சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 May 2015

ஐ.பி.எல். தொடரில் சாகித் அப்ரிடியை விரும்பும் ரசிகர்கள்!

.பி.எல். தொடரில் எந்த வீரரை அதிகம் மிஸ் செய்கிறீர்கள் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சாகித் அப்ரிடியை மிஸ் செய்வதாக அதிக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி. இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்டத் தடையால், சாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களால் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் எந்த  வீரர்கள் விளையாடினால் போட்டி இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.

இதில் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி விளையாட வேண்டுமென்று 27. 20 சதவீதம் இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல்.தொடர் உருவாக்கப்பட்ட போது, சாகித் அப்ரிடி டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார்.
இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு ஆதரவாக 23.43 பேர் வாக்களித்துள்ளனர். குமார சங்கக்காராவுக்கு 16.62 சதவீத வாக்குகளும், தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் ஆம்லாவுக்கு 11.03 வாக்குகளும் கிடைத்துள்ளன.
முதல் பத்து இடங்களில் சாகிப் அல் ஹசன்,பிரென்டன் டெயிலர், ராஸ் டெயிலர் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். .

No comments:

Post a Comment