சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jun 2015

ஆபத்தான அழகி!

லகின் எந்த சினிமாவையும்விட, ரியாலிட்டி ஷோவையும்விட மெக்ஸிக்கோவில் அடித்துப் பட்டையைக் கிளப்புகிறது ஒரு நிஜ சம்பவம்! கிளாடியா ஒஹோவா ஃபெலிக்ஸ்... மெக்ஸிக்கோ நாட்டுப் பெண். 'படையப்பா’ நீலாம்பரியின் வாழ்க்கையில்  'பாட்ஷா’வின் டான் ஃப்ளாஷ்பேக் சேர்த்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு டெரர்!
கூலிப் படையினரைக் கொண்டு கொடும் குற்றங்களைச் செய்வதில், உலகிலேயே முதல் இடம் வகிக்கும் 'லாஸ் ஆந்த்ராக்ஸ்’ என்ற கும்பலின் தலைவி கிளாடியா. அசல் தலைவனான  எல் சீனோ, 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் போலீஸால் கைது செய்யப்பட, தலைமைப் பொறுப்பைக் கையில் எடுத்துக்கொண்டார் கிளாடியா. 'உலகின் செம  செக்ஸி கிரிமினல்’ என மீடியா கிளாடியாவை நெருக்கமாகப் பின்தொடர, அடுத்தடுத்து அரங்கேறின சில சம்பவங்கள்...

சம்பவம் : 1
கிளாடியாவிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், அடிக்கடி தன்னை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது. கையில் பிங்க் நிற ஏ.கே-47 ரகத் துப்பாக்கியுடன் ஒரு படம், 'தன் மகன்’ என கிளாடியா காட்டும் சிறுவன் மேல் கரன்சி கட்டுகள் சிதறிக்கிடக்கும் படம், கையில் எறிகுண்டுடன் ஒரு படம் போஸ்ட் செய்து, 'வாட்ச் யுவர் ஸ்டெப் ஃப்ரெண்ட்!’ என்ற எச்சரிக்கை ஸ்டேட்டஸ்... என விதவித விபரீதப் படங்களைப் பதிந்தார் கிளாடியா.  
சம்பவம் : 2
கிளாடியா, ஒரு சாயலில் அமெரிக்க டி.வி நடிகை கிம் கர்தாஷியன்போல இருப்பதாக செய்தி கிளம்ப, இருவரின் செக்ஸி படங்களையும் இணைத்து, செம பரபரப்பு கிளப்புகிறது ஆன்லைன் மீடியா!
மூன்று குழந்தைகளுக்குத் தாயான கிளாடியா, தன் கணவன் எல் சீனோவுடன் டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை போட்டு  பிரிந்ததால், அவர் மூலம் 'லாஸ் ஆந்த்ராக்ஸ்’ கும்பலின் ரகசிய நடவடிக்கைகள் கசிந்துவிடுமோ எனப் பதறுகிறார்கள் கொலைக் கூட்டாளிகள். இதனால், கிளாடியாவைக் கொன்றுவிடுகிறது ஒரு கும்பல். ஆனால், போலீஸ் மற்றும் மீடியா விசாரணை அதிர்ச்சி உண்மையை வெளிக்கொண்டுவருகிறது. கிளாடியாவுக்குப் பதிலாக அவளைப் போன்றே தோற்றமுடைய வேறு ஒரு பெண்ணைத்தான் அந்தக் கூலிப்படை கொலை செய்திருக்கிறது. கிளாடியா போலவே தோற்றம் கொண்ட அந்தப் பெண்தான் தன் கவர்ச்சி மற்றும் துப்பாக்கி படங்களைப் பதிந்தவர் எனக் கண்டுபிடித்தார்கள். சிறையில் இருக்கும் எல் சீனோவும், 'அந்தப் படங்களில் இருப்பது நிச்சயமாக என் மனைவி அல்ல. அவள் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடமாட்டாள்’ என்கிறார் இன்னும் உறுதியாக!
சம்பவம் : 3

திகீர் திருப்பமாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார் கிளாடியா. ஏக எதிர்பார்ப்புடன் காத்திருக்க, மீடியா மூலம் மக்கள் முன் தோன்றியவர்... 'நான்தான் கிளாடியா ஒஹோவா ஃபெலிக்ஸ். ஆனால், நீங்கள் நினைப்பது போல கிரிமினல் அல்ல.  சாதாரணமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண். என்னிடம், கார் இல்லை; சொந்தமாக வீடு இல்லை. என் அம்மா வீட்டில்தான் வசிக்கிறேன். ஆனால், நான் ஆடம்பரமாக வாழ்வதாகவும், ஆபத்தானவளாகவும் செய்திகள் கிளம்பிவிட்டன. எனக்கென ட்விட்டர், ஃபேஸ்புக் அக்கவுன்ட் எதுவும் கிடையாது. என் கணவரைப் பிரிந்து வாழ ஆரம்பித்த பிறகு, எனக்குக் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இனி என்ன செய்வது எனத் தெரியவில்லை. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை’ என்று சொல்ல, 'பாதுகாப்பா..? உன்னைப் பலமா விசாரிக்கணும். வாம்மா மின்னல்!’ என அவரைக் கைது செய்தது போலீஸ். பின்னர் கிளாடியா தானாகவே சரணடைந்ததாகச் சொல்லிவிட்டு, அவரை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  
ஆக, கிளாடியா என ஒருவர் இருக்கிறார். ஆனால், அப்பாவிபோல நடிக்கிறார் என ஒரு தரப்பு சொல்ல, 'கொல்லப்பட்ட அந்தப் பெண்தான் 'லாஸ் ஆந்த்ராக்ஸ்’ தலைவியாக இருக்கும். இன்னும் தீவிரமாக விசாரணையை முடுக்கிவிடுங்கள்’ என்கிறது ஒரு தரப்பு. திக்கித் திணறி மெக்ஸிக்கோ காவல் துறை விசாரணையை முடுக்கிவிட, சிறையில் இருக்கும் கிளாடியாவுக்கு ஸ்கெட்ச் போட்டுச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் லாஸ் ஆந்த்ராக்ஸ் கும்பலின் மர்டர் மாஸ்டர்ஸ்

No comments:

Post a Comment