சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Mar 2013

தி கவுண்டர்பிடர்ஸ் - பீரியட் மூவி


2007  இல் வெளிவந்த ஒரு அழகு படம். நேற்று இரவு 1.40 வரை பார்த்ததில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் கண் எரிச்சல் அவ்வளவு தான். என்ன ஒரு நேர்த்தியான கதை,மற்றும் அற்புத கதை களம். 

ஹோலோகாஸ்ட் எனப்படும் பேரழிவு (யூத படுகொலைகள்) பட வரிசைகளில், யூதர்கள் அடுத்த நாள் வாழ்கையை வாழ்வோமா என்று தெரியாமல் தினம் தினம் செத்த கதை. உணர்வு பூர்வமாய் ஆக்கிரமித்து விட்டது இதன் ஈர்ப்பு.
                         
நம் கதா நாயகன் சாலமன் எனப்படும் சாலி. கமல், அஜீத், அல்லது ஹாலிவுட் அழகர்கள் மாதிரி இல்லாமல், கொஞ்சம் கூன்,தலை முன்னால் வழுக்கை,நீள முகம், நடை கொஞ்சம் சுமார். சில சமயம்,சார்லி சாப்ளின் அழகு என்று கூட சொல்லலாம். நடிப்புக்கு , அனைவருக்கும் செம வாய்ப்பு. சும்மா சொல்லகூடாது, கிளப்பு கிளப்பு என்று தூள் பண்ணியிருக்கிறார்கள். 

சரி கதைக்கு வருவோம்.
நம்ம சாலி, நேர்த்தியான ஒரு கள்ள நோட்டு ஆர்டிஸ்ட்.நாஜி ஜெர்மனியில், கேளிக்கை, கூத்து என்று இருக்கும் போது ப்ரேட்றிச் ஹெர்சாக் தலைமையிலான நாஜிகளால் பிடிக்கப்பட்டு, மௌதாஉசேன் கேம்ப்க்கு அனுப்ப படுகிறான். அங்கு , யூதர்களை ,நாயை விட கேவலமாக நடத்தப்பதுவதும் ,நாஜி வீரர்களால் பெண்கள் மற்றும் ஆண்கள் கொல்லபடுவதை பார்க்கும் போது, பதறுகிறது நமக்கு.

சாலி... மௌதாஉசேன் கேம்பில், நாஜி மிலிடரி தலைவர்களின் குடும்ப போடோக்கள் வரைய, ஒரு சித்திரம் வரைந்து கொண்டிருக்கும்போது வேறு காம்புக்கு அவனை மாற்ற போவதாய் அவனுக்கு,அறிவிக்க படுகிறது.

கூட்ஸ் வண்டியில், பட்டியில் அடிப்பது போல் அடைத்து கொண்டு போகின்றனர். ஒரு சிறிய கப்பில், சொர்க்கம் வரை நாறும் ஒரு சாப்பாடு தூக்கி எறிய படுகிறது. அடுத்த நாள் உயிரோடு இருக்க தின்னு தொலைகிறார்கள்.

சாச்சென்ஹாசன் கேம்புக்கு கொண்டு போகின்றனர். அங்கு அவனை கைது பண்ணிய,ப்ரேட்றிச் ஹெர்சாக் அவனையும், கூட வந்தவர்களையும் வரவேற்கிறான். முன் இறந்தவர்களின் கோட் கொடுக்கபடுகிறது, அவர்களின் பெயர் அதில் ஒட்டியும் இருக்கிறது. 
அங்கு தான் அவனுக்கு தெரிகிறது, ஒரு மிக பெரிய ஆபரேஷன் நடக்கிறது என்று.அந்த ஆபரேஷன் பெயர் பெர்ன்ஹர்ட். இங்கு ஜெர்மானியர்கள், இங்கிலாந்து பவுண்டு , அமெரிக்கா டாலர்கள் அடிக்க முயற்சி செய்கின்றனர். நல்ல வசதியான தங்குமிடம் எல்லாம் கிடைக்கிறது. சாலி க்வாலிட்டி கண்ட்ரோலுக்கு போக...

இங்கிலாந்து பௌண்ட் அடித்து விடுகிறார்கள். அதற்கு பரிசாய் ஒரு டேபிள் டென்னிஸ் போர்டு. அதை ஒரு நாள் விளையாடும் பொது, சுவற்றுக்கு அந்த பக்கம், நாஜிகள்....கதற கதற ஒருவனை கொலை செய்கின்றனர்.
                         
ஹிம்லர், டாலர் அடிக்க சொல்ல, யூதர்களுக்குள்ளேயே சண்டை வருகிறது, இதை செய்வது தவறென்று. 5 குண்டுகள் டேபிள் மேல் வைத்து...5 பேரையும் கொன்று விடுவேன் டாலர் அடிக்காவிட்டால் என்று ப்ரேட்றிச் ஹெர்சாக் மிரட்டிக்கொண்டிருக்கும்போது, சாலி அடித்த டாலர்களை அவனிடம் கொடுக்க...ஐவரின் தலை தப்புகிறது.

கொஞ்ச நாளிலே இந்த மெஷின் எல்லாவற்றையும் மூட்டை கட்டி, ஆல்ப்ஸ் மலை குகையில் ஒளிக்கின்றனர். பிறகு எல்லா வீரர்களும் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியால் ஓடிவிட..இவர்கள் வெளி உலகை பார்கின்றனர்.

இதில் சொல்லபடும் விஷயங்கள் மிக நுண்ணியமாய் சொல்லப்பட்டும், வசனத்தோடு காட்டப்படும் விஷயங்கள் கூர்மையாக உங்களை உணர்வின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது. 

டைம் பீரியட் மூவி... உங்களை அந்த கால கட்டத்திற்கு இழுத்து சென்று விடுகிறது. முக்கியமான விஷயம், காமரா..கருப்பு வெள்ளயுமில்லை, கலரும் இல்லை, பழய MGR படம் போல், நம்மை ஈர்த்து...பாருங்கள் அப்ப புரியும். மியூசிக், காஸ்டூம், எல்லாம் மெலிதாய், நுண்ணியமாய்,... 

சில காட்சிகள், யூதர்களை பிறப்பின் காரணமாய் சீரழிப்பதை நுண்ணியமாக, ஒவ்வொரு காட்சியினோடும், வசனத்திலும் சொல்லியிருப்பது, டைரக்டர் ஜீனியஸ் என சொல்லாமல் சொல்கிறது. 

சாலி, ரஷியன் படைகள் வார்சா வரை வந்ததை கேட்கும்போது கொஞ்சம் பல்லை காட்ட..சாலி கக்கூஸ் கழுவும்போது, ஒரு நாஜி அவன் மேல் மூத்திரம் அடிப்பதும், பின்னர், சாலி முதன் முறையாய் தன்மேல் கோவ பட்டு ஒரு வாஷ் பசின் உடைப்பதும்...கிளாஸ்...
தப்பித்த ஒரு யூதனை,சிகரட் பிடிக்க செய்து, மண்டிபோட்ட பின் பாயிண்ட் ப்ளங் ரேஞ்சில் நெற்றி பொட்டில் சுடுவது வரை.. நம்மை பத பதைத்து கட்டி போட்டு விடுகிறது...

இப்படி தானே தமிழர்களையும் கொன்றிருப்பார்கள் என்று நினைத்த போது, கனமாகி விடுகிறது மனது... தலையில் ஒரு பையில் இறந்த கால சேமிப்புகளையும், இடுப்பில் எதிர்காலத்தையும், நிகழ்காலமாய் தண்ணீரில் நடக்கும் தமிழச்சியை பார்க்கும் போது, இந்திய இறையாண்மை பற்றி ஒரு கெட்டவார்த்தை மனதில் தோன்றி மறைகிறது.

கடைசியில்....நம் கதாநாயகன் எல்லா டாலரயும் சூதாட்டத்தில் தோற்று, கடற்கரையில் அமர, அழகாய் ஒரு பெண் அவனுடன் பேச..பின் ஒரு சின்ன நடனத்தோடு....முடிகிறது...

ஒரே வார்த்தை அற்புதம்....!


No comments:

Post a Comment