சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Mar 2013

கடைசி கோச்ச எடுத்து நடுவுல வெக்கச் சொன்னேன்


மத்திய அரசு காவல் துறை, எப்ஃபிஐ மற்றும் மத்திய புலனாய்வுத்துறை மூவருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் யார் மிகச் சிறந்தவர்கள் என்ற போட்டி நடத்தியது. 

காவல் துறை சார்பில் நாராயணசாமியும், எப்ஃபிஐ சார்பில் சுப்புசாமியும், புலனாய்வுத்துறை சார்பில் குப்புசாமியும் களத்தில் இருந்தனர்.

பிரதமர் மண்ணுசாமி ஒரு சோதனை செய்ய முடிவு செய்தார். காணாமல் போன முயலை ஒரு காட்டில் கண்டுபிடிப்பதுதான் சோதனை

மத்திய புலனாய்வுத்துறையைர் சேர்ந்த குப்புசாமி, காட்டிலுள்ள மரங்கள் செடிகள் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, "அப்படி ஒரு முயல் இல்லவே இல்லை" என்று அறிக்கை கொடுத்தார்.

எப்ஃபிஐ சுப்புசாமி கொடுக்கப்பட்டஇரண்டு வாரங்களுக்குப் பிறகும் முயலைக் கண்டுபிடிக்க முடியாமல் போக, காட்டை முழுதும் எரித்துவிட்டு, அங்குள்ள மிருகங்களையும், முயலையும் சேர்த்துக் கொன்றுவிட்டார். அதற்காக வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.

காவல் துறை நாராயண்சாமி ஒரு பலமாக அடிபட்ட வெள்ளைக் கரடியை பிரதமர் முன் கொண்டு வந்து நிறுத்தினார். ஏற்கனவே அடிபட்டு நொந்து போன அந்த வெள்ளைக் கரடி பிரதமரைப் பார்த்துக் கதறியது, 

"
ஆமாம், நான்தான் அந்த முயல்.. என்னை விட்டுவிடுங்கள்"


ஒருவர் : ட்ரெயின்ல கடைசி கோச்ல உக்காந்தாலே இதான் பிரச்சினை. டீ, காபி, டிபன் எதுவும் வரமாட்டேங்குது 

ற்றொருவர் : புகார் கொடுக்க வேண்டியதுதானே ?

ஒருவர் : கொடுத்தும் ஒண்ணும் பிரயோஜனமில்ல 

ற்றொருவர் : என்ன புகார் கொடுத்த? 

ஒருவர் : கடைசி கோச்ச எடுத்து நடுவுல வெக்கச்
சொன்னேன்


No comments:

Post a Comment