சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Mar 2013

ஸீரோ டார்க் தேர்ட்டி ஆங்கில படம்.


ஸீரோ டார்க் தேர்ட்டி  ஆங்கில படம்.அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை வேட்டையாடிய திகிலான நிம்டங்களும், அதன் பின்புலங்கலுமே படத்தின் கரு.
செப்டம்பர் 11 அன்று நியுயார்ர்க்கின் இரட்டை கோபுர கட்டடங்கள் தகர்க்க பட்டதிலிருந்து துவங்குகிறது படம்.அதன் சி.. வின் ஏகப்பட்ட விசாரணைகள்,திட்டமிடுதல்கள், பயணங்கள்என பலவற்றை கடந்து பாகிஸ்தானின் அபோதாபாத்தில் முடிகிறது படம். ஒசாமாவின் கடைசி 30 நிமிடங்களே படத்தின் கிளைமாக்ஸ்.


இப்படத்தின் இயக்குனர் கேத்திரின்.டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவிதான் இவர்.இவரின் முந்தைய படமான " தி ஹார்ட் லாக்கர் " படம் 2009 ஆம் ஆண்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருதை தாடி சென்றதுஉண்மையில் ஒசாமாவை அமெரிக்க படைகள் கொல்வதற்க்கு முன்பே கதையை தயார் செய்து விட்டார்களாம்.ஆனாலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் படபிடிப்புக்கு போகாமல் இருந்திருக்கிறார்கள்.
படத்தில் அமெரிக்க சி.. அதிகாரியாக ஒசாமாவின் நடவடிக்கைகளை கவனித்து,ஒசாமாவை கொள்வது வரையிலான ஆபரேஷன்களுக்கு திட்டமிடுவது " மாயா "எனும் பெண் அதிகாரி.ஒசாமாவின் மறைவிடத்தை கண்டுபிடித்தும் அனுமதி கிடைக்காமல் பல மாதங்கள் போராடி ஆபரேஷனுக்கு வெள்ளை மாளிகையில் அனுமதி வாங்குகிறார் மாயா.அனுமதி வாங்கியதும் தன மேற்பார்வையில் அமெரிக்காவின் கடற்படையான "சீல் "படையை அபோதாபாத்துக்கு அனுப்பி ஆபரேஷனை சக்சஸ் செய்கிறார் மாயா.   மாயாவாக ஜெஸ்ஸிகா நடித்திருக்கிறார்.அவரது ஆர்வம், வேகம், துடிப்பு , கோபம், என பல வகைகளில் ஒன்மேன் ஆர்மியாக அமர்களப்படுத்தியிருக்கிறார் ஜெஸ்ஸிகா.நள்ளிரவு ஹெலிகாப்டர் பயணம்,சீல் படைகளின் ஒவ்வொரு அசைவும் நம்மை சீட் நுனியில் அமரச் செய்யும்.திரைக்கதையிலும்,தொழில்நுட்பத்திலும் பட்டையை கிளப்பியிருகிறது ஸீரோ டார்க் தேர்ட்டி. அமேரிக்கா ஒசாமா பின்லேடனை பார்த்து பயந்தது,சி.. தன விசாரணையின் போது சந்தேகத்துக்கு உரியவர்களை சித்ரவதை படுத்தியது என சேம்சைடு கோல்களும் அடித்திருக்கிறார் கேத்திரின்.ஆனால் நம் தமிழ் படத்தில் அமெரிக்க  வீரர்கள் பெண்களையும்,குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள்.அவ்வளவு நல்லவர்கள் என கூறுகிறார் நம் உலக நாயகன்.

வெறும் ஒசாமா எனும் ஒரு வார்த்தைக்காக 40 மில்லியன் டாலர்களை கொட்டி தயாரிக்கப் பட்டு இருக்கிறது ஸீரோ டார்க் தேர்ட்டி.ஆனாலும் முதல் இரண்டு வாரத்திலேயே 84 மில்லியன் டாலர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:

Post a Comment