சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jun 2015

ஆட்சி நிர்வாகம் பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை: குற்றஞ்சாட்டும் விஜயகாந்த்!

ஆட்சி நிர்வாகம் பற்றி முதல்வர் ஜெயலலிதா சிறிதும் கவலைப்படவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார்.


இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அ.தி.மு.க. அரசு 2011ல் ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலையை இரு மடங்காக உயர்த்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. அந்த உயர்த்தப்பட்ட விலையை கொடுத்து ஆவின் நிறுவனத்தில் வாங்கப்படும் பால், ஆவின் நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் கெட்டுப்போவதும், அதை வாங்கிய மக்கள் கீழே கொட்டுவதும் என்ற பரிதாபமான நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.


இதை சீர்படுத்தி செம்மையாக்க வேண்டிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, ஆட்சி நிர்வாகத்தை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பால் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பாரா? என பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் பல திட்டங்களும், திறப்பு விழாக்களும் நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின் செயல்படுத்தப்பட்டன. அது குறித்து கேட்டால் அ.தி.மு.க.வில் பலரும் ஜெயலலிதா வந்த பிறகு செயல்படுத்துவதிலே என்ன தவறு, அதற்காக மக்கள் சுமார் 10 மாதம் காத்திருப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என, மக்களை துச்சமாக நினைத்து வியாக்கியானம் பேசுகின்றனர். ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதற்காக, அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத தமிழக மக்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?" என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment