சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jun 2015

அமெரிக்க அதிபர் தேர்தல்: அசத்தும் பாபி ஜிண்டால்!

ந்திய வம்சாவளி பாபி ஜிண்டால்தான் அமெரிக்காவின்  ஹாட் டாபிக். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று  எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், அமெரிக்க அரசியல் இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தற்போதைய லூசியானா மாகாண கவர்னராக உள்ள பாபி ஜிண்டால், தனது தேர்தல் பிரச்சாரத்தை நியு ஆர்லியன்ஸ் நகரில் அதிரடியாகத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், " அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாக பேசிக் கொண்டிருக்காமல், செயலில் என் திறமையைக் காட்டுவேன்.

ஆப்ரிக்க-அமெரிக்கர்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள், பணக்கார அமெரிக்கர்கள், ஏழை அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள் என்று யாரும் இல்லை. நாம் அனைவருமே அமெரிக்கர்கள்தான்"  என்று வெளுத்து வாங்கியுள்ளார்.
இது அமெரிக்கர்கள் மத்தியிலும், சமூக வலைதளத்திலும் 'வைரல்' ஆகியுள்ளதால், அவர் மீது உலகின் கவனம் குவிந்துள்ளது.   

யார் இந்த பாபி ஜிண்டால்?

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் மிஸிசிப்பி நதிக்கரையில், தலைநகர் பாடன் ரூஜ் -ல் 1971 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  10 ஆம் தேதி பிறந்தார். இவரின் பெற்றோர், இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் தற்போதைய ஆளுனர்களில் 44 வயதாகும் பாபி ஜிண்டால்தான் வயதில் மிக இளையவர். அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி என்ற புகழுக்குச் சொந்தக்காரரான இவர், வளர்ப்பிலும் மனோ நிலையிலும் முழுமையான அமெரிக்க குடிமகனாக வாழ்ந்து வருகிறார். 

புகழ் பெற்ற அமெரிக்க பிரௌன் பல்கலைக் கழகத்தில், உயிரியியல் பாடத்தில் இளங்கலை பட்டம்பெற்ற ஜிண்டால், ஆக்ஸ்போர்டு பல்கலையின் புதுக்கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்று, அரசியலில் நுழைந்து அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்தார்.

முன்னதாக ஜிண்டால், உலகப் புகழ் பெற்ற பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி  நிறுவனத்தில் பணியைத்  தொடங்கினார்.

அமெரிக்காவை அதிகம் நேசிக்கும் ஜிண்டால், 1993 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டார். மக்களும் அவரின் பேச்சு மற்றும் செயல் திறனில் கவர்ந்திழுக்கப்பட்டு, தங்களின் ஆதரவை வழங்கினார்கள். அதனால் கடந்த 2003 ஆம் ஆண்டு லூசியான மாகாணத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

10 ஆண்டுகளில் ஜிண்டால், அமெரிக்காவில் பெரிய அரசியல் பாய்ச்சலை நடத்தி காட்டியுள்ளார்.விறுவிறுவென வளர்ந்த அவர், தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் ஏற்கெனவே 2 தடவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லூசியானாவின் ஆளுநராக  2 ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் பணியாற்றி வருகிறார் என்பது ஜிண்டாலின் அரசியல் பலமாக இருக்கிறது. மேலும் , குடியரசு கட்சியின் ஆளுநர்கள்  சங்கத்தில்  துணைத்தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 

அதிபர் தேர்தலில் போட்டி 


உலகின் சக்தி வாய்ந்த அதிபர் பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு தனது கட்சியின் முடிவினை எதிர்பார்க்காமல் போட்டியிடுவதாக ஜிண்டால் கூறியிருக்கிறார்.இது குறித்து அவர் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில்,   " புகழ்பெற்ற அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். கட்சியின் அனுமதியின்றி இந்த முடிவை எடுத்துள்ளேன். அதிபர் தேர்தலில் போட்டியிடும் மற்றவர்களைவிட எனது அணுகு முறை மாறுபட்டதாக இருக்கும். அமெரிக்கா உலக அரங்கில் புகழ் பெற்று விளங்குவதற்கு, மாறுபட்ட சிந்தனை உடைய மக்கள்தான் காரணம். அதிகம் பேசும் மக்கள் அல்ல.


அதிகம் பேசும் ஏராளமானவர்கள் அதிபர் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாரும் எங்களுக்கு நிகராக முடியாது. அவர்களது சிறந்த பேச்சு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவியிருந்தால் இந்நேரம் நாம் பிரச்னையிலிருந்து மீண்டிருப்போம். இப்போது வெள்ளை மாளிகையில் இருப்பவர் சிறந்த பேச்சாளர். நம் நாட்டில் ஏராளமான பேச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், திறமையாக செயல்படக்கூடியவர்தான் இப்போதைக்கு தேவை" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

பாபி ஜிண்டாலின் இந்த முழக்கம் அமெரிக்கா,  இந்தியா மட்டுமல்லாமல் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜிண்டாலின் முழக்கம் அதிபர் பதவியை பெற்றுத் தருமா என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிடுவார் என்று கூறப்பட்டுவரும் சூழலில், ஜிண்டால்  போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதே அதிபர் ஆசையில்,  மேலும் 11 பேர் களத்தில் குதிக்க விரும்புவதால், கட்சிக்குள் நடைபெறும் அதிபர் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுபவர்தான் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட முடியும் என்ற நிலை இருப்பதால், குடியரசுக் கட்சி அதிபர் தேர்தலுக்கு தயாராகி இருக்கிறது. 

No comments:

Post a Comment