சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Mar 2013

நீங்களும் ஹீரோயின் ஆகலாம்!
தினம் செய்து கொள்ளவேண்டிய குறிப்புகள் ..

முகம் கழுவணும்..இத சொல்லத்தான் இத்தனை பெரிய கட்டுரையா என்று முறைக்காதீங்க..குளிர்ந்த தண்ணீரில் அவ்வபொழுது கழுவணும்.அப்போது அழுக்குகள் உடனே போய் பளிச்சுன்னு இருக்கும்..அதான் எனக்கு தெரியுமேன்னு சொல்றது கேக்குது. இனிமே அதை ..தெ.அப்படின்னு சுருக்கி சொல்லுவோம்.

மைல்ட் பேஸ்வாஷ் வாங்கி தினமும் இரு தடவை கழுவணும்.இதுக்கு பேரு க்ளேன்சிங் ..

பிறகு டோனிங் என்னமோ,ஏதோ இல்லகடையில் கிடைக்கும் பன்னீர் வாங்கி (அதாங்க பன்னீர் சொம்பில் இருக்குமே அதே பன்னீர்தான் )பஞ்சால் ஓத்தி எடுக்கணும் .முகத்தை அல்ல..பன்னீரை ..அதுக்கு பேர்தான் டன்,டடன்..டோனிங்....தெ.ம்ம்ம்ம் ..புரியுது.

அப்புறம் வெயில்ல போனா சன் க்ரீம் ..போடணும்..முகத்துலங்க ..வீட்டுல இருந்தா டே க்ரீம்..போட்டுட்டு என்னது .,தெ….வா அதுக்கு அப்புறமும் நான் சொல்லித்தான் ஆவணும்.கட்டுரை கொடுக்கணும் இல்லை.உங்களுக்கு தெரிஞ்சா கூட .,தெ,.சொல்லிட்டு பேசாம இருங்க..குறுக்க,குறுக்க பேசப்பிடாது.

அப்புறம் காம்பாக்ட் பவுடர் இல்லாட்டி அவரவர்க்கு பிடிச்ச வாசனை பவுடர்கள்..அழகா அம்சமா போடணும்..பூசினது தெரிஞ்சும் தெரியாம இருக்கணும்..திட்டு,திட்டாவான்னு கேட்டா கோபம் வந்து திட்டிடுவேன்.நான்தான் அழகு குறிப்புகள் சொல்லிக்கிட்டு இருக்கேன்ல..பேசாம கேக்கணும்..என்னது ..தெ வா..சரி,சரி மேலே சொல்றேன்..

அப்புறம் லிப்ஸ்டிக் ..லேசா இட்டுக்கனும்..ஒரு அழகு இருக்கும்..பழக்கம் இல்லாவிட்டால் வேண்டாம்..ஆனால் வெளிய போறப்ப லேசா லிப்ஸ்டிக் இட்டுகிட்டு போனா ஒரு அழகுதான்.

அப்புறம் என்ன கண்ணுக்கு மை எழதறதுதான். யார் வேணாலும் எழுதலாம்..ஆனா கண்ணுல அழகா எழுதணும்..பார்த்து கல்யாணம் ஆயிடிச்சின்னா வீட்டுகாரர்கிட்ட மட்டும் எழுத சொல்லிடாதீங்க..அப்புறம் ஒண்ணுமில்லம்மா கை லேசா ஒரே ஒரு நூல் ஸ்லிப் ஆனது தப்பான்னு கேப்பார்..கண் ஜாக்கிரதை


அப்புறம் எந்த உடையா இருந்தாலும் சரியான அளவில் வாங்கி உடுத்தி ,சரியான நகைகள பொருத்தமா போட்டு ..கடைசியா நிறைய பேர் விடற விஷயம் செருப்பும்,கைப்பையும் ..அது இரண்டும் உடைக்கு பொருத்தமா இருக்கணும்.என்னது கிளம்பியாச்சா ..இருங்க கட்டுரை இன்னும் இருக்கு ..இது தினமும் செஞ்சுகிறது..விசேஷ நாட்கள் குறிப்பு வேணுமில்ல ....தெ.வா ? நான் சொல்லிட்டேன் பெரிய கட்டுரை எழுதறேன்னு ..எனவே குறிப்பு போடாம விடபோறதில்ல..

விசேஷ நாட்களிலும் முகம் கழுவி,ஓத்தி எல்லாம் செஞ்சபுரம் பவுண்டேஷன் போடணும்..அஸ்திவாரம் ஸ்ட்ராங்கா இருக்கனும்னு போட்டா முகத்தை பார்க்க யாரும் இருக்க மாட்டாங்க.அழகா குழைச்சு பரவலா தெரியாம பூசணும்..கருவளையம் இருக்கிறவங்க கன்சீலர் முதலில் போட்டுகிட்டா நல்லது.பிறகு காம்பாக்ட் பவுடர் ..மூக்கை சுற்றியுள்ள பகுதிகளில் அழுத்தமாகவும்,முகம்,கழுத்தில் பரவலாகவும் போட வேண்டும்.

கண் மேக் அப் மிக்க முக்கியம் .கண்ணை அழகா காமிக்கணும்.முதலில் காஜல் போடலாம் ..இல்லாவிடில் -லைனர் சிலர் இமையிலும் போட்டுக்கொள்ளலாம் ..அது கண்ணை இன்னும் பெரிதாக,பளிச்சுன்னு எடுத்து காமிக்கும்.

இமை முடிகள் கீழே,மேலே கவனமா மஸ்காரா போடணும்.நல்ல கம்பெனி மஸ்காரா போட்டா ஈஷி கொள்ளாமல் இருக்கும்.நல்லா விரித்து அழகா போட்டா இமையின் அழகு தூக்கி காட்டும்.

-ஷேடோ..உடைக்கு பொருத்தமான வண்ணத்தில் -ஷேடோ போடணும்..இப்போ இரு வண்ணத்தில் இமையின் மேல் ஷேடோ போடுகிறார்கள் .

அடுத்து லிப் லைனர்..உதடு பகுதியை சரியாக லைனர் வைத்து வரைந்து கொண்டால் லிப்ஸ்டிக் போடும் பகுதி சரியாக இருக்கும்.பிறகு தேவையான வண்ணத்தில் சிலருக்கு அடர் வண்ணம் ,சிலருக்கு சிவப்பு,சிலருக்கு எந்த வண்ணமாக இருந்தாலும்..ஆனால் பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்து போட வேண்டும்.ஒரு தடவை லேசாக போட்டுவிட்டு விழாக்கு தகுந்த மாதிரி இன்னொரு முறை அழுத்தமாக போட வேண்டும்.மறக்காமல் கடைசியாக லிப் கிளாஸ் போட வேண்டும்..மேட்,கிளாசி இரண்டும் கிடைக்கும் .

-ப்ரோ பென்சில் வைத்து புருவத்தை சரி செய்து கொள்ள வேண்டும்.

முக்கியமான பார்ட்டி,விழா என்றால் கூந்தலை மறக்காமல் ப்ளோ ட்ரை..அதாங்க ஹேர் ட்ரையர் வைத்து சரியாக ஸ்டைலை செட் செய்துகொண்டு போகணும்.

பிறகு சரியான பார்ட்டி டிரஸ்,தகுந்த நகை,செருப்பு,நவீன பொருத்தமான கைப்பை எல்லாம் சேர்ந்தா பார்ட்டி ஹிரோயின் நீங்கதான்.

வாரத்துக்கு ஒரு முறை ஸ்க்ரப் போட்டு தேய்த்து கழுவினால் முகதுவாரங்களில் இருக்கும் அழுக்குகள் சுத்தமாகும்.பிறகு டோனிங் ,மாய்ஸ்ட்ரைசர் இல்லாவிடில் வழக்கம் போல க்ரீம் போட்டு கொள்ளலாம்.

இருவாரம் ஒருமுறை ஐப்ரோ செய்து கொள்ள வேண்டும்.மாதம் ஒரு முறை பேஷியல் ,manicure ,pedicure ..கை,கால்களுக்கு தேவையானவர்கள் செய்து கொள்ளலாம்.

இரு மாதம் ஒருமுறை ப்ளீச்சிங் செய்யலாம்.பிறகு தேவையான பொழுது வாக்சிங் செய்ய மறக்க வேண்டாம்.

நிறைய தண்ணீர்,பழம்,காய்கறிகள் உட்கொள்வது,எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது என்று சரியான ஆரோக்கியமான உணவுகளை உண்டால் உள்ளே சுத்தமாகி வெளியேயும் அழகு மிளிரும்.

அதான் எனக்கு தெரியுமேன்னு சொல்லிகிட்டே இருந்தீங்க..நடுவுல காணுமே ..ஓஹோ நான் சான்ஸ் கொடுக்காம இருந்துட்டேனா..அப்படிதாங்க நான் பேச ஆரம்பிச்சா பதிலுக்கு சான்ஸ் கொடுகறதே இல்ல..ஏன் தெரியுமா ரொம்ப கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியாது ..அதான் ரகசியம்.எப்பூடி.விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment