சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jun 2015

மெக்ரத் பார்த்து வியக்கும் அந்த ஐந்து பேட்ஸ்மேன்கள் யார்?

சென்னை எம்.ஆர்.எப். அகாடமியின் இயக்குனரும் ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளருமான கிளென் மெக்ரத் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த 5 சூப்பர் பேட்ஸ்மென்களை வகைப்படுத்தியுள்ளார்.
மெக்ரத்தின் மதிப்புக்குரிய அந்த பேட்ஸ்மேன்கள் யார்...யார்?

சச்சின் டெண்டுல்கர் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். இளம் வயது முதல் தன் கையில் மட்டையுடன் இருப்பவர். மனரீதியாக மிகவும் பலமானவர். 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்திருப்பது  பெரிய விஷயம். கிரிக்கெட் மீது உண்மையான பற்றும் ஆசையும் கொண்டவர். எந்த ஒருபந்து வீச்சையும் அடித்து நொறுக்குவதில் சச்சின் வல்லவர். பொறுமையும் ஆட்டத்திறனும் இவரை முழுமையான ஒரு பேட்ஸ்மேனாக மாற்றியுள்ளது. 


பிரையன் லாரா அனாயசமாக ஷாட்களை ஆடக் கூடியவர். எனது பந்து வீச்சிலேயே ஆட்டப்போக்கை மாற்ற முடியாத ஒரு பேட்ஸ்மேன் லாரா. சச்சின் டெண்டுல்கர் அடிப்பதற்காக மோசமான பந்துக்காக காத்திருப்பார். ஆனால் லாரா நல்ல பந்துவீச்சையும் மோசமான பந்துவீச்சாக மாற்றும் திறமை கொண்டவர். இவரை வீழ்த்த சில உக்திகளை கையாண்டுள்ளேன். ஃபுல் லென்தில் கொஞ்சம் வைடாக வீசினால் அவர் மட்டையை ஆசையுடன் வீசுவார். இதனால் மட்டை விளிம்பில் பட்டு ஸ்லிப்புக்கு கேட்சாக செல்லும். இந்த முறையில் லாராவை நான் சில சமயங்களில் வீழ்த்தியிருக்கிறேன். லாரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதங்கள், இரட்டை சதங்களை அடித்து பிரமிக்க வைத்துள்ளார். பந்துவீச்சு மீது ஆதிக்கம் செலுத்தும் தன்மையும் லாராவுக்கு உண்டு.இவரை புரிந்து கொள்ளவும் முடியாது. சில சமயங்களில் மொக்கை பந்துக்கு கூட திணறுவார். சில சமயங்களில் அதிக கவனத்துடன் ஆடுவார்.
என்னை பிரமிக்க வைத்த மற்றொரு பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட். கடின உழைப்புடன் நாள் முழுதும் ஆட தயாராக இருப்பவர். இரட்டை சதமடித்தால் கூட இவரிடம் சோர்வை பார்க்க முடியாது. தடுப்பாட்டம் மிக்க இவரை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல. களத்தில் நிலைக்க விட்டுவிட்டால் அப்புறம் ராகுல் டிராவிட்டை நிறுத்த முடியாது. இந்த மனிதரிடம் ஏதாவது பலவீனம் இருக்கிறதா? என்று தேடுவேன். ஆனால்  அது எனக்கு கடைசி வரை புலப்படவேயில்லை. ஓய்வை எட்டும் தருணத்தில் சில சமயங்களில் எனது பந்துகள் ராகுலின் கால்களுக்கிடையே புகுந்து ஸ்டம்பை தாக்கியுள்ளன. ஆனாலும் எனது மதிப்புற்குரிய வீரர்.

ரிக்கி பாண்டிங்குடன் நான் நிறையவே ஆடியுள்ளேன்.  ரிக்கிதான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவிப்பார் என்று கணித்திருந்தேன். ஆனால் சச்சின் யாரும் எட்டிபிடிக்க முடியாத இடத்துக்கு சென்று விட்டார். கேப்டன்ஷிப்பின் பொறுப்புகள் ரிக்கியிடம் இருந்தாலும், ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். ஷார்ட் பிட்ச் பந்தை மிகச்சிறப்பாக கையாள்வார். விரைவாக செயல்படக்கூடிய ரிக்கியிடம் தன்னம்பிக்கையும் ஆதிக்க மனோபாவமும் அதிகம். 

ஸ்டீவ் வாஹ் மிகக் கடினமான ஒரு பேட்ஸ்மேன். சவால் நிறைந்த காரியங்களை செய்யக்கூடியவர். நெருக்கடியான தருணங்களில் கூட அற்புதமாக விளையாடுவார். ஷார்ட் பிட்ச் பந்துகளில் இவர் தடுமாறுவது உண்மையென்றாலும் அதில் அவுட் ஆக கூடியவர் அல்ல. தனது ஆட்டம் அழகாக இருக்க வேண்டுமென்று கருதாமல் விருப்பப்படி ஆடுவார். இக்கட்டான சூழலில் தைரியமான முடிவுகளை எடுக்க கூடியவர்.
இவ்வாறு கிளென் மெக்ரத் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.No comments:

Post a Comment