சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Mar 2013

6 பேருக்கு தேவையான உணவு..



நாராயணசாமி உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை வாங்கி வந்தார்.

அதில் போட்டிருக்கும் முறைப்படி வெந்தது பாதி..வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார். அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு 1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது. 

கோபமான நாராயணசாமி கடைக்காரனிடம் பாய்ந்தார்..

"
தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே.. ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?"

"
இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?"

"
பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?"

கடைக்காரன், நாராயணசாமி சமைக்கும் முறை, சாப்பிடும் முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின் மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..

அதில்....... எழுதியிருந்தது.

"6
பேருக்கு தேவையான உணவு.."




நாராயணசாமியும், அவரது நண்பரும் ஒரு முறை தொடர்வண்டியில் சென்றுகொண்டிருந்தார்கள். 

எதிரில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இவர்களைப் பார்த்து இந்தியில் கேட்டார்.

"
தேரா நாம் க்யா..?"

இருவரும் விழிக்க, அடுத்து மலையாளத்தில் கேட்டார்..

"
நிங்கள்ட நாமம் ஏதானு..?"

இதுவும் புரியாமல் போகவே, பயணி கன்னடத்தில் வினவினார்..

"
நிம்ம ஹெசுரு ஏனு..?"

இதற்கும் அருள் வடிவாக நாராயணசாமி & கோ விழிக்கவே மனம் தளராத பயணி கேட்டார்..

"
மீ பேரு ஏமி..?"

இதற்கும் பதில் இல்லை.. பயணி சோர்ந்துபோய் வேறுபுறம் திரும்பிக்கொண்டார். 

நண்பர் சொன்னார்,

"
இதுக்குதான் நான் எப்பவும் சொல்லிட்டு இருக்கேன்.. நமக்கு தமிழ் மட்டும் போதாது.. இன்னொரு மொழி கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்ன்னு..!

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
எதிரே இருக்கற ஆள்கூட 4 மொழி பேசறார்..ஆனால் என்ன புண்ணியம்..? நம்மகிட்ட வேலைக்காகாம வெறுத்துப் போயி உக்காந்திருக்கார் பாரு..!"



நாராயணசாமி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். 

அவருக்கும் அவரது முதலாளிக்கும் இருந்த பனிப்போர் காரணமாக, இம்முறை போனஸ் (எல்லாப் பிடித்தங்களும் போக,) 1500 ரூபாய்தான் கைக்கு வந்தது. 

இதனால் வெகுண்ட நாராயணசாமி, முதலாளி குறித்து இல்லாததும் பொல்லாததுமாக முதலாளியின் மனைவியிடம் வத்தி வைத்துவிட்டார். 

வத்தி புகைந்து வெடித்து பெரும் பிரச்னை ஆகிவிடவே, பயந்துபோன நாராயணசாமி ஒரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கப் போனார்.

எல்லா விவரத்தையும் கவனமாகக் கேட்ட பாதிரியார் சொன்னார்..

"
மகனே.. நீ பெரும் பாவமிழைத்துவிட்டாய்.. உடனே 7 எலுமிச்சம்பழங்களை ஒரு கிளாஸ் தண்ணீரில் பிழிந்து அதைக் குடி..!

"
அதைக் குடித்தால் என் பாவங்கள் கழுவப்பட்டுவிடுமா ஃபாதர்..?" என்றார் நாராயணசாமி.

அதற்கு அந்த ஃபாதர் சொன்னார்,

"
அது எனக்குத் தெரியாது.. ஆனா ஒரு குடியக் கெடுத்துட்டு பாவமன்னிப்பு கேட்க வந்திருக்கும்போது கூட உன் முகத்தில் தெரியுதே.. ஒரு இளிப்பும் சந்தோஷமும்.... அது முதலில் ஓடிப்போகும்..!"


No comments:

Post a Comment