சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Mar 2013

குண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் !
அமெரிக்காவில் காசு இல்லை என்றால், ஜெயிலுக்கு போனால்தான் மருத்துவம். விருப்பமில்லை என்றால் சாக வேண்டியதுதான்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் ஸ்டீபன் எஸ்பாலின் என்பவர்சிறைக்குச் சென்றால் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும்என்பதற்காகஒபாமாவை வெடிகுண்டு வைத்து கொல்லப் போவதாகபொய் சொல்லி தானாக முன் வந்து கைதாகியிருக்கிறார்.

வீடற்ற ஏழையான 57 வயதான எஸ்பாலினுக்கு இருதய நோய் இருந்திருக்கிறது. அவரை பரிசோதித்த புளோரிடாவின் போகா ராடன் மருத்துவமனையில், ‘தேவையான மருத்துவக் காப்பீடு இல்லாததால் சிகிச்சை இல்லைஎன்று சொல்லியிருக்கிறார்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரைபணக்காரர்கள் பிழைக்கலாம். பணம் இருப்பவர்கள் மருத்துவக் காப்பீடு எடுத்து தங்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ளலாம். பணமில்லாதவர்கள் சாக வேண்டியது தான்’. இதுதான் முதலாளித்துவத்தின் எளிமையான விதி.

எஸ்பாலின் வீடு கூட இல்லாதவர், பெருகி வரும் வேலை இல்லா திண்டாட்டத்தில் பாதிக்கப்பட்டவர், அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாதவரிடம் மருத்துவக் காப்பீடு எப்படி இருக்கும்? இருந்தும் மனம் தளராதவராக போலி பெயர், போலி மருத்துவக் காப்பீடு விபரங்கள் கொடுத்து மார்பு வலிக்காக மருத்துவமனைக்கு போயிருக்கிறார். அதை கண்டுபிடித்த மருத்துவமனை இவருக்கு சிகிச்சை தர மறுத்திருக்கிறது.

பணமில்லாத ஏழைகளை மருத்துவ நிர்வாகம் எப்படி நடத்தும் என்பதே நமக்கு தெரிந்ததே. சுதாரித்துக் கொண்ட எஸ்பாலின்தன் வீட்டில் ஒரு வெடிகுண்டு செய்து, வெள்ளை மாளிகைக்கு சில மணி நேரம் முன்புதான் அனுப்பியிருப்பதாகரகசிய போலீஸ் அதிகாரிகளிடம் கத்தியிருக்கிறார்.

உடனே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு அது பொய் என உறுதி செய்யபட்டிருக்கிறது. அவர் சொன்னது போல் எந்த வெடிகுண்டும் அவர் வீட்டில் இல்லை, அவருக்கு வீடே இல்லை.

இதைப் பற்றி நீதிமன்ற விசாரணையில் தன் சார்பில் கொடுத்த மனுவில் எஸ்பாலின்தான் வேண்டுமென்றே வெடிகுண்டு பொய்யைச் சொன்னதாகவும், அப்படிச் சொன்னால் தான் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து கைது செய்வார்கள் என்று தெரிந்தே சொன்னதாகவும்கூறியுள்ளார்.

ஏன் அப்படி கூறினாராம்?

சிறைக்கு சென்றால் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும். எஸ்பாலின் இப்படிச் செய்வது முதல் முறையல்ல. ஏற்கனவே 2001ல் ஜார்ஜ் புஷ்ஷை கொல்லப் போவதாகச் சொல்லி சிறைக்குச் சென்று தன் 18 மாத தண்டனை காலத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை பெற்றிருக்கிறார்.


வீட்டை விற்று உயிரை காப்பாற்றிக் கொள், இல்லை என்றால் புதைப்பதற்கு இடத்தை வாங்கிக் கொள்

இவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ராபின் ரோஸன்-இவான்ஸ், “எஸ்பாலின் வெடிகுண்டு வைக்குமளவு வசதியோ, அறிவோ அற்றவர்என வாதாடினார். இருந்தும் வதந்தியை பரப்பியதற்காக ஏற்கனவே 18 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற எஸ்பாலின் திருந்தாததால் நீதிபதி ரைஸ் கெம்ப் அவருக்கு நான்கு வருட சிறைத் தண்டனை அளித்தார்.

சிறையில் இலவசமாக இருதய நோய்க்கான சிகிச்சை பெற்றபடி நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார் எஸ்பாலின். கொலை மிரட்டல் விடுத்து சிறைக்குப் போன இரண்டு ஆண்டுகளில் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றிருக்கிறார். விரைவில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. ஏற்கனவே ஒரு சக்கர நாற்காலியும், கீமோதெரபியும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. வெளியில் இருந்திருந்தால் மருத்துவக் காப்பீடு இல்லாத நிலையில் பெரும் செலவு பிடிக்கக் கூடிய சிகிச்சைகள் இவை.

எஸ்பாலினைப் போலவே இன்னொரு மனிதரும் வாலன்டியராக பிரச்சனை செய்து கைதாகி சிறையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். 2011ல் வடக்கு கரலினாவைச் சேர்ந்த 59 வயதான ரிச்சர்ட் ஜேம்ஸ் வெரோன் வங்கி ஒன்றில் நுழைந்து ஒரு டாலர் கேட்டு மிரட்டியிருக்கிறார். அதன் மூலம் சிறைக்குப் போனால் தனது முதுகு மற்றும் கால் வலி பிரச்சனைகளுக்கு இலவச சிகிச்சை பெறலாம் என்பது அவரது திட்டம்.

எஸ்பாலின் சம்பவம் நமக்கெல்லாம் நல்ல பாடம், முழுவதும் தனியார் மயமாகிக் கொன்டிருக்கும் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் மருத்துவ சேவை பெற வேண்டுமானால், நாமும்நானும் ரவுடிதான் என வாலன்டியராக ஜீப்பில் ஏற வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment