சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Jun 2015

நடிகர் சங்க விவகாரத்தின் பின்னணியில் அரசியல் சதி : சரத்குமார் குற்றச்சாட்டு

நடிகர் சங்க தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னால் அரசியல் சதி இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம், போராட்டம், எதிர்ப்பு என்று அல்லல்பட்டுக்கொண்டிருந்த மதுரை ஆதீனம் அ.தி.மு.க. பிரச்சாரகராக மாறியபின்பு எல்லாமே மாறிவிட்டது. அதிமுக அமைச்சர்கள் முதல் வி.ஐ.பி.க்கள் வரை அவரிடம் ஆசி வாங்க வரிசை கட்டி நிற்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் சர்ச்சைக்குரிய நடிகர் சங்க நிர்வாகிகளும் நிற்க ஆரம்பித்து விட்டார்கள். 

சில நாட்களுக்கு முன் நடிகர் ராதாரவி, நடிகர் சங்க தேர்தலில் மதுரை ஆதீனத்திடம் ஆதரவு கேட்டு வந்தார். அவரைத்தொடர்ந்து இன்று சரத்குமார் வந்தார். அவருக்கு ஆசி வழங்கிய ஆதீனம், மீண்டும் நடிகர் சங்கத் தலைவராக சரத் வருவார் என்று கூறி தனக்கே உரிய பாணியில் கைகளை தூக்கி ஆசி வழங்கினார். 

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சரத்குமார்,  "நடிகர் சங்க விவகாரங்களில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் திருமண மண்டபம் கட்ட சொன்னார்கள். அதைவிட வருமானம் தரக் கூடிய வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் போட்டோம். அப்போதெல்லாம் குற்றம் சொல்லாதவர்கள், எங்களை சந்தித்து எந்த கருத்தும் சொல்லாதவர்கள், தற்போது தேவையில்லாமல் அவதூறு செய்கிறார்கள். 

6௦ கோடி கைமாறிவிட்டது என்கிறார்கள். செயற்குழுவில் தீர்மானம் போட்டு அதை பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற்றபின்புதான் நடிகர் சங்க இடத்தில் வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் போட்டோம். 


அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு இருக்கிறதென்று யாரவது என்னை வந்து சந்தித்தார்களா? அல்லது போனில் தொடர்புகொண்டார்களா? என் வீட்டுக்கு வந்தார்களா? அப்படி வருகிறவர்களை நான் வரக்கூடாதென்று சொன்னேனா. ஆனால், வணிக வளாகம் கட்டும் திட்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்கினார்கள். இது எப்படி சரியாகும்? 

எதிர்காலத்தில் நலிந்த நிலையில் வாழும் நாடக, திரை கலைஞர்களின் எதிர்காலத்தை முன்னிட்டுதான் இந்த ஒப்பந்தமே போட்டோம். இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏதோ முறைகேடு நடந்துவிட் டதாக பரப்புகிறார்கள். பணம் கைமாறிவிட்டதாக சொல்கிறார்கள். அந்த காம்ப்ளக்ஸ் கட்டும் செலவே 65 கோடிதான். அப்புறம் எப்படி 6௦ கோடி கைமாறும்.? 

அந்தப்பகுதியில் வணிக வளாகம் கட்ட தடை இருப்பதாக சொல்வது தவறு. அந்தப்பகுதியில் பதினைந்து வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனால், இதில் தடை வராது. வணிக வளாகம் கட்டுவதற்கென சில விதிகள் இருக்கின்றன. குற்றம்சாட்டுபவர்களை சகோதரர்களாகவே கருதுகிறேன். சங்கத்தில் என்ன முறைகேடு நடந்தது என்பதை புகார் கூறுபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்.
நடிகர் சங்கத் தேர்தலை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாக தெரிகிறது. அரசியல் சதி இருப்பதை கண்டு கவலைப்பட வில்லை. அது எந்த கட்சி என்பதை சொல்ல மாட்டேன். நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்" என்றார். 
தொடர்ந்து சரத்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளித்த பதில்களும்...

மன்சூர் அலிகான் உங்கள் மீது அதிருப்தி கருத்து தெரிவித்துள்ளாரே?

“மன்சூர் அலிகான் புகாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.’’ 


 ‘’தீர்மானம் போடுவதற்கு முன்பே வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டதாக சொல்லப்படுகிறதே?’
 
‘’ஆதாரமில்லாமல் பேசக் கூடாது. ஒப்பந்தத்தை படித்து பாருங்கள் தெரியும்.’’
 
‘’வாக்காளர் பட்டியலை தர மறுக்கிறீர்கள், பழைய வாக்களர்களின் உறுப்பினர் தகுதியை புதுப்பிக்க மறுக்கிறீர்கள் என்று குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?’’ 


‘’அதெல்லாம் உணமையல்ல. நடிகர் சங்க அலுவலகத்துக்கு போனால் அங்கு கிடைக்கும். அதற்காக யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது தெரியாமல் எல்லோருக்கும் கொடுக்க முடியாது.’’ 


‘’காமராஜர் மணி மண்டபம், சிவாஜி மணிமண்டபம், இப்போ நடிகர் சங்க கட்டடம் இப்படி கட்டடம் கட்டுவதேன்றாலே உங்களுக்கு சிக்கல் வருகிறதே?’’


‘’காமராஜர் மணிமண்டபம் என் சொந்த செலவில் கட்டுவது. அதில் முப்பது சதவீத வேலை முடிந்து விட்டது. அதற்கு யாரிடமும் டொனேஷன் கேட்டதில்லை. சிவாஜி மணி மண்டபத்துக்கு சில பிரச்னைகள் இருந்தன. அதை பிரபு குடும்பத்தில் பேசி சரி செய்தாயிற்று. நடிகர் சங்க கட்டடமும் விரைவில் எழும்பும். இதில் எனக்கு எந்த சிக்கலும் கிடையாது.’’
‘’இப்படியே இரண்டு எம்.எல்.ஏ.க்களோடு அதிமுக ஆதரவு கட்சியாகவே நடத்த திட்டமா? ச.ம.க.வின்  எதிர்காலம்தான் என்ன?’’
 
‘’வேண்டாம்... அதைப்பற்றி இப்போது சொல்ல விரும்பவில்லை. ‘’ 

‘’நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அணி வெற்றி பெறும்?’’

‘’எங்கள் அணிதான் வெற்றிபெறும் என்று நம்புகிறேன். எங்களது தலைமையில் நடிகர் சங்கம் கட்டுக்கோப்புடன் தொடர்ந்து செயல்படும்.’’
 
‘’குமரிமுத்துவை நீக்கியதற்கு நீதிமன்றம் தடை போட்டுள்ளதே’’  

‘’சங்கத்தின் புகழுக்கு குமரிமுத்து களங்கம் விளைவித்தார். அதனால்தான் நடிகர் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.’’
இத்தனை சர்ச்சைக்கு நடுவில் போட்டியிடுவது ஏன்?
 

‘’எனக்கு பதவி ஆசை இல்லை, நடிகர் சங்கத்துக்கு வருமானத்தை தேடித்தரும் கட்டடத்தை கட்டித்தரும் வரை பொறுப்பில் இருக்கவேண்டுமென எல்லோரும் கேட்டுக்கொண்டார்கள் அதனால்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

- பேட்டி முடியும் வரை மதுரை ஆதினம் அங்கேயே அமர்ந்து சரத்குமாரின் பேட்டியை பல்வேறு முகபாவங்களுடன் கவனித்தபடி இருந்தார். புறப்படும் முன் அவரிடம் ஆசி வாங்கிய சரத், மதுரையில் வசிக்கும் நாடக நடிகர்களிடம் ஆதரவு கேட்க கிளம்பினார். 

இதனிடையே ஆன்மீக மடமான மதுரை ஆதினத்தில் இப்படி சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பான பேட்டிகளை எப்படி ஆதினம் அனுமதிக்கிறார்? என மடத்தின் ஆதரவாளர்களிடையே எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.
பழமையான சிறப்புமிக்க ஒரு ஆன்மீக மடத்தின் புகழை சிதைக்கும் வகையில் ஆதினம் தன் விருப்பம்போல் செயல்படுவதை அவர்கள் கண்டித்துள்ளனர்.



No comments:

Post a Comment