சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jun 2015

'பத்திரிகை, வாட்ஸ் அப்பெல்லாம் பார்க்காதீங்க மக்களே...!'- தொண்டர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் விட வலியுறுத்தி திருவாரூர் தெற்கு வீதியில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தன்னைப்பற்றி வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய விஜயகாந்த், வலைதளங்களை யாரும் பார்க்கவேண்டாம் என தொண்டர்களுக்கு தான் அறிவுறுத்தியிருப் பதாக கூறினார்.

சோழ நாடு சோறுடைத்து என்பார்கள், மாறிவரும் தட்ப வெப்பநிலையால்  பொய்த்து வரும் மழை காரண மாக குறைந்து வரும் ஆர்வம் காரணமாக விவசாயம் சரியான விளைச்சலை தராமல், உற்பத்தி அளவு குறைந்து கொண்டே செல்கிறது. அதுவும் காவிரியில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சராசரி விவ சாயிகளின் கனவு வானத்தைப் போல பொய்த்துப் போய் விடுகிறது. குறுவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் வருடா வருடம் ஜூன் மாதத்தில் திறக்கப்படும். 

ஆனால், சில ஆண்டுகளாக சரியான நேரத்தில் திறக்கப்படவில்லை  இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தம் கோரிக்கைகளை வலியறுத்தி திருவாரூர் மாவட்ட சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.

இதுவரை காவிரி தண்ணீரை பெற்றுத் தராத தமிழக மாநில அரசை கண்டித்து கோஷம் போட்டனர். உரிமை யோடு கெட்டுப் பெற வேண்டிய தமிழக அரசாங்கம் கேட்க மறுக்கிறது. 2௦12 -13 ம் நிதி ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற வட்டியில்லா வேளாண் கடனுக்கு தற்போது 13 சதவீதம் வட்டி மற்றும் அபராத வட்டி கணக்கிடப்பட்டு விவசாயிகளிடம் கெடுபிடி வசூல் பணியில் ஈடுவடுவதும், கட்ட முடியாத விவசாயிகளை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு முதல் கடன் வழங்க மறுத்து வருவதும் வன்மையாக கண்டிக்கத் தக்கது என விவசாயிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், “ மக்கள் மனதை கொள்ளை கொள்ளனும், மக்கள் பணத்தை அல்ல. அந்தம்மாவுக்கு பால் குடம் எடுக்கிறாங்க, அபிஷேகம் செய்கிறாங்க, அங்கப் பிரதட்சணம் பண்ணுகிறாங்க. ஆனால் விவசாயிக்கு ஒன்றும் செய்வது இல்லை. தமிழகத்தில் சொல்லப்படாத மிசா நடைமுறையில் இருக்கிறது. பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி நடக்கப் போவுதுன்னு சொல்றாங்க, ஆனால், இங்கே ஊழல் புரட்சிதான் நடக்கிறது. ஏரி, குளம், ஆறு, போல மேட்டூர் அணையும் தூர் வாரப்பட வேண்டும். தேசிய நதி நீர் இணைப்பு முக்கியத்துவம் இப்போது புரிய வேண்டும் அரசுகளுக்கு என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “ இந்த பத்திரிக்கை, வாட்ஸ் ஆப், எல்லாம் நான் பாக்குறதும் இல்லை, என் தொண் டர்களிடமும் பார்க்கச் சொல்றது இல்லை. ஏன்னா, இதுல்லாம் ஒரு நாள் இருக்கும், ஒரு வாரம் இருக்கும். அதுக்கு அப்புறம் எல்லாம் மறைஞ்சுடும்.” எனச் சொல்லி இறுதியில் காய்ந்து போய் இருக்கிற நெற்கதிர் களை கையில் எடுத்து எல்லாருக்கும் காண்பித்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு விவசாயிகள் அதன் தலை வர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில்  நேரில் ஆதரவு தெரிவித்தனர். 

பன்னிரண்டு மணி உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சித் தொண்டர் கூட்டம் திரண்டிருந்தது. விஜயகாந்தின் உரையும் முடிந்த பின்பு கலைந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டத்தையும் வாகன நெரி சலையும் போக்குவரத்தையும் காவல் துறை ஈரத் தொப்பியுடன், ஒழுங்குபடுத்தியது.

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காத காரணத்தால் காவிரி டெல்டா விவசாயிகள் தவித்து வரும் நிலையில் எந்த அரசியல் கட்சியும், இது குறித்து அதீத ஆர்வம் காட்டாத நிலையில் தேமுதிக இதில் முழு மூச்சோடு இறங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் ஆதரவை அதிகரித்துள்ளது.



No comments:

Post a Comment