சமீபத்தில் வெளியான "லைப் ஆப் பை" திரைப்படம் எதிர்பார்த்ததை போலவே நான்கு ஆஸ்கார் விருதுகளை வாங்கிஇருக்கிறது.அதில் ஒன்று ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பிரிவுக்காக.இந்த விருதில் நம் தமிழகத்தை சேர்ந்த ஐந்து நபர்களுக்கு பங்கு இருக்கிறது.இது எத்தனை பேருக்கு தெரியும்?
ரிதம் அன் ஹியூஸ் ஸ்டுடியோவில் பணிபுரியும் பாலாஜி அன்பழகன், முகேஷ்குமார், அமர்நாத், செந்தில் மற்றும் இளம்பரிதி ஆகியோர்தான் அந்த பெருமைக்குரியவர்கள். படத்தின் பாதி கிராபிக்ஸ் வேலைகள் ஹைதராபாத்தில் தான் நடந்தது.கதைப்படி ஒரு பையன், ஒரு புலி கடலில் பயணம் செய்கிறார்கள்.இதுதான் கதை.இது நாவலாக பிரபலம் அடைந்திருந்தாலும்
சினிமாவாக எடுக்க யாருக்கும் தைரியம் இல்லை.இதை செட் போட்டும் எடுக்க முடியாது.கடலிலேயும் படம் பிடிக்க முடியாது.எனவே பாதி செட், பாதி ஸ்டுடியோ என்ற கலவையில் இந்த படம் தயாரானது.பிரம்மாண்டமான நீச்சல் குளம், அதில் அலைகளை உண்டாக்கும் வைபிரேட்டர் ,நடுவில் அந்த படகை செட் பண்ணியிருப்பார்கள்.
இதுவரை ஆக்சன் , திரில்,சைன்டிபிக் கதைகளுக்குத்தான் கிராபிக்ஸ் செய்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு தத்துவார்த்தமான கதைக்கு கிராபிக்ஸ் செய்வது இதுவே முதல் முறை.அதிலும் நம் தமிழர்கள் இதை செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு பெருமை.இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகளுக்காக மட்டும் உலகம் முழுக்க 700 பேர் வேலை பார்த்தனர்.
இந்தியாவின் மிக பிரம்மாண்டமான படத்தின் மொத்த செலவும், ஒரு ஹாலிவுட் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளுக்கே பத்தாது .எதோ இந்த படம்தான் இந்தியாவில் கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்பட்டது என நினைக்காதீர்கள். " நார்நியா , சூப்பர் மேன்,மம்மி 3,ஹல்க் போன்ற படங்களின் கிராபிக்ஸ் வேலைகளும் இங்கே நடந்திருக்கிறது என்கிறார் முக்கிய அணிமேட்டர்களில் ஒருவரான செந்தில்.
ஹாலிவுட் படங்களை பொருத்தவரை செலவும் அதிகம்,தயாரிப்பு காலமும் அதிகம்.ஆனால் தமிழில் மூன்று அல்லது நான்கு மாதங்களில் படத்தை முடித்து ரீலிஸ் செய்ய வேண்டும்.நம் ஆட்களிடம் திறமை இருக்கிறது.கொஞ்சம் பொறுமையும் , நிறைய பணமும் இருந்தால் வருடாவருடம் நாமும் ஆஸ்காரை அள்ளலாம்.என்ன சொல்றிங்க?
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக்
கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:
Post a Comment