சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jun 2015

'சொல்வதெல்லாம் உண்மை'யிலிருந்து லட்சுமி விலகியது ஏன்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
 
'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் இருந்து விலகிட்டீங்களே... என்ன மேடம் இப்படிப் பண்ணிட்டீங்க?'' என லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு,

''ப்ளீஸ்... இனிமே 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’னு கிண்டல் பண்ணாதீங்க. அந்த டயலாக் நான் எந்தச் சூழ்நிலையில் சொன்னேன்னு தெரிஞ்சா, நீங்களும் சொல்ல மாட்டீங்க. ஒரு அப்பாவிப் பொண்ணுக்கு ஒருத்தன் எட்டு முறை குழந்தை உண்டாக்கிட்டு கருக்கலைப்பு செஞ்சிருக்கான். 

அதை நிகழ்ச்சியில் கேட்டப்போ வேதனையிலும் இயலாமையிலும், 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா?’னு ஆதங்கத்துல சொன்னேன். அதைப் பிடிச்சுட்டு ஜாலி கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. என் நிலைமையில் இருந்தாதான், அந்த வார்த்தைகள் எவ்வளவு வேதனையான மனநிலையில் வெளிப்பட்டதுனு உங்களுக்குப் புரியும். அதனால இனி அப்படிச் சொல்லி யாரையும் கிண்டல் பண்ணாதீங்க... ப்ளீஸ். சரி... இப்போ நான் ஏன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தேனு சொல்றேன்.

நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட ஒரு மோசமான பையன், போன்ல எனக்கு கொலைமிரட்டல் விடுத்தான். நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் போய் புகார் கொடுத்தேன். உடனே நிகழ்ச்சியின் இயக்குநர், 'அந்த ஷோவுக்கே நீங்கதான் நெகட்டிவ். உங்களுக்கு என்ன தெரியும்?’ அது, இதுனு வாய்க்கு வந்ததைப் பேச ஆரம்பிச்சுட்டார். அப்பவே அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகியிருக்க வேண்டியது. ஆனா, சேனல் தரப்பில் இருந்து சமாதானம் பண்ணாங்க. ஆறு மாசம் நிகழ்ச்சியை நடத்திட்டு இருந்தேன்.

சமீபத்துல, 'என் பொண்ணு அமெரிக்காவில் இருக்காங்க. அவங்களைப் பார்க்க அமெரிக்கா போறேன். ஒரு மாசம் நான் இல்லாதப்பவும் ஒளிபரப்புற அளவுக்கு நிகழ்ச்சியை ஷூட் பண்ணி வெச்சுக்கங்க’னு நான் இயக்குநரிடம் மூணு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். 'எடுத்துவெச்சுட்டோம்... எடுத்துவெச்சுட்டோம்’னு அவர் சொல்லிட்டே இருந்தார். ஆனா, கடைசி வரை ஒரு எபிசோடுகூட முன்கூட்டியே ஷூட் பண்ணலை. திடீர்னு, 'நீங்க அமெரிக்கா போகக் கூடாது. நிகழ்ச்சியை நடத்திக் கொடுங்க’னு சொன்னாங்க. நான் 'முடியாது’னு சொல்லிட்டேன். இதுக்கு மேலயும் அமைதியா இருக்க வேண்டாம்னு நிகழ்ச்சியில் இருந்து விலகிட்டேன். நான் இருந்த வரை நிகழ்ச்சியை நல்லா நடத்தினேன். அந்த சந்தோஷம் போதும் எனக்கு" என்றார்.



No comments:

Post a Comment