சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்று அவர் கூறினார்.
பிரசாரத்திற்காக தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து இன்று மாலை புறப்பட்ட ஜெயலலிதா, காசிமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, பிரசாரத்தை துவங்கினார். வழிநெடுக நின்ற பொதுமக்கள் மற்றும் அதிமுகவினரை பார்த்து இரட்டை விரலை காண்பித்தும், கையை ஆட்டியபடியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் வருகையையொட்டி, ஆர்கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் பரப்புரையை நிகழ்த்துவதற்காக சென்ற ஜெயலலிதாவை அதிமுக மகளிர் அணியினர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் திரளாக நின்று வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கு காரில் அமர்ந்தபடியே தனது பரப்புரையை தொடங்கிய ஜெயலலிதா, "இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு; தோற்கடிப்பது என்பது வேறு. என்னை பொறுத்த வரை மகத்தான வெற்றி பெறுவதே எனது லட்சியம். இதனால்தான் அதிமுகவை வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை" என்று கூறினார்.
அரசியல் சதியால் இடையில் சில காலம் தம்மால் முதல்வர் பதவியில் இருக்க முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"எனக்கு எல்லாமே நீங்கள்தான். மின்வெட்டே இல்லாத அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எதிர்த்து போட்டியிடுவதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது அதிமுக அரசை குறைகூறி வருகின்றன" என ஜெயலலிதா மேலும் கூறினார்.
No comments:
Post a Comment