சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Jun 2015

மீண்டும் எமர்ஜென்சி வரலாம்: அத்வானி அச்சம்!

நாட்டில் எமர்ஜென்சி மீண்டும் ஏற்படாது என்று எனக்கு நம்பிக்கை இல்லை என பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அச்சம் தெரிவித்துள்ளது மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்து 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

"தற்போதைய நிலவரப்படி, அரசியல் அமைப்பு மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகள் மிகவும் வலிமையாக இருப்பினும் படைகள் ஜனநாயகத்தை காக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் அவசரநிலை தொடர்பான சூழ்நிலையை தடுக்க போதுமான சட்டரீதியான பாதுகாப்புகள் எதுவும் கிடையாது. நாட்டில் மீண்டும் அவசரநிலை ஏற்படாது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியவில்லை. 

இன்று, அரசியல் தலைமை முதிர்ச்சி அடையவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதனது பலவீனம் காரணமாக, நாட்டில் அவசரநிலை மீண்டும் ஏற்படாது என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது"  என்று அந்த பேட்டியில் அத்வானி மேலும் கூறியுள்ளார். 

நிதி மோசடி புகாரில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ள, காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பா.ஜனதாவிற்கும், மோடி தலைமையிலான அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி புதிய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது மேலும் சிக்கலையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment