'இப்போ என்னை கடவுள் கூப்ட்டுக்கிட்டாலும் போய்டுவேன். ஆனா நான் செய்ய வேண்டிய வேலைகள் சிலது இருக்கு. அது எல்லாம் என்னோட வேலை கிடையாது. இந்திய நுகர்வோருக்கு, நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தணும். இதுக்காக அரசுக்கு சில ப்ரோப்பசல்ஸ் எழுதியிருக்கேன். அத திங்கட்கிழமை போய் கொடுத்திடு' -இதுதான் என் கணவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள். கடந்த சனிக்கிழமை காலமான தேசிகனின் மனைவி நிர்மலா தேசிகன் தொடர்ந்து பேசுகிறார்.
"மொதல்ல மும்பையில இருந்தோம். திருமணமாகி சென்னை வந்த புதுசுல ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் புதிய அம்பாஸிடர் வாங்க ஆர்டர் கொடுத்து, டெலிவரி வாங்கச் சென்ற பொழுது, கார் கதவின் மேல் அவர் கை வைத்தார். அது பினிசிங் சரியில்லாததால் கூர்மையாக இருந்த பாகம் அவரின் கையை கிழித்து ரத்தம் கொட்ட துவங்கி விட்டது. கோபமாக டீலரிடம் கேட்டால், அவரோ அசால்ட்டாக, 'சார்... நீங்க கொடுத்துவச்சவங்க. உங்களுக்காவது கார் கதவுலதான் பிரச்னை. சில பேருக்கு இன்ஜின்ல பிராப்ளம் ஆகி, வண்டி ஸ்டார்ட் ஆகவேயில்ல தெரியுமா?' என்று கேட்டான். அன்றிலிருந்து நுகர்வோர் சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கியவர், தன் இறுதி மூச்சுவரை அதற்காகவே உழைத்தார்.
'சவுத் மெட்ராஸ்' என்ற நாளிதழை நடத்தினோம். அதே பெயரில் எஸ்.எம்.என். கன்ஸ்யூமர் ப்ரொடொக் ஷன் கவுன்சில் ஆரம்பித்தோம். அந்த நாளிதழில் கன்ஸ்யூமர் நியூஸை ஹைலைட் செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பின்னர் இந்த கவுன்சிலிருந்து ஒவ்வொருவராக விலக, மொத்தமாக மூடுவதற்கு பதிலாக அதனையே 'கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா' என்ற பெயரில் புதுப்பித்து தொடர்ந்தோம்.
இதை நாங்கள் ஆரம்பித்தன் முக்கிய நோக்கமே 'கன்ஸ்யூமர் ப்ரோடெக்ஸன் ஆக்ட்' என்ற சட்டம் வந்தது கன்ஸ்யூமர்களுக்கு தெரிய வேண்டும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய உரிமைகள் என்ன? எப்படி தங்களுக்கான தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்? எதற்கெல்லாம் போராடலாம்? எந்தெந்த வசதிகளை கேட்டு பெற உரிமையிருக்கிறது? என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
நிறைய செமினார், ட்ரைனிங் ப்ரோக்கிராம், வொர்க்ஷாப் போன்றவை எல்லாம் நடத்துவோம். கன்ஸ்யூமர் யாராவது பிரச்னை என்று கம்ப்ளைன்ட் செய்தால் அவர்களுக்கு உதவுவோம். ஆரம்பத்தில் நீதிமன்றத்துக்கும் சென்று கொண்டிருந்தோம். ஆனால், தற்போது செல்வதில்லை. நீதிமன்றத்துக்கு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், வழக்கறிஞர்கLai கான்டாக்ட் செய்து விடுவோம். இல்லையென்றால் நாங்களே எதிர்தரப்பிடம் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம்.
பேங்கிங், இன்ஸூரன்ஸ், ட்ராவல், பப்ளிக் யுட்டிலிட்டீஸ், பர்ச்சேசிங், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது, லோன் தொடர்பாக, வீடு வாங்குவது என்று நிறைய கம்ப்ளைன்ட் வரும். குறிப்பிட்டு சொல்ல முடியாது. விதவிதமான பிரச்னைகள் வரும். கடந்த 14 ஆண்டுகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான கம்ப்ளைன்ட்களை ஹேண்டில் செய்திருக்கிறோம்.
'கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா' வை ஆரம்பித்தது என் கணவர்தான். இதில் 12 பேர் கொண்ட ட்ரஸ்ட்டீஸ் இருக்கிறோம். நான் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி ரிட்டையர்ட் ஆகிவிட்டிருந்தேன். இந்நிலையில், நுகர்வோருக்காக, பெண்களின் முன்னேறத்திற்காக பல்வேறு இதழ்களை ஆரம்பித்து, பப்ளிஸ் செய்த அனுபவம் இருப்பதால் 'கன்ஸ்யூமர் அசோசியேசன் ஆப் இந்தியா' சார்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 'கன்ஸ்யூமர் டைஜஸ்ட்' என்ற மேகஸின் தயாரித்து வெளியிட என்னை அழைத்தார்கள். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் வேலை செய்வேன் என்று கூறிய நான், இன்று ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை பணியாற்றுகிறேன்.
கன்ஸ்யூமர் ஆக்ட் குறித்து விழிப்புணர்வு இன்னும் அனைவருக்கும் ஏற்படவில்லை. எல்லா கன்ஸ்யூமர்களுக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும். அதையெல்லாம் கேட்டு வாங்க திறமை இருக்க வேண்டும். இதற்காக அரசாங்கத்திற்கும் பல்வேறு ஐடியாக்களை கொடுத்தோம்.
இப்போ கன்ஸ்யூமர் ப்ரோடக்சன் ஆக்ட்டினை திருத்தப்போகிறார்கள். அதில் 'கன்ஸ்யூமர் சேப்டி அத்தாரிட்டி' என்று கொண்டு வரப்போகிறார்கள். ஒருவருக்கு ஒரு ப்ராடெக்ட் சேப்டி இல்லை அல்லது ஆபத்தானது என்று தோன்றினால், அந்த ப்ராடெக்ட்டை தடை செய்வதற்கு உரிமையிருக்கிறது. இந்த ஐடியாவினை நாங்கள் 2006ஆம் ஆண்டு கொடுத்தோம். பார்லிமென்டில் விவாதித்த பிறகுதான் இந்த ஆக்ட் நடைமுறைக்கு வரும். மழைக்கால கூட்டத்தொடரில் எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நடைமுறைக்கும் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்'' என்றார்.

No comments:
Post a Comment