ஏ, படிக்காம மிஸ் பண்ணிடாதீங்க,அப்புறம் வருத்தபடுவீங்க.
விஜய் டிவி கோபிநாத்துக்கு பின் கோட்சூட்டில் வருபவர் இவர்தான்.
தூத்துக்குடி மாவட்டம் ஏறல் அருகில் திருவழுதினாடார்விளை என்ற ஊரை சேர்ந்தவர்.12 வயதில் தந்தையை பறிகொடுத்தவர் அம்மாவின் அன்பினால் வளர்ந்தவர்.
அருகிலுள்ள கிராமங்களில் நாடகம் பார்ப்பதே இவரது பொழுதுபோக்கு.பார்த்தது போதுமென்று 10 வயதில் முதல்முதலாக நாடகத்தில் நடித்தார்.பின்னர் "காமராஜர் கலைக்குழு " என்ற பெயரில் பக்கத்து கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் நாடகம் போடுவாராம்.கேஞ்சிகூத்தாடித்தான்.
நாடகம் போடுவது நடிப்பின் ஆர்வத்தினால்.மளிகைக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.நண்பர்கள் ஏத்திவிட சினிமா கனவு இவரையும் தொற்றிக்கொண்டது.மளிகைக்கடை வேலையில் சேர்த்த 500 ரூபாயை வைத்துகொண்டு சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார்.1984 ல் சென்னையை நோக்கி இமானின் முதல் படையெடுப்பு.முதலில் பாரதிராஜாவின் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார்.ஒன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.500 ரூபாய் முடிந்ததும் திரும்ப ஊருக்கு சென்றுவிடுவார்.
பின் துணிந்து சென்னையிலேயே தங்கி வாய்ப்பு தேடினார்.இடையில் சின்னசின்ன வேலைகளும் செய்தார்.வீட்டு வேலை,கார் கழுவ,சில சமயங்களில் காய்கறிகளும் விற்றிருக்கிறார்.வியாபாரம் முடிந்ததும் சினிமா வாய்ப்பு தேடுவதுதான். இதில் இடையில் திருமணமும் ஆனது.மனைவியின் உதவியினால் குடும்பத்தை சமாளித்தாராம்.இப்படியே 16 வருடங்கள் சென்றது.ஒரு பெண்குழந்தையும் பெற்றார்.
அப்போதுதான் விஜய் டிவியின் "கலக்க போவது யாரு?" நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்துதான் அவர் வாழ்க்கை மாறியது.டிவிக்களிலும்,சில திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.கோ,வேட்டைக்காரன்,
மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார்.தற்போது நான்கு படங்களில் சோலோ காமெடியனாக நடித்து கொண்டிருக்கிறார்.
திரைபடங்களை விட சின்னத்திரை தான் தன்னை வளர்த்தது என்கிறார் இமான் அண்ணாச்சி.விஜய் டிவிக்கு பின் மக்கள் தொலைக்காட்சியில் "சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே " நிகழ்ச்சி தான் நம் தமிழ்மக்களிடம் என்னை அறிமுகப்படுத்தியது என்கிறார்.பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக பெருமை படுகிறார்.
தற்போது சன்டிவியின் குட்டிசுட்டிஸ் நிகழ்ச்சி தன்னை அனைத்து குழந்தைகளின் மனதிலும் இடம்பெற செய்துவிட்டது என்று பூரிக்கிறார்.குழந்தைகளிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்,கொஞ்சம் அசந்தால் நம்மை காலி செய்துவிடுவார்கள்.என்னதான் சினிமா ஆசையில் திரிஞ்சாலும் குழந்தைகளுடன் பண்ணும் இந்த நிகழ்ச்சிதான் மனதிற்கு நிம்மதி தருகிறது என்கிறார் இமான் அண்ணாச்சி.
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக்
கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
இமான் அண்ணாச்சி... சிரிக்க, சிந்திக்க வைக்கும் அண்ணாச்சி...
ReplyDelete