சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Mar 2013

கல்யாணத்தில் மாப்பிள்ளையே நான்தான்


சைக்கிளில் சென்று கொண்டிருந்த நாராயணசாமி சாலையில் சென்று கொண்டிருந்த பெண் மேல் இடித்துவிட்டார்.

பெண் : பெல் அடிச்சுருக்கலாமில்ல?

நாராயணசாமி: சைக்கிளால இடிச்சது பத்தாதா? பெல்லாலயும் அடிக்கணுமா?


வேகமாக கார் ஓட்டி சென்றதால் போலிசாரிடம் மாட்டிக் கொண்டார் நாராயணசாமி.

"
இன்ஸ்பெக்டர், நான் ஏன் வேகமாகப் போனேன் என்று சொல்ல விடுங்கள்."

"
வாயை மூடு. இப்போ அதிகாரி வந்துவிடுவார். அது வரை இங்கேயே காவலில் இரு."

"
இன்ஸ்பெக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா......"

"
வாயை மூடு, இல்லாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன்."

சில மணி நேரம் ஆயிற்று. மேலதிகாரி வரவில்லை. 

போலிஸ்காரர் சொன்னார், 

"
உனக்கு இன்று அதிர்ஷ்டம். அதிகாரியுடைய பெண்ணுக்கு இன்று கல்யாணம். அதனால வர்றப்போ சந்தோஷமா இருப்பார் ... அனேகமாக நீ அபராதம் இன்றி விடுவிக்கப்படுவாய்" என்றார்.

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
அப்படி நினைக்காதீர்கள். அந்தக் கல்யாணத்தில் மாப்பிள்ளையே நான்தான்."


நாராயணசாமி, சுப்புசாமி, குப்புசாமி மூன்று பேரும் நரகத்தின் வாயிலில் நின்றார்கள். 

அப்போது ஒரு கதவு திறந்து குள்ளமான உருவத்துடன், அவலட்சணமான பெண் ஒருத்தி தென்பட்டாள். 

சைத்தான் பெண் குப்புசாமியிடம், 

"
நீ பாவம் செய்திருப்பதால் இனிமேல் இந்தப் பெண்ணுடன்தான் வாழவேண்டும்" என்று சொன்னது.

அடுத்த அறையில் மிகவும் உயரமான உருவத்துடன், அவலட்சணமான பெண் ஒருத்தி இருந்தாள். 

குப்புசாமியைப் பார்த்து அந்தசைத்தான் பெண்,

"
நீ செய்த சொல்லிமாளாதது ...எனவே இனிமேல் நீ இவளுடன்தான் வாழவேண்டும் ... அதுதான் உனக்கு தண்டனை" என்றது.

மூன்றாவது கதவு திறந்தபோது, ரம்பை போன்ற அழகான பெண் தென்பட்டாள். 

நாராயணசாமிக்கு ரொம்ப ஆச்சரியம்! தான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம் என்று!

சைத்தான் பெண் சொன்னது ... அந்த அழகான பெண்ணிடம்! 

"
நீ செய்திருக்கும் பாவத்திற்கு இவனோடுதான் நீ வாழ்நாளைக் கழிக்கவேண்டும் ... அதுதான் உனக்கு தண்டனை"

No comments:

Post a Comment