சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Mar 2013

செல்வியின் காதல்


காஞ்சிபுரத்தில் என் தோழி சாரதாவின் பெண் வந்தனாவிற்கு திருமணம்.ஒரு மாதம் முன்பே வந்து பத்திரிகை வைத்து அழைத்து விட்டு சென்றாள்நானும் என் கணவரும் முதல் நாள் இரவே மண்டபத்திற்கு சென்று விட்டோம்.அங்கு என் கல்லூரி தோழிகள் பலரை பார்த்ததும் நேரம் போனதே  தெரியவில்லை.என் கணவர் அடுத்த நாள் 
ஆபிசில் முக்கியமான வேலை இருப்பதால் விருந்து முடித்துவிட்டு சென்றுவிட்டார்
.பின் நானும் என் தோழிகளும் இரவு முழுவதும் சந்தோசமாக பேசி மகிழ்ந்தோம்
மணபெண்ணுக்கு அலங்காரம் நாங்களே செய்தோம்.அதை கண்ட என் தோழி 
ரொம்பவும் சந்தோசப்பட்டாள்.

பின் முகூர்த்தம் முடிந்ததும் நண்பர்கள்சொந்தங்கள் என பல  பேர் மணமக்களுக்கு 
பரிசுகளுடன் வந்தனர்.அப்போதுதான் நான் அவளை பார்த்தேன்.ஆனால் அவள் 
என்னை கவனிக்கவில்லை.அவள் தன் கணவனுடன் வந்திருந்தாள்.அவளை பார்த்தே ஐந்து வருடங்கள் இருக்கும்.இப்போது கொஞ்சம் குண்டாகிவிட்டாள்.குழந்தைகள் 
யாருமே அவர்களுடன் இல்லை.இருவர் மட்டுமே வந்திருந்தனர்அவள் வேர் 
யாருமல்ல,என் பெரிய அக்காவின் மகள் செல்வி.

என் அப்பாவுக்கு மூன்று பெண்கள்.நான்தான் கடைக்குட்டி.மூன்று பெண்கள் 
என்பதால்  எங்கள் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.சின்னசின்ன 
சண்டைகளும்,குறும்புகளும் ,குதூகலமுமாக வீடே அமர்க்களப்படும்.என் அம்மாவும் எங்கள் தோழியை போல.எல்லோருக்கும் திருமணம் நடந்தது.மூன்று பெண்கள் 
என்பதால் என் அக்காவிற்கு 17 வயதிலேயே திருமணம் நடந்தது.அவரின் கணவரும்
 நல்ல மனிதர்.எங்கள் குடும்ப சூழ்நிலை கண்டு நடந்து கொண்டார்.என் சின்ன அக்கா , என் திருமணத்தை அவர்தான் முன் நின்று நடத்தி வைத்தார்.

எல்லோரும் திருமணம் என்ற பந்தத்தில் பிரிந்து விட்டோம்.அவ்வப்போது பார்த்து கொள்வதோடு சரி.குடும்ப நிகழ்ச்சிகள்,திருவிழா சமயங்களில் ஒன்றுகூடி 
கொண்டாடுவோம்.அப்பாவும் அம்மாவும் போன பின் பெரிய அத்தான் தான் எங்கள் 
குடும்ப தலைவராக எல்லோரையும் முன்னின்று நடத்தினார்.எங்கள் இருவரின் 
கணவர்களும் அதே போல அனுசரணையாக நடந்து கொண்டனர்.

எல்லோருக்குமே முதலில் ஆண் குழந்தைகள் தான் பிறந்தது.எங்கள் வீட்டில் முதல் பெண் குழந்தை என்றால் அது என் பெரிய அக்காவின் பெண் செல்விதான்.எனக்கும் 
சின்ன அக்காவிற்கும் பெண் குழந்தை இல்லைஅதனால் அவளை செல்லமாக 
வளர்த்தோம்.ஒருவரும் திட்டியது ,அடித்ததோ இல்லை.பெரியவர்கள் மட்டுமல்லாது எங்கள் பசங்களும் அவளிடம் பாசமாக நடந்து கொள்வர்.எங்கே சென்றாலும் 
அவளை கூட்டி செல்வது, வேண்டும் என்று கேட்பதை வாங்கி தருவது என நன்றாக 
பார்த்து கொண்டோம்.நன்றாக படித்தாள்.+2 முடித்து கல்லூரி முதல் வருடம்  
சேர்ந்தாள்அப்போது தான் இந்த பையனின் பழக்கம் வந்ததுதிடீரென்று ஒரு நாள் 
காலேஜ் போனவள் வரவில்லை.நாங்கள் விசாரித்த போது அவளின் தோழிகள் ஒரு பையனை காதலித்ததாக கூறினார்கள்பின் நாங்களும் தேடாத இடமில்லை.எங்கு தேடியும் ஒரு தகவலும் கிடைக்காததால் விட்டு விட்டோம்போலீசில் சொல்ல என் 
அக்கா வேண்டாம் என்று விட்டாள்அதோடு சரி.என் அக்காவும் மாமாவும் முடங்கி போனார்கள்.அதிகம் எதிலும் கலந்து கொள்வதில்லை.நானும் என் சின்ன அக்காவும் அடிக்கடி சென்று பார்த்து கொள்வோம்.

இப்போது பார்த்ததும் எனக்கு கோபம் வந்தது.அவளுக்கு தெரியாதது போல மறைந்து கொண்டேன்.அவளை பார்க்க கூடாது பேசக்கூடாது என நினைத்தாலும் என் மனம்
 அவளையே நினைக்கிறது.அவளுக்கு தெரியாமல் அவளையே பார்த்து கொண்டு 
இருந்தேன்.  கோபம் ஒரு பக்கம்,பாசம் ஒரு பக்கம் ஒரே குழப்பமாக  இருந்தது
அப்போதுதான் கவனித்தேன்.கல்யாண மண்டபத்தில் எல்லோர் முகமும் மலர்ச்சியாக இருக்க இவள் மட்டும் எதோ வந்திருக்கிறோம் என்பது போல ஒட்டாமல் இருந்தாள்.அவள் கணவன் எதோ கேட்க பதில் சொன்னாள்.பின் அதே வெறுமை.

என் தோழிகள் சாப்பிட கூப்பிடவும் நானும் சென்றேன்.மனம் சாப்பாட்டில் 
ஒட்டவில்லை.அவளையே நினைத்தது.என்ன பிரச்சனை அவர்களுக்குள்அவன்
 இவளை நன்றாக பார்த்து கொள்வதில்லையோஅப்போ ஏன் காதலித்து திருமணம் செய்ய வேண்டும்?அதுவும் பெற்றோருக்கு சொல்லாமல் ஓடி பொய் திருட்டுத்தனமாக  கல்யாணம் செய்து கொண்டவளை கடைசி வரை காப்பாற்ற வேண்டாமாஎன 
என்னென்னவோ ஓடுகிறது என் மனதில்ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு மணப்பெண் அறைக்கு சென்றேன்உள்ளே செல்லும் போது அவள் வெளியே வருகிறாள்நேருக்குநேர் பார்த்து கொண்டோம்இருவருக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை.ஐந்து
வருடங்கள் இருக்கும் பார்த்துஎன்ன பேசுவது

"சித்தி நல்லா இருக்கீங்களா?"
"ம்ம் இருக்கோம்"
"மாப்பிளை என் ஹச்பெண்டோட வேல பாக்குறார்.அவர்தான் என்னை கம்பல் கூட்டி வந்தார்"
அப்போதும் அவள் முகத்தில் சந்தோஷமில்லைஅதை பார்த்த என் மனது இரக்க 
பட்டது.
"செல்வி,உன்ன நல்லா பாத்துகுறானா உன் புருஷன் "
பாத்துகுறார் சித்தி,  அம்மா,அப்பா எப்படி இருக்காங்க ?அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சாஎல்லாரும் நல்லா இருக்காங்களா?"
ம்ம் , இருக்காங்கநீ பண்ணுன வேலைக்கு எப்படி நிம்மதியா இருப்பாங்க?"
எல்லாம் என்னோட விதி சித்தி , நான் பண்ணின பாவம் என்ன சும்மா விடாது ,
என்னை மன்னிச்சுருங்க சித்தி " என்றபடி அழுதாள்.
என்னடி இதுசின்ன புள்ளையாட்டம் அழுதுட்டு,எல்லாரும் பாக்கறாங்க,கண்ணை 
துடை " என ஆதரவாக அவள் தோலை தொட்டு ஆறுதல் சொன்னேன்.
சரி விடு எல்லாம் நேரம்நடந்தது நடந்துட்டு போகட்டும் ,வாழ போறது நீதானே , நீ 
விரும்பியதை நீ தேடிகிட்டஉன் மேலயும் தப்பில்ல , உன்ன நல்லா பாத்துகுறாரா
குழந்தை இருக்காஎன்றேன்குழந்தை என்றதும் அவள் முகத்தில் சந்தோசம் வந்தது.

ஒரு பையன் சித்தி , அபிஷேக் 1st படிக்கிறான்நல்ல புத்திசாலி ,சேட்டை அதிகம்."

ம்ம் என்ன வேலைக்கு போறாரு உன் வீட்டுகாரரு? "

"ஒரு பெரிய கம்பெனில அக்கவுண்டண்ட்  இருக்காரு.நல்ல சம்பளம்.நான்  
வீட்லதான்  இருக்கேன்."

சரிசரி நான் நீ வந்ததுமே நான் உன்னை பார்த்துட்டேன்.நீ என்னை கவனிக்கலஉன் முகத்துல சந்தோசமே இல்லையேடி , அத பார்த்ததும் நான் பயந்துட்டேன்எங்க நம்பி எமந்துட்டியோன்னு?"

இல்ல சித்தி , அதெல்லாம் ஒண்ணுமில்லைநல்லாத்தான் இருந்தேன் " என மழுப்பினாள்.

இல்லடி நீ பொய் சொல்லுற , உன்ன இவ்ளோ நாள் கழிச்சு பார்த்திருந்தாலும் ஒரு 
அம்மாவுக்கு தன் பொண்ணு முகத்த பார்த்ததும் தெரிஞ்சிரும்நீ எப்படியிருக்கேன்னுசொல்லு , என்ன பிரச்சனை ?

கல்யாணம் ஆனதிலிருந்து நாங்க எங்கயும் வெளிய இது மாதிரி விசேசங்களுக்கு போனதில்லஅவரு வீட்லயும் எங்கள சேத்துக்கலஇது மாதிரி அவரோட பிரண்ட்ஸ் கூப்பிட்ட மட்டும்தான் இதெல்லாம் பாக்க முடியும்.கல்யாணம்,மறுவிருந்து
வளைகாப்பு இதெல்லாம் பாக்கும் போதுநமக்கும் இப்படி   நடக்கலயேன்னு  
வருத்தமா இருக்கு சித்தி " என அழுதாள்.

அவள் மனதில் உள்ள கவலையை உணரும்போது எனக்கு அவள் நிலைமை புரிந்தது.
அவள் பண்ணியது தவறு என்றாலும் இழந்தது எவ்வளவு சொந்தங்களைஎத்தனை 
எத்தனை சந்தோசங்களைஒரு பெண்ணுக்கு திருமணம் , வளைகாப்பு , என்பது 
வாழ்வில ஒருமுறை மட்டுமே வரக்கூடியதுகர்ப்பமாய் இருக்கும் போது தன் அம்மா தன் உடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் ஆசைபடுவார்கள்அந்த சின்னசின்ன 
சந்தோசங்கள் இவளுக்கு கிடைக்கவில்லையேஅதற்க்கு நாங்களும் ஒரு காரணம் தானே ?
ஒரு அம்மாவும் தன் பெண் கர்ப்பமாய் இருக்கும் பொது அவளுக்கு  தேவையானதையும்சத்தான உணவுகளையும் செய்து தந்து சந்தோசபடுவாள்அதையெல்லாம் நாங்களும் தவற விட்டுவிட்டோம்எங்கள் குடும்பத்திலும் இவள் ஒருத்திதான் பெண்இப்போது எப்படி என் பெண்ணுக்கு ஆறுதல்  சொல்வது என எனக்கு 
புரியவில்லை

அவளின் வாழ்க்கையில் இந்த ஐந்து வருடங்களில் என்ன நடந்திருக்கும் என ஒரு 
நிமிடம் நினைத்து பார்த்தேன்அவள் கணவன் வீட்டு ஆதரவும் இல்லைசந்தோசமோ துக்கமோ எது நடந்தாலும் இவர்களுக்குள்ளே தான் சொல்லிக்கொள்ள வேண்டும்
பிரசவத்திற்கு கூட அவளுக்கு ஒரு பெண் துணை இருந்திருக்காது.அவள் கணவன் 
மட்டுமே.ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறப்பை போலஎந்த சொந்தங்களின் துணையும் இல்லாமல் இருவருமே அனைத்தையும் செய்திருக்கிறார்கள்இதை விட பெரிய சாதனை எதுவும் இல்லைஅவள் எவ்வளவு தைரியத்துடன் இருந்திருக்க 
வேண்டும்

என்னம்மா இதுகல்யாண வீட்ல அழுதுட்டுஉங்க மேல எங்க எல்லாருக்கும் 
கோபம் இருந்தது உண்மைதான்.ஏன்னா பாத்து பாத்து வளர்த்த பிள்ளை , காதல்ங்கிற பேர்ல அவ வாழ்க்கை வீணா போய்ட்டா என்ன பன்றதுன்கிற கவலைதான்நீங்க 
காதலிச்சு கல்யாணம் பண்றது பெரிய விஷயமே இல்லைடா.அதுக்கு அப்புறம் நீங்க 
உங்க பெத்தவங்க முன்னாடி நல்ல வாழ்ந்து காட்டணும்.அதை நீ தனியா நின்னு 
செஞ்சு காமிச்சுட்டடாஎல்லா பொண்ணுகளுக்கும் பிறந்த வீடு புகுந்த வீடு சப்போர்ட் இருக்கும்.ஏன் நானும்,ரெண்டு அக்காவும் அப்பா,மாமா சப்போர்ட்ல தான் நாங்க 
உங்களையெல்லாம் வளர்த்தோம்.ஆனா நீ உன் வாழ்க்கையை நீயே யாரோட 
துணையும் இல்லாம நீ உன் வாழ்க்கையை அமைச்சுக்கிட்டநீதாண்டி எங்க எல்லாரையும் விட பெரியவ,தைரியசாலி.இந்த சின்ன வயசுல நீ எவ்ளோ பக்குவமா 
நடந்துக்குறநீ தவற விட்ட அத்தனை சந்தோசங்களையும் இனி நாங்க உனக்கு 
தரோம்டி என் செல்லம். இனி எல்லாமே நல்லதாவே நடக்கும் உன் வாழ்க்கையில,
அதுக்கு நான் பொறுப்புஎன் பேரனை நான் என் அக்காவுக்கு காட்டனும்.உன் 
கணவரை கூட்டிட்டு கிளம்பு. "

 " நம்ம வீட்டுக்கு  போலாம். "

காஞ்சிபுரம் போகும் போது என் கணவருடன் போனேன்.திரும்பும் போது என்  குட்டி 
பேரனை கொஞ்சி கொண்டே வருகிறேன்.ஒரே நாளில் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment