சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Mar 2013

முத்தையா முரளிதரன் VS ஹென்றி ஒலெங்காமுத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சில் உலக சாதனையாளர் என்பது பலரும் அறிந்த ஒன்று.அந்த முரளீதரனின் பந்து வீச்சில் 400 வது விக்கெட்டாக வீழ்ந்தவர் ஹெனறி ஒலெங்கா.

ஜிம்பாப்வே நாட்டைச் சார்ந்த ஹென்றி ஒலெங்கா ஒன்றும் பெரிய கிரிக்கெட் வீரர் இல்லை என்றாலும் அவருடைய மனிதநேய செயல்பாட்டினால் பலரது கவனத்தைக் கவர்ந்தவர்.

ஜிம்பாப்வே அணியில் இடம் பெற்ற முதல் கருப்பர் இனத்தவர் ஒலெங்கா.ஜிம்பாப்வே ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்கா போன்று வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்தது.

ராபர்ட் முகாபே எனும் கருப்பர் நடுவில் ஒரு முறை தோற்று சில காலம் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக அதிபரான போது தன்னுடைய செல்வாக்கினை தக்க வைத்துக் கொள்ள கருப்பர்களை தூண்டி விட்டு சிறுபான்மை வெள்ளையர்களின் சொத்துக்களை அபகரிக்க வழி செய்தார்.நாட்டில் வெள்ளையர்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு நிலையை உருவாக்கினார்.

கிடைத்த வரைக்கும் லாபம் என்று கருப்பர்கள் வெள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களை அபகரித்த வேளையிலே ஒலெங்கா, ராபர்ட் முகாபேயை எதிர்த்து குரல் கொடுத்தார்.ஆன்டி ஃபிளவர் எனும் வெள்ளை இன வீரருடன் இணைந்து கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்.விளைவு ஹென்றி ஒலெங்கா, ராபர்ட் முகாபேயின் கோபத்திற்கு ஆளானார்.உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாய் நாட்டை விட்டு தப்பித்து வெளியே ஓட வேண்டியதாயிற்று.

தங்கள் முன்னோரை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையருக்கு தங்களுடைய கருப்பினத்தவரின் ஆட்சியிலே பாதுகாப்பில்லாத சூழல் ஒன்று உருவான போது ஹென்றி ஒலெங்கா எனும் இளைஞர் தன்னுடைய வளமான கிரிக்கெட் எதிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் மனிதநேயத்தை வெளிப்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியது அன்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் உலக சாதனைக்கு சொந்தக்காரர் என்ற புகழுக்கு சொந்தக்காரரான முத்தையா முரளீதரன் தன்னுடைய ஓய்வுக்கு பின்னரும் மனசாட்சியை பீரோவில் பூட்டி வைத்து விட்டு தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என தன்னுடைய சிங்கள எசமான விசுவாசத்தை வெளிக்காட்டியுள்ளார்.தங்களை நிறவெறியால் அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர் பால் மனிதநேயம் காட்டிய ஹென்றி ஒலெங்கா எங்கே? தங்கள் இனத்தை கொன்று குவித்த சிங்கள இனவெறியனுக்கு சாட்சி சொல்லும் முத்தையா முரளிதரன் எங்கே?

முத்தையாவின் உலக சாதனைகள் ஹென்றி ஒலெங்காவின் மனித நேயத்துக்கு முன்னால் நிற்க முடியுமா?அவரது கால் தூசிக்கு பெறுமானம் ஆகுமா?1 comment:

  1. முத்தையா - சிந்திக்க வேண்டிய கேள்வி...

    ReplyDelete