும் செல்லலாம். 

16)
டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .

தலையில் துண்டு போட்டு கவர் பண்ணிய ஒரு ஆள் எப்படியும் இருப்பார் .

17)
லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .

உள்ளே போனதும் இங்கிலீஷ், தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , 
கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .

18)
உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .

உள்ளே.சென்றாலே கப் அடிக்கும் .

19)
செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”

சர்வர் நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம்என்ன சார் வேணும்

20)
ஒரு ATM இருக்கும்.

காசு வாங்கும் கல்லாப்பெட்டி டேபிள் இருக்கும்.

21)
தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு .

வாந்தி எடுக்க தனி அறை கிடையாது .


No comments:

Post a Comment