எல்லாத்தையும் குறை சொல்லிட்டே போறது ரொம்ப ஈஸி.. ஆனா இந்தியான்னாலும் சரி.. தமிழ்நாடுன்னாலும் சரி.. அது நாமளும் சேர்ந்தது தான்..!!
பெட்ரோல் விலை ஏறுது.. அதை தடுக்க நம்மளால முடியாது.. ஆனா அந்த பெட்ரோல் உபயோகத்தை குறைக்க நம்மளால முடியும்..!!
"கடைத்தெருவுக்கு போறதுக்கு சைக்கிள்ல போங்க.. ஊருக்குள்ள போறதுக்கு பைக்ல போங்க.. ஊருக்கு வெளிய போறதுக்கு கார்ல போங்க"...!!
பாத்ரூம் போறதுக்கு கூட கார்ல போற ஆட்கள் நிறைய இருக்காங்க..
உங்க கிட்ட கார் இருக்கு நீங்க பெரிய மில்லியனர் தான்.. பரவால்லை ஆனா இயற்கை வளத்தை உங்க பணத்தை வச்சி வாங்க முடியாதே.. எல்லா மக்களுக்கும் சுகாதாரம் இல்லேன்னா நோய் பரவிடுமே..!!
நான் பலமுறை எழுதியிருக்கிறேன். சூரிய ஒளி மின்சாரம் பற்றி. அதுக்குரிய வழிமுறைகள் என்னென்னு கண்டுபிடிப்போம். அதை கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்த முயற்சி செய்வோம்..!! ஃபேஸ்புக்க வச்சி ஒருத்தனோட குடியயையே கெடுக்க முடியும்கிறப்ப.. இதே ஃபேஸ்புக்கை நாம உபயோகமா சில விஷயங்களுக்கு யூஸ் பண்ணலாமே..!!
அப்புறம் சமையல் எரிவாயு.. குப்பையில இருந்து சமையல் எரிவாயு உற்பத்தி பண்ண முடியும்னு எத்தனை பேருக்கு தெரியும்...??
எங்க வீட்டுல சாண எரிவாயு இன்னைக்கும் உபயோகத்துல இருக்கு.. அதுக்கு நாங்க செலவழிக்கிறது டெய்லி 10 நிமிஷம்..!!
இந்தியால புரளிய விட மலிவா கிடைக்கிறது குப்பை தான்... அந்த குப்பைய எரிச்சி சுற்றுச்சூழலை தான் நாம மாசு படுத்துறோம்.. ஆனா அதை உபயோகமான சமையல் எரிவாயுவா மாத்தலாமே..
ஆல்கேங்கிற பாசி ஒரு மணி நேரத்துல 2 மடங்கா பெரும்.. அதாவது 5 கிலோ பாசிய தண்ணில போட்டா 1 மணி நேரத்துல 10 கிலோவாயிடும்.. அதுல இருந்து தான் பயோ-கேஸ் உற்பத்தி பண்றாங்க..
குழந்தைகளுக்கு அரைகுறை டிரெஸ்ஸ போட்டு ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி எனக்கு ஓட்டு போடுங்க.. எனக்கு ஓட்டு போடுங்கன்னு போஸ்டர் ஒட்டுறதுல காமிக்கிற இண்ட்ரஸ்ட்டை நாம நம்ம்ளோட அத்தியாவசிய தேவைக்கு காட்ட மாட்டேங்குறோமே..
அந்த கட்சிக்காரன் என்னத்த கிழிச்சான்.. இந்த கட்சிக்காரன் என்னத்தை கிழிச்சான்னு கேள்வி மட்டும் கேக்குறோமே தவிர.. நாம என்னத்தை கிழிச்சோம்னு யாராவது யோசிச்சிருக்கோமா..?? விலைவாசி உயர்வுல இருந்து சுற்றுப்புறச்சூழல் மாசு வரைக்கும் நாம தான் காரணம்னு ஏன் யோசிக்க மாட்டேங்கிறோம்..???
ஊர் சுத்தமாயில்லை. தெரு சுத்தமாயில்லைன்னு மேயரையும்,முனிசிபாலிட்டியையும் குறை சொல்றோமே.. நம்மள்ள எத்தனை பேரு குப்பைத்தொட்டில போய் குப்பைய கொட்டுறோம்.. ஏன்பா.. குப்பை அள்ளுறவங்களும் மனுஷங்கதானே... பெருசா தீண்டாமை அது இதுன்னு பேசுறீங்க.. ஆனா மக்கள் செய்யுற இந்த LKG level தீண்டாமைய ஏன் யாரும் பேசவே மாட்டேங்கிறீங்க..??
ஓரு சின்ன விஷயம்... வீட்டுல நாம ரெண்டு குப்பைத்தொட்டி வச்சி ஒன்னுல ப்ளாஸ்டிக் கழிவுகளையும்.. இன்னொன்னுல உணவுக்கழிவுகளையும் போட்டு தனித்தனியா கொட்டுனாலே போதும் ரெண்டு வருஷத்துல இந்தியா வல்லரசாயிடும்.. உணவுக்கழிவுகள்ல இருந்து சமையல் எரிவாயு தயாரிக்க முடியும்.. ப்ளாஸ்டிக் கழிவுகளை வச்சி தரமான சாலைகளை போட முடியும்..!! இந்தியால சாலைகளே இல்லாத ஊர்கள் எத்தனை இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு...???
அப்புறம் மின்சாரம்.. அரசாங்கம் 24 மணி நேரம் மின்தடைய அமுல்படுத்தினாலும் மின்சாரத்தை சேமிக்க முடியாது.. ஏன்னா 65% பேர் வீட்டுல இன்வெர்ட்டர் வச்சிருக்காங்க.. அதனால மின்தடை இருந்தாலும் இல்லாட்டியும் ஒரே செலவு தான்.. ஆனா நாம சோலார் இன்வெர்ட்டர் உபயோகப்படுத்த ஆரம்பிச்சா.. 60% மின்சாரத்தை அதிலிருந்தே பெற முடியும்.. மிக்ஸி.கிரைண்டர், வாஷிங் மிசின் போன்ற ஹெவிடியூட்டி சாதனங்களுக்கு மட்டும் வீட்டு மின்சாரத்தை உபயோகிக்கலாம்.. இதனால மொத்தமா தமிழ்நாடு முழுக்க 60% மின்சாரத்தை நிச்சயமா சேமிக்க முடியும்.. அது மட்டும் போதாது.. பகல் நேரங்களில் ஜன்னல் கதவை திறந்து வைங்க. சூரிய ஒளி உடம்புக்கும் நல்லது வெளிச்சமாகவும் இருக்கும்.. தேவையில்லாத ரூம்ல ஓடுற பேன், லைட்டை கவனமா ஆஃப் பண்ணுங்க.. இப்படி சின்ன சின்ன சேமிப்புகள் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்..!!
அப்புறம் பணம்.. மின்சார சேமிப்பு, பெட்ரோல் சேமிப்பு இதெல்லாம் கடை பிடிச்சா மாசா மாசம் கண்டிப்பா அட்லீஸ்ட் 500 ருபாயாவது சேமிக்க முடியும்.. அதுக்கப்புறம் சரக்கு.. அது இல்லாம இருக்க நிறைய பேரால முடியவே முடியாது.. நாள் முழுக்க உழைச்சி நைட்டு டாஸ்மாக்ல குடுக்கணும்னு என்ன தலையெழுத்தாய்யா..

அப்புறம் தங்கம்.. அப்படி என்ன மோகமோ தெரியலை இதுல.. உலகத்துல விக்காம கிடக்குற எந்த ஒரு பொருளையும் பொண்ணுங்களுக்கும் தாய்மார்களுக்கும் புடிக்கிற மாதிரி செஞ்சிட்டா போதும்... அதோட விலை வான் அளவுக்கு உயர வச்சிடலாம்.. ப்ளீஸ் தயவு செய்து அது மேல உள்ள மோகத்தை குறைங்க.. மனுஷனுக்கு கிடைக்கிற மரியாதைய விட அதுக்கு தான் நிறைய மரியாதை கிடைக்குது...!!!
அரசாங்கத்து கிட்ட ஆபிஸர்கள் கிட்ட அதை செய்யணும் இதை செய்யணும்னு எதிர்ப்பார்க்குற நாம ( அவங்க எதையுமே செய்யலேங்கிரது வேற விஷயம்) நம்மளால இயன்ற அளவுக்கு சில நன்மைகளை சமுதாயத்துக்கு செய்வோமே..!!
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக்
கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
No comments:
Post a Comment