சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jun 2013

கிரிடிட் கார்டு - தில்லுமுல்லு


சார் நீங்க கடன் அட்டை மூலமாக கடன் வாங்கிருக்கீங்க , தயவு செய்து அதற்கான பணத்தை கட்டிடுங்க ... கட்டலைன்னா உங்க மேல நடவடிக்கை எடுப்பேன் - இபப்டி பலருக்கும் வரும் அழைப்பு எனக்கும் .....

நான் : கட்ட முடியாது சார் , என்ன பண்ணப் போறீங்க

வங்கி ஊழியர் : கட்ட முடியாதுன்னு சொல்ல முடியாது , நாங்க உங்களை விட ...மாட்டோம் ..

நான் : விடாதீங்க சார் , இறுக்கி பிடிச்சிக்கோங்க, யாரு வேண்டாம்னு சொன்னது ?

வங்கி ஊழியர் : சார் , விளையாடாதீங்க உங்க மேல பிராடு வழக்கு பதிவு , செய்வோம் உங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து கம்பி என்ன ..வைப்போம் ...

நான் : சார் நான் , பத்தாம் கிளாஸ் தாண்டலை தான் .... அதுக்காக உங்க இஷ்டத்துக்கு அளந்து .விடாதீங்க .. என்ன வழக்கு போடப் போறீங்க ? என்ன பிராடு ? நான் பெற்ற கடன் எவ்வவளவு ? , இது வரை நான் கட்டி வந்த வட்டி எவ்வளவு , அதற்காக நீங்க போட்டுள்ள சேவை வரி மற்றும் இதர .வரிகள் மற்றும் அபராதங்களும் எவ்வளவு ? உங்க கிட்ட அது சம்மந்தமான விவரம் இருக்கும் பட்சத்தில் , அதை முதலில் எனக்கு முறையே அனுப்பி வைங்க ... பின்னர் எனது தரப்பு விளக்கத்தை நான் பதிவு .செய்கிறேன் ....

வங்கி ஊழியர் : சார் , இப்படி எல்லாம் பேசினால் சரி , வராது நான் உங்கள் வயதான பெற்றோரை அழைத்து பேச வேண்டி வரும் ....

நான் : அடடே , தாராளமாக பேசுங்கள் .... அவர்களை கேட்டா நீங்க எனக்கு கடன் அட்டை வழங்கினீங்க ? இல்லை அவர்கள் அதற்கான உத்திரவாதத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்களா ? பேசித் தான் பாருங்களேன் .... நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் உங்கள் மீது நியூசன்ஸ் புகார் தெரிவிக்கப் பட்டு விசாரணைக்கு அழைக்கப் படுவீர்கள் .... அதற்கு மேல் உங்கள் இஷ்டம் .... சரி அதெல்லாம் , இருக்கட்டும் நீங்க சம்மந்தப் பட்ட வங்கி ஊழியரா ? உங்கள் நியமன பதவி என்ன ?

வங்கி ஊழியர் : சார் , நாங்கள் வங்கியால் நியமிக்கப் பட்டுள்ள கடன் வசூல் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ....

நான் : அப்பறம் வங்கி என்று சொல்லாதீர்கள் முதலில் எதன் அடிப்படையில் நீங்கள் என்னை தொடர்பு கொண்டுள்ளீர்கள் ? அதற்கான அதிகாரத்தை வங்கி உங்களிடம் , வழங்கியிருந்தால் அதை முதலில் நீங்கள் கூறியிருக்க ...வேண்டும் மொட்டையாக வங்கியிளிருது பேசுவதாக கூறி விட முடியாது .... மேலும் ரிசர்வ் வங்கியின் அறிவுரையின் , படி வழி ,காட்டுதலின் படி விதிகளின் படி உங்கள் வங்கி நடந்துக் கொள்ள வில்லை என்பது எனது .கூற்று ... அது சம்மந்தமாக நான் வங்கி ஓம்பட்ஸ்மேன் (ombudsman ) அவர்களிடம் புகார் அளிக்க ...வுள்ளேன் உங்கள் வங்கியிடம் ..சொல்லுங்கள் . அங்கு என்னை சந்திக்க தயாராக இருக்கும் படி .....

வங்கி ஊழியர் : சார் , ஏற்கனவே எங்கள் தரப்பு நபர் ஒருவர் கடன் வசூலிக்க உங்களைத் தேடி உங்கள் நிறுவனத்திற்கு வந்தப் , பொழுது அவரை நீங்கள் அடித்து துன்புருத்தியுள்ளீர்கள் .....இதெல்லாம் எங்களுக்கும் தெரியும் ....

நான் : , நல்லது அவர் எனது நிறுவனத்திற்கு வந்து என்னிடம் மரியாதையுடன் பேசியிருந்தால் கை களப்பு ஏற்பட்டிருக்காது... மாறாக அவர் என் நிறுவனத்திற்குள் வந்து என்னை மரியாதை , இல்லாமலும் வன்முறையில் ஈடு படும் விதமாகவும் பேசியும் நடந்தும் கொண்டதால் அங்கிருந்த ஊழியர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடு , பட்டார்கள் ... உங்கள் தரப்பு நபர் கை ஓங்கினார் .... பதிலுக்கு அவரும் கவனிக்கப் பட்டார் ... இது சம்மந்தமாக உங்கள் ஊழியர் காவல் நிலையம் சென்றார் .... அங்கு நாங்களும் அழைக்கப் ... பட்டோம் அங்கு உங்கள் ஊழியர் முதலில் வங்கி சார்பில் வந்ததற்கான அடையாள அட்டையே இல்லை என்றார் ... பின்னர் வங்கி ஊழியரே இல்லை என்று ஒப்புக் ...கொண்டார் ஒரு குண்டரைப் போல நடந்துக் கொண்டமைக்கு காவல் துறையினரும் அவரை ....கவனித்தார்கள் . ... என்னிடம் அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்த பின்னர் தான் அங்கிருந்து அவர் விடுவிக்கப் பட்டார் ..... தயவு செய்து எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டு பேசுங்கள் .....

வங்கி ஊழியர் : சார் , அதெல்லாம் சரி வாங்கிய பணத்தை தர வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டாமா ? உங்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா ?

நான் : அது உங்களைப் போன்ற கந்து வட்டி கும்பலிடம் எனக்கு இருக்க வேண்டிய ..அவசியமில்லை .. வாங்கிய கடனை விட மூன்று மடங்கிற்கும் மேல் அதிகமாக வட்டியாக கட்டியாகி விட்டது ... உங்களிடம் இதற்கு மேல் பேச எதுவுமில்லை .... நான் உங்கள் வங்கி மீது ஓம்பட்ஸ்மேன் அவர்களிடம் புகார் அளிக்க .. உள்ளேன் எதுவாக இருந்தாலும் அங்கு பேசிக் ... கொள்ளுங்கள் எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் .... மீண்டும் மீண்டும் தொடர்பு .கொண்டால் ..உங்கள் மீது நான் நியூசன்ஸ் புகார் தெரிவிக்க வேண்டி வரும் .....

உரையாடல் முடிவிற்கு வந்தது

இப்படி அனைத்து கடன் அட்டை ( கிரெடிட் கார்டு ) கடனாளிகளும் இருந்தால் ... வங்கிகள் திருந்திட வாய்ப்பு உண்டு

பி . கு : இது கடன் அட்டை வாங்கி அடுத்த மாதமே ஏமாற்றும் நபர்களுக்கு சொல்லப் பட்ட விஷயமில்லை அதை வாங்கியும் பல மாதங்கள் வட்டி கட்டியும் தொல்லைக்கு உள்ளாகும் நபர்களுக்கு சொல்லப் பட்டது தான் .... உங்களுக்கு என்று உரிமைகள் உண்டு ... தெரிந்துக் கொண்டு செயல்படுங்கள் . எவரும் உங்களை அச்சுறுத்த முடியாது


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !

No comments:

Post a Comment