சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Mar 2013

"செவர்லே"ன்னு சொன்னீங்க.. "குவாலிஸ்" நின்னுக்கிட்டுருந்துச்சு..!"


ஓடோடி வந்து காவல் நிலையத்துக்குள் நுழைந்த நாராயணசாமி அங்கிருந்த காவலரிடம்,

"
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் வையுங்க.." என்று கெஞ்சினார்.

காவலருக்கோ ஆச்சரியம்...

"
ஏன்.. என்ன ஆச்சு..?... நான் எதுக்காக உங்களை லாக்கப்ல வைக்கணும்... அப்படி என்ன தப்பு பண்ணுனீங்க?"

"
என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்.."

"
...செத்துட்டாங்களா..?"

"
இல்லே ஐயா... கோபமா என்னை துரத்திகிட்டு வந்துகிட்டு இருக்கா.. அவள் கையில நான் மாட்டிடக்கூடாது...அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!


அந்த அதிசயம் நிகழ்ந்து விட்டது.

சந்தோசத்தில் தலைகால் புரியாமல் துள்ளிக் குதித்தார் நாராயணசாமி.

ஆம்... இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 35 ரன்களைக் குவித்து விட்டார் நம்ம ஆள். அதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம் ஆரவாரம் எல்லாம்.

எதிர் முனையில் இருந்த சச்சின் கேட்டார்.

"
நாராயணசாமி 50 ரன்... 100 ரன் எடுத்தா ஆடுவாங்க.. குதிப்பாங்க.. நீ 35 க்கே இத்தனை அட்டகாசம் பண்றியே..ஏன்?"

அதற்கு நாராயணசாமி அமைதியாகச் சொன்னார்,

"
அடப் போய்யா சச்சினு.. பள்ளிக்கூடத்துல 35- தாண்ட முடியாம எத்தனை வருஷம் கோட் அடிச்சேன்னு எனக்குத் தான்யா தெரியும்..!"


நம்ம நாராயணசாமி ஒரு பெயிண்டர்(சுண்ணாம்பு அடிக்கறவர்.. ஓவியர் இல்லே..). 

ஒரு வீட்டுக்காரர் அவரைக் கூப்பிட்டு காண்ட்ராக்ட் பேசினார். 

"
வீட்டுக்குப் பின்னாடி இருக்குற செவர்லே சுண்ணாம்பு அடிக்கணும்.. என்ன கேக்கறே..?"

"
நீங்க குடுக்கறதைக் குடுங்க.. நான் வேலையை ஆரம்பிக்கிறேன்.. "

ரொம்ப சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டுது.. 

வீட்டுக்காரர் 150 ரூபாய் கொடுத்தார்.

நாராயணாசாமி திருப்தியுறாமல் கேட்டார்,

"
பாத்து போட்டுக் குடுங்க முதலாளி.. வேலை அதிகமா செஞசுருக்கேன்.. நீங்க "செவர்லே"ன்னு சொன்னீங்க.. அங்க போயி பார்த்தா "குவாலிஸ்" நின்னுக்கிட்டுருந்துச்சு..!"



No comments:

Post a Comment