சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Mar 2013

ஏழை மாணவரின் உலக சாதனை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஏழை மாணவன் ஒருவன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டிஉலக சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் மாரியப்பன் பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார்.

6-
ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார்.மாவட்ட அளவில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான போட்டியில் சாதாரணமானவர்களுடன் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார்.

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாராம்லிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை.

இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 12ம் திகதி முதல் 14ம் திகதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார்.

இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார். இது இந்த பிரிவில் உலக சாதனை.

இதையடுத்து, கோப்பையையும், தங்கப் பதக்கத்தையும் எடுத்துக் கொண்டு ஆட்சியரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரனுடன் வெள்ளிக்கிழமை வந்தார். ஆனால், ஆட்சியர் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

இதுகுறித்து குறித்த மாணவன் கருத்துத் தெரிவிக்கையில்,

உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய போது எனக்கு ஊக்கம் அளித்து பயிற்சி அளித்தவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன்.

லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் பாஸ்போர்ட் எடுக்க பணத்தை தயார் செய்ய முடியவில்லை. இதனால்இ அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். இதுவே, தேசிய அளவிலும், உலக அளவிலும் முதல் பதிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற உள்ள உலக அளவிலான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் பங்கேற்க உள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!2 comments:

  1. மாணவன் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இன்றுவரை எந்த வாய்ப்பும், உதவியும் இவருக்கு கிடைக்கவில்லை... வேதனையளிக்கும் செய்தி

    ReplyDelete