சென்னையில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியை அற்புதமான முறையில் பிராவோ ரன்அவுட் செய்ததுதான் சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 148 ரன்களையே எடுத்தது. எளிய இலக்கு என்பதால் பெங்களூரு அணி வீரர்கள் எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றையை ஆட்டத்தில் சென்னை அணி வீரர்களின் பீல்டிங் அருமையாக இருந்தது. பிரென்டன் மெக்கல்லம், பிராவோ, டுப்லெசிஸ் ஆகியோர் திறமையாக செயல்பட்டு ஒற்றை ரன்களை கட்டுப்படுத்தினர்.
பெங்களூருஅணியின் கேப்டன் விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் பொறுப்பை உணர்ந்து அணியை வெற்றிபாதைக்கு அழைத்து போய்க்கொண்டிருந்தார். கோலி இருந்த வரை வெற்றி பெங்களூரு அணியின் பக்கம்தான் இருந்தது. விராட் கோலி 44 பந்துகளை சந்தித்து 48 ரன்களை எடுத்திருந்த சமயத்தில் பிராவோ பந்துவீச வந்தார்.
பிராவோ வீசிய பந்தை அவருக்கு நேரே விராட் கோலி அடித்து விட்டு ரன் எடுக்க முன்னால் ஓடி வந்தார். ஆனால் அதற்குள் பந்தை மிக நேர்த்தியாக பிடித்த பிராவோ, விராட் கோலி கிரீசுக்கு வெளியே இருப்பதை கவனித்தார். அந்த சமயத்தில் மிக சமயோசிதமாக செயல்பட்டு பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்து விராட் கோலியை அவுட் செய்தார். விராட் கோலியை பிராவோ ரன் அவுட் செய்யவில்லையென்றார் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்க கூடும்.
விராட் கோலி அவுட் ஆகும் போது பெங்களூரு அணி 97 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து வந்த வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெறியேறிவிட பெங்களூரு அணியால் 124 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
No comments:
Post a Comment