சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Jun 2015

தோனியிடம் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் வற்றி விட்டதா?

ந்தியா- வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி மிர்பூரில் நடந்தது. இந்த போட்டியில், 4வது ஓவர் வீசிய வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்ஃதாபீர் ரக்மான் அடிக்கடி பிட்சின் குறுக்கே வந்தார். அப்போது பேட் செய்த ரோகித் சர்மா ரக்மானை எச்சரித்தார். அடுத்து 24வது ஓவரை ரக்மான் வீசிய போது, அந்த ஓவரின் 2வது பந்தை தோனி தட்டி விட்டு ரன் எடுக்க ஓடி வந்தார். அப்போதும் ரக்மான் பிட்சின் குறுக்கே வந்து நின்று கொண்டிருந்தார்.

ரக்மான் பிட்சின் குறுக்கே நிற்பதை சற்று முன்னாடியே பார்த்து விட்ட தோனி, அவரை விட்டு விலகி ஓட முயற்சிக்கவில்லை. மாறாக வந்த வேகத்தில் ரெஸ்லிங் வீரர் மோதுவது போல மோதி ரக்மானை தள்ளி விட்டார். இதில் நிலை தடுமாறிய ரக்மான் காயம்பட்டு அதிர்ச்சியில் களத்தை விட்டே வெளியேறி விட்டார். இந்த சூழலில் ரக்மான் மீது தப்பே இருந்தாலும் இது போன்று வேகமாக தோனி மோதியிருக்க வேண்டியதில்லை. 

               
கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி இது போன்று உணர்ச்சிவசப்பட்டு நடந்தது அவருக்குள்ள நெருக்கடியையே காட்டியது. எதிரணி வீரர் மீது தப்பே இருந்தாலும் அதனை நயமாக எடுத்து சொல்ல வேண்டியது கேப்டன் என்பவரின் பொறுப்பு. அதை விடுத்து விட்டு ரக்மான் மீது அவர் ஆவேசம் காட்டியது தோனியிடம் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் குறைந்து விட்டதையே காட்டுகிறது.

பிட்சின் ஊடே வந்து நின்றது ரக்மானின் தவறு என்பதால் இந்த விஷயத்தை நடுவர்கள் பெரிதுபடுத்தவில்லை. அதே வேளையில் வங்கதேச வீரர் ஒருவர் இவ்வாறு நடந்திருந்தார் இந்திய ஊடகங்கள் அமைதி காக்குமா? என்றும் சொல்ல முடியாது. இந்த போட்டியில் தோனி 5 ரன்களை மட்டுமே எடுக்க, களத்தை விட்டு வெளியே சென்ய முஸ்தாஃபீர் ரக்மான் மீண்டும் திரும்பினார். நேற்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

எங்கே ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இல்லையோ அங்கே வெற்றியும் தங்காது என்பது போல இந்திய அணி நேற்று 79 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.



No comments:

Post a Comment