கேரள
சினிமாவின்
பிதாமகன்
J.C.டேனியல் அவர்களின்
வாழ்க்கை
வரலாறுதான்
" செல்லூலாய்ட் "
என்ற
மலையாள
சினிமா.டேனியலாக
பிருத்திவிராஜும்
அவரது
மனைவி
ஜானட்
ஆக
மம்தா
மோகன்தாஸும்
நடித்துள்ளனர்.சாகும்
வரை
சாதிக்கொடுமைகளால்
அவமானப்பட்டு
அங்கீகாரம்
இல்லாமல்
இறந்தவர்
J.C.டேனியல்.இந்த
படம்
வெளிவந்த
பிறகு
டேனியலை
மலையாள
சினிமா
கொண்டாடுகிறது.
கதை
1930 களில் நடக்கிறது.பணக்கார
குடும்பத்தில்
பிறந்த
டேனியலின்
கனவு
சினிமா
எடுப்பது.மும்பை
சென்று
பல
ஸ்டுடியோக்களில்
தொழில்நுட்பங்களை
கற்று
திரும்பவும் தன்
சொந்த
ஊருக்கு
வருகிறார்
டேனியல்.தன்
சொத்துகளை
விற்று
கேரளாவி
முதல்
சினிமா
ஸ்டுடியோவை
" திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோ
" எனும் பெயரில் தொடங்குகிறார்.கணவரின்
சினிமா
ஆசைக்கு
முழு
ஒத்துழைப்பு
கொடுக்கிறார்
மனைவி
ஜானட்
( மம்தா
மோகன்தாஸ்
) . அந்த காலங்களில் பெண்கள்
சினிமாக்களில்நடிப்பதில்லை. ஆண்களே பெண்
வேடமிட்டு
நடிப்பார்கள்.
தாழ்த்தப்பட்ட
பெண்ணான
ரோசம்மாவை
" ரோசி "
என பெயர் மாற்றி
கேரள
சினிமாவின்
முதல்
படமான
" விகதகுமாரன் " எனும்
தன்
படத்தில்
நடிக்க
வைக்கிறார்.
கதாநாயகனாக
டேனியலும்,நாயகியாக
ரோசம்மாவும்
( சாந்தினி
) நடிக்கிறார்கள்.தாழ்த்தப்பட்ட
சாதி
பெண்
சினிமாவில்
நடிப்பதா?
என
ரோசம்மாவை
ஆதிக்க சாதியினர் மிரட்டுகிறார்கள்.பல
இன்னல்களுக்கு
இடையில்
படத்தை
முடிக்கிறார்.1930
ல்
கேரளத்தின்
முதல்
சினிமாவை
திருவனந்தபுரத்தில்
பெருமையோடு
ரீலிஸ் செய்கிறார்.தன்
படத்தை
பார்க்க
வரும்
ரோசம்மாவை
" நீ எங்களுடன் ஒன்றாக
படம்
பார்ப்பதா
? என
ஆதிக்க
சாதியினர்
மிரட்ட
படத்தில்
நடித்த
நாயகி
தன்
படத்தை
பார்க்க
முடியாமல்
வெளியில்
நிற்க
கேரளத்தின்
முதல்
படம்
திரையில்
ஓடுகிறது.
தாழ்த்த
பட்ட
சாதி
பெண்
நடித்தாள்
என்ற
காரணத்துகாக
படம்
திரையிட்ட
இடங்களிலெல்லாம்
கலவரம் நடக்க
படம்
தோல்வி
அடைகிறது.டேனியல்
தன்
சொத்துகளை
இழந்து
மீண்டும்
தன
சொந்த
ஊருக்கு
வருகிறார்.
சினிமா
கனவை
மறந்துவிட்டு
சராசரி
வாழ்க்கைக்கு
மாறுகிறார்.மறுபடியும்
P.U.சின்னப்பாவினால் சினிமா
ஆசை
துளிர்விட
இடையில்
சம்பாதித்த
சொத்துகளை
மீண்டும்
இழக்கிறார்.
சில
காலங்கள்
தன
குடும்பத்தை
விட்டு
விலகி
இருந்து
பின்
மீண்டும்
தன
குடும்பத்தோடு
சேர்கிறார்.இதன்
பின்
கேரளாவில்
பல
படங்கள்
வெளியாகின்றன.செம்மீன்
வெளியாகி
பெரும்
வெற்றி
பெறுகிறது.இது
எதுவும்
தெரியாமல்
வறுமையில்
தன்
மனைவியோடு
வாழ்கிறார்.அப்போதுதான்
எழுத்தாளர்
காட்டு
கோபாலகிருஷ்ணன்
டேனியலை
சந்திக்கிறார்.
அவரின்
நிலைமை
அறிந்து
அவரின்
விகதகுமாரன்
தான் கேரளாவின்
முதல்
படம்
என
அங்கீகாரம்
பெற
போராடுகிறார்.எந்த
அங்கீகாரமும்
இல்லாமல்
1975 ல் டேனியல் இறந்துவிடுகிறார்.
பின்
சாவதனாமாக
கேரளா
அரசு
டேனியலின்
விகதகுமாரன் தான்
கேரளாவின் முதல்
படம்
என
அறிவிக்கிறது.
டேனியலாக
பிருத்திவிராஜ்
செம
ஸ்கோர்
செய்கிறார்.சிறுவயது
டேனியல்,
முதிர்ந்த
வயதிலும்,அதே
சமயம்
டேனியலின்
மகன்
ஹாரிஸ்
டேனியலாகவும்
வெரைட்டி
காட்டியிருக்கிறார்.மம்தா
மோகன்தாஸும்,சாந்தினியும்
தத்தம்
பகுதிகளில்
பின்னிஎடுத்திருக்கிரார்கள்.படம்
பார்ப்பவர்கள்
மம்தா
போல
மனைவி
அமைய
வேண்டும்
என
எதிர்பார்க்கலாம்.அவ்வளவு
கச்சிதமாக
பொருந்துகிறார்
மம்தா.
எனக்கு இந்த படம் பார்க்கும் போது ஏனோ நம் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான் மனம் முழுவதும் நிறைந்து இருந்தார்.இந்திய அரசு அவருக்கு பலமுறை தேசிய விருது கொடுக்காமல் துரோகம் இழைத்திருக்கிறது.அவர் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக.அதே போல் தான் டேனியல் அவர்களும்.சினிமாவின் மாமேதைகளுக்கு என்றுமே மக்களின் மனதில் நீங்காத இடம் உண்டு.அந்த வகையில் டேனியலும் இனி கேரள மக்களின் மனதில் நீங்காத இடம் இருக்கும்.இந்த படம் வெளியானதும் இதுவரை தெரியாத டேனியலை இப்போது தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது கேரள சினிமா.இப்படியொரு அழகான படத்தை எடுத்த இயக்குனர் கமல் அவர்களுக்கும் நடித்த பிருத்திவிராஜ்,மம்தா,சாந்தினி மற்ற நடிகர் நடிகைகளுக்கும் வாழ்த்துக்கள் .
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும்
வாசித்துப் பயன் பெற்றுக்
கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:
Post a Comment