சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jun 2015

'கலைஞனை விருப்பப்படி நடிக்க விடுங்கள்...!'

'கமலுக்கு ஓர் கடிதம்!' என்ற தலைப்பில் கமல்ஹாசன் நடித்த சமீபத்திய திரைப்படங்களை விமர்சித்தும், கமலிடம் தன்னைப் போன்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும் வாசகர் பக்கத்தில் தெனாலி என்ற வாசகர் எழுதியிருந்தார். அவரின் கடிதத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கமல்ஹாசன் ரசிகர்களிடம் இருந்து ஏராளமான கருத்துக்கள்.
அவற்றில் இருந்து ஒருசில வாசகர்களின் பார்வைக்கு... 

seetharaman from Noida:  ரொம்ப நாசூக்கா சொல்றாரு... "கமல் சார், நீங்க நடிக்கற வேலை மட்டும் பாருங்க. கதை வசனம் டைரக்ஷனுக்கு  எல்லாம் திறமையான பலர் இருக்காங்க. அவங்ககிட்ட விட்டுடுங்க" அப்படீன்னு.

THAMILAN : கமல் தலையிடாமல் இருந்தாலே அந்தப் படங்கள் நன்றாக இருக்கும். 

Periyar Kumar 
:
உத்தமவில்லனில் மட்டும் கிரேசி மோகன் இருந்திருந்தால், படத்தின் வெற்றி வேறு மாதிரி இருந்திருக்கும். அதேபோல உங்களின் வெற்றிபெற்ற பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாவின் இசை பெரும்பங்கு பெற்றது என்றால், அது மிகை அல்ல. நாங்கள் இளையராஜாவின் கூட்டணியையும் சேர்த்து எதிர்பாக்கிறோம்.

Ananthan : மைக்கேல் மதன காம ராஜன், இந்தியன் போன்ற படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாதவை. part 2 தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும். வசூலும் நன்றாகவே இருக்கும்.

na : கமல் சாரின் படங்கள் பார்க்க தனி அறிவு வேண்டும்.

CV : மிகவும் முதிர்ச்சியில்லா கடிதம். கமல் புறந்தள்ளுவார். உத்தம வில்லன் படத்தில் சில சுவராஸ்யமான காமெடிகள் உண்டு. வாசகர்களை குழப்ப வேண்டாம். கிரேசி மோகன் அவர்களின் காமெடி நல்ல கூட்டணியாக இருந்தாலும், கமல் எனப்படும் கலைஞனுக்குள் ஒரு காமெடி இருக்கிறது. பொழைச்சுப்போங்க!

Sugar : உங்களுக்கு "உத்தம வில்லன்" பிடிக்கலை. காமெடி படம் ஒண்ணு பண்ணுங்கனு ஒரு லைன்ல சொல்லுங்க ப்ரதர். எதுக்கு வழவழ கொழகொழ!

Siva : கமல் ஏற்கெனவே ஒட்டு மீசையோடு பல படங்களில் நடித்திருக்கிறார் (வெற்றிவிழா). கமல் பல ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார். 'தெனாலி' ஒரு ஆங்கில படத்தின் ரீமேக். கமலுக்கு ஈகோ ரொம்ப அதிகம். தன்னைவிட திறமையானவர்களுடன் வொர்க் பண்ண மாட்டார். இந்த உலகத்தில் கே.எஸ்.ரவிக்குமார் ஒருவர்தான் டைரக்டர் என்பதுபோல் வேறு எந்த ஒரு திறமையான டைரக்டருடனும் நடிக்க மாட்டார். இவருக்கு, தான் சொல்வதைக் கேட்கும் டைரக்டர்தான் வேண்டும். அதனால்தான் இவருடைய பல படங்கள் பார்க்கும்படியாக இல்லை.

Arul solai : நீங்க நினைக்கற மாதிரி படம் எடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். கமல் நினைத்த மாதிரி எடுத்தப் படத்தை பார்க்கத்தான் நமக்கு ரசனை போதவில்லை. கமல் என்றுமே நமது பொக்கிஷம்.

பெருங்கீரன் : கமல் ஒரு காவியம். அதை உணர்வதற்கு ஒரு சில காலம் பிடிக்கும். அவரின் பயணத்தின் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும். உத்தம வில்லன் சிறந்த படைப்பு. நடுநிலை மனம் கொண்டு பார்த்தால் உண்மை புரியும். கமலின் அருமை தெரியும்.

Sen : கமல்ஹாசன் வசனம் எழுதக் கூடாதுன்னு சொல்லலை. எழுதாம இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்க?

ansar : மிக நல்ல பதிவு. உங்களின் திறமை எங்களுக்குத் தெரியும். இனி வரும் காலங்களில் கமலின் பரிணாமத்தை காண விரும்புகிறோம்

பெருங்கீரன் : 
நண்பரின் ஆதங்கம் எனக்கும் உண்டு. கமல் என்றால் புதிய விஷயம். அவரை உணர்ந்தவருக்கு அது புரியும். உத்தம வில்லன் நல்ல படம் இல்லை என சொல்வது தவறு. எல்லோருக்கும் ஒன்று கூறிகொள்கிறேன். ஒரு படம் பார்த்து சரியில்லை என முடிவுசெய்த பிறகு, அதில் சில காட்சிகள் நம் மனதில் அசைவு போட்டுக்கொண்டிருந்தால் அதுவே சிறந்த காவியம். நம் மனம் விரும்பியதை தரவில்லை என்பது ரசிகனின் ஆதங்கம். ஆனால் அதற்கு மேலாக நிறைய விஷயங்களை கமல் தந்திருக்கார். கமல் வாழும் காவியம்.

venkit : இனியாவது கமல் அமிதாப்பைப் போல வயதிற்கு ஏற்ற கதையை எடுத்துக்கொண்டால் நன்று.

Hindulal : எனக்கு கேன்சர் பத்தி எல்லாம் கவலை இல்லை. நடிப்பிலாவது ராமன் வேஷம் போடக் கூடாதா?

Linga Raj : கமல் சார் மக்களுக்காக (ரசிகர்கள்) படம் எடுத்தால் பெரும்பாலும் வெற்றிதான். அவருக்காக எடுத்தால் அது அவருக்கு மட்டுமே வெற்றி ஆகிறது.

SooSaa: கமல் இப்பொழுது வெறும் வசூல் ராஜாதான்.. உண்மையிலேயே நல்ல கதை தெரியவில்லையா. இல்லை, தெரியாத மாதிரி நடிக்கிறாரா? த்ரிஷ்யம் உண்மையிலேயே நான் ஸ்ரீதேவியுடன் இணைந்து எதிர்பார்த்தேன். அப்படி இருந்தாலாவது ஒரு காரணம் சொல்லலாம் இந்தப் படத்தில் நடிப்பதற்கு.

குணசீலன் சீனிவாசன் : என்னைப் பொறுத்த வரை கமலின் நடிப்பை மட்டும்தான் பார்க்கிறேன். அவர் உண்மையை உண்மையாக சொல்கிறார். மற்றபடி படம் பார்த்து வரும் சிலர் சொல்லும் வார்த்தைகளை வைத்து அவர் மீது வருத்தம் அடைய வேண்டாம். நல்ல நடிகர், நல்ல மனிதன். கேன்சர் பற்றி நமக்கு விழிப்பு வேண்டும். அது மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடும் என்று மக்கள் உணர வேண்டும் புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் அவர் அவ்வாறு நடிக்கிறார். நல்ல செய்தியை நீங்கள் தவறாக எடுக்க வேண்டாம்

indhu
 : அழகான கடிதம். கமலின் ரசிகனாய் மட்டும் அல்லாமல், தமிழ் சினிமாவின் ரசிகனையும் காண முடிந்தது. அன்பே சிவம் போல அற்புத படைப்பைத் தந்த ஒரு படைப்பாளியின் கையில் இருந்து, மன்மத அன்பு எதிர்பார்க்க முடியாத ஒன்று. கமல் ஹாஸ்யம் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு ரசிகை நான். கமல்- கிரேசி மோகன் கூட்டணி மீண்டும் எதிர்பார்க்கலாமா?

Ramkumar : ஒரு உண்மையான ரசிகனின் ஆதங்கம். இன்றைய இளைய தலைமுறையும் ரசிக்கும் வகையில், சமூகக் கருத்துகளைப் புரியும் வகையில் கமல் அவர்கள் சொல்ல முற்பட வேண்டும்.

ashok : உன்னத கலையின் வேறுபட்ட பரிணாமங்களுக்கு உங்கள் பங்களிப்பு அவசியம்தான். நம்ம பயபுள்ளைகளுக்கு புடிச்ச படைப்புகளையும் கொடுக்கலாமே?

Kumaran : உத்தம வில்லன் நன்றாக இல்லை, இவ்வளவு மோசமான ஒரு கமல் படமா... என்ற நினைப்பில் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில் இது படமல்ல... சுயசரிதை. தன் வாழ்க்கையை படம் போட்டு காட்டியுள்ளார். திருஷ்யம் அவரது வயதுக்கேற்ற படம், அனைவருக்கும் சென்றடைய வேண்டிய கதை. உன்னைப்போல் ஒருவனை கூட எப்படி குறை கூற முடிந்தது? தீவிரவாதியைப் பற்றி பேச விஜயகாந்த் மட்டுமே வேண்டுமோ?

thiru : கலைஞனுக்கு என்று ஒரு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரமான கலைஞனிடத்தில்தான் புதிய கலைகள் பிறக்கும். உங்களின் எதிர்பார்ப்பு என்கிற கூண்டில் ஒரு கலைஞனை அடைத்து இதைத்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். வசூலைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை கலைஞனுக்கு இருக்கிறது. ரசிகர் மன்றம் வைத்துக்கொண்டு தன் கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்றிக்கொள்ளாத கலைஞன் கமல். கமலைப் பொறுத்தவரையில் தன் மனசாட்சிக்காக ஒரு படத்தைப் படித்தால், தன் லாப நட்டங்களை ஈடுகட்ட 3 மசாலா கலந்த படங்களில் நடித்துத் தன்னை நிலை நிறுத்திக்கொள்வது வழக்கம். 

கலைஞனை தன் விருப்பப்படி சிந்திக்க, வாழ, நடிக்க விடுங்கள். படம் பாருங்கள் விமர்சனம் செய்யுங்கள். காசு கொடுத்துப் பார்ப்பவனின் சுதந்திரம் அது. அதை விட்டு, இதைத்தான் நீ செய்ய வேண்டும் என்று தயவுசெய்து எப்போதும் எந்தக் கலைஞனையும் நிர்ப்பந்திக்காதீர்கள்.

sakthi : 
நானும் உங்களைப் போல ஒரு ரசிகன். ஆனால் நீங்கள் பார்க்கும் கோணம் வேறு, நான் பார்க்கும் கோணம் வேறு. கமலஹாசன் எழுதப்படாத ஒரு புத்தகம். இதில் நீங்கள் காமெடி என்ற ஒரு பிரிவை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால்,  சூரியனை ஒரு டிபன் பாக்ஸ் உள்ளே அடைக்க முயல்வது போல் இருக்கிறது. சமீப காலத்தில் இவர் எடுக்கும், நடிக்கும் எல்லா படத்திலும் ஒரு கரு இருப்பதை கவனியுங்கள். இவர் எடுக்கும் எல்லா படமும், இந்த கலியுகத்தின் எதிரொலி. இதை உணர முயற்சி செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, எனக்கு காமெடி படம்தான் வேண்டும் என்று காமெடி செய்யாதீர்கள். இவரைப் பற்றி இதுபோன்ற கருத்துகளை யோசிப்பதை விடுத்து, அவர் எடுக்கும் படத்தை ரசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். உண்மையான ரசிகன், உங்களைப்போல யோசிக்க மாட்டான். ஒரு ரசிகனுக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும். 


கடைசியாக ஒன்று... உங்களால் முடிந்தால் அவருக்கு ஒரு 1000 கோடி ரூபாய் குடுங்கள். உங்கள் பெயரை தயாரிப்பாளர் என்று படத்தின் முன்பு போடுவார். அவரின் ஒரு படம், இல்லை... இந்திய திரை உலகம் பார்க்காத ஒரு காவியம் வெளிவரும் . இந்தக் கருத்து உங்களைக் காயப்படுத்த இல்லை. ஒரு ரசிகனின் கோபம். 

ram from Bangalore : ஷக்தி... நீங்கள் கமல்ஹாசனின் ரசிகனாக இருக்க லாம். நான் வெறியன் - ஒரு காலத்தில். இப்பொழுது அவருடைய படங் கள் பெரும்பாலும் புரிவதில்லை என்பதே உண்மை. உண்மையான ரசிகன் யோசிக்க மாட்டான். நீங்கள் கூறியதுபோல் இருந்தால், ரசிக்கும்படியான படங்களை அவன் ஒருபோதும் குறை கூற மாட்டான். 1000 கோடி கொடுத் தால்தான் நான் எதிர்பார்பதை போல் படம் வரும் என்றால், அதற்கு நான் கமல்ஹாசனை எதிர்பார்க்க வேண்டாமே. 

நான் கொடுக்கும் 120 ரூபாயில் அவரால் தரமான ரசிக்கும்படியான கதை யைக் கொடுக்க முடியவில்லை என்றால், அவர் என்ன நடிகன்? நீங்கள் உங்கள் மனசாட்சியில் கை வைத்து கூறவும்... உத்தம வில்லன் கமல ஹாசனுக்கு ஏற்புடைய படமா? 

sujatha kirupanandan : நீங்கள் ஒரே மாதிரி சுவை கமலிடம் எதிர்பார்த்தால் மிகவும் தவறு. அவர் நடிப்பை வாரி கொடுத்து இருக்கிறார் - உத்தம வில்லனில்! அது முழுமையான கமல் ரசிகர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்று. சிவாஜிக்கு அடுத்து கமல் மட்டுமே நடிக்கிறார்.



No comments:

Post a Comment