சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jun 2015

மறைந்த விமானங்களும்... மாயமாகிப்போன அறிவியல் வளர்ச்சியும்!

தேடிப்பார்த்தேன்....தென்பட வில்லை' என்பது போல்தான் இதுவரை உலகில்  மாயமான விமானங்களை  பற்றி செய்திகள் வருகின்றன.
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்து சோதித்துப் பார்க்கத் தொடங்கிய 1908ஆம் ஆண்டில் தொடங்கி, ஏராளமான விமான விபத்துகளை உலகம் கண்டுவிட்டது. அதிலும் 1933க்குப் பிறகு எல்லா ஆண்டுகளிலும் விமான விபத்துகள் நடைபெற்றுள்ளன.

கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது நடைபெற்ற சில விமான விபத்துகள், அதிலும் விமானத்திற்கு என்ன கதி நேரிட்டது என்பது குறித்து உறுதியாகத் தெரியாத விமான விபத்துகள் குறித்த மர்மங்கள் இன்று வரை நீடிக்கிறது. 


மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம், கடந்த வருடம் மார்ச் 8 ஆம் தேதி மாய மானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்ற மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்புக் குழு ஈடுபட்டது. அதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்திய பெருங்கடலின் ஆழத்தில் விமானத்தின் சிதைவு பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், தேடுதல் வேட்டையும் தோல்வியிலேயே முடிந்தது. மாயமான அந்த விமானம் தொடர்பான மர்மம் இன்று வரை நீடிக்கிறது.
இதேபோல் சென்னையில் இருந்து கடந்த 8 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘டோர்னியர்’ விமானம் 3 பேருடன் மாயமானது. விமானம் மாயமாகி 17 நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்கிறது. 

முன்னதாக கப்பல் சீர்காழி அருகே கடலில் மூழ்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதை தற்போது கடலோரக் காவல் படைமறுத்தது. அருகில் உள்ள பிச்சாவரம் பகுதியில் நடக்கும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது .
கப்பல்கள், படகுகள், மீனவர்கள், கடற்படையினர் என சகல விதத்திலும் தேடும் பணி நடந்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிநவீன பல்நோக்கு ஆராய்ச்சிக் கப்பலான ‘ஒலிம்பிக் கேன்யான்’ சம்பவ பகுதியில் கடலுக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்தில் 4 அதிநவீன கேமராக்கள் மூலம் 360 டிகிரியில் சுழன்று படம் எடுத்து தேடும் பணியில் ஈடுபட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவற்றுடன் நீர்மூழ்கி கப்பலும் சிக்னல்கள் வரும் பகுதியில் எல்லாம் தேடியும், எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்த மறைந்த விமானங்களை தேடுவதில் நமக்கு ஏற்பட்ட இந்த  தோல்வி,  நமது விஞ்ஞான வளர்ச்சி மாயமாகி போனதை காட்டுவது போல் தெரிகிறது. 'என்ன இன்னுமா தேடுறாங்க? ' என்ற கேள்வி நமக்கு உணர்த்துவது தொழில்நுட்பத்தின் திறன்கள்மீது மிகை நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு விட்டோமா என்ற ஆதங்கம்தான். இது அறிவியல் சாம்ராஜ்யத்தின் எல்லை பற்றி சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. 

'மறைந்த டோர்னியர்’ விமானம் கண்டுபிடிக்கப்படவேண்டும். விமானிகள் உயிருடன் திரும்ப வேண்டும்..!' என்பதே பலரது பிரார்த்தனை. 



No comments:

Post a Comment