சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Jun 2015

27,000 டன் 'மேகி நூடுல்ஸ்’ பாக்கெட்டுகள் எரிக்கப்படுகிறது!!

தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருப்பில் இருக்கும் 27,000 டன் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சிமெண்ட் ஆலை உலைகளில் கொட்டி எரிக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.    

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குப் பிடித்தமான உணவாக விளங்கி வந்த மேகி நூடுல்ஸில், காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளூட்டாமேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் மேகி நூடுல்ஸுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் கடைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருக்கும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை, திரும்ப பெற்று அழிக்க நெஸ்லே இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் கடைகளில் இருந்து இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சேகரித்து, 38 கிடங்குகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அதன்படி 27 ஆயிரத்து 240 டன் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

திரும்ப பெறப்பட்டு வரும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சிமெண்ட் உலைகளில் கொட்டி அழிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது சிமெண்ட்டுக்கான மூலப்பொருட்களை உருவாக்கும் எரிபொருளாக இந்த நூடுல்சை  பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 சிமெண்ட்டு நிறுவனங்களுடன், நெஸ்லே இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளது.

இந்த உலைகளுக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் கர்நாடக மாநிலம் கலாபுராஹி மாவட்ட  சிமெண்ட் உலை ஒன்றும் அடங்கும்.

இந்த உலைக்கு மும்பை மற்றும் அஹமதாபாத் நகரங்களில் இருந்து சுமார் 150 லாரிகளில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் இன்னும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை அழிப்பதற்கான உத்தரவு கிடைத்தவுடன், முதற்கட்டமாக ரூ.30 கோடி மதிப்பிலான நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என ஆலை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்த எரியூட்டும் பணிகள் அனைத்தும் சுற்றுச்சூழல் நலனுக்கு உகந்தவாறு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment