சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 May 2015

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா? - மினி தொடர் ( பாகம்- 2 )

நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபொழுது போஸ் அயல் நாட்டில் இருந்தார். இருவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த மோதிலால் நேருவின் மரணம் குறித்து, போஸ் அந்தக் கடிதங்களில் எங்கேயும் ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. அது மட்டுமல்லாமல் பிப்ரவரி மாதம் இறந்துபோன மோதிலால் நேருவை, மார்ச் மாதத்தில் இறந்துபோனார் என்று தன்னுடைய சுயசரிதையில் தவறாகப் பதிவு செய்கிறார் போஸ். 

பாசிசத்தின் கட்டுப்பாடு, போஸை இந்தக் காலத்திலேயே ஈர்க்க ஆரம்பித்திருந்தது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை வர்ணிக்கிற பொழுது, ‘பாரீஸ் நகரம் நோக்கி எல்பாவில் இருந்து நெப்போலியன் புறப்பட்டது போல, ரோமை நோக்கி முசோலினி புறப்பட்டது போல’ தண்டி யாத்திரை இருந்ததாக வர்ணிக்கிறார். இந்தப் பாசிச பாசம் இறுதிவரை போஸிடம் தொடரவே செய்தது. 

உப்பு சத்தியாகிரகத்தை காந்தி திரும்பப்பெற்றது, போஸ் மற்றும் வித்தல்பாய் படேல் ஆகியோரை கடுமையாகக் கடுப்பேற்றியது. ஆஸ்திரியாவில் இருந்து கூட்டறிக்கை வெளியிட்டவர்கள், ‘மகாத்மா காந்தி ஒரு அரசியல் தலைவராகத் தோல்வியடைந்துவிட்டார் என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். காங்கிரஸ் இயக்கத்தை புரட்சிகரமான பாணியில் மாற்றும் புதிய தத்துவம், முறை தேவைப்படுகிறது. இதைச் சாதிக்க தலைமை மாற்றம் தேவை. மேலும் தீவிரவாதத்தன்மை கொண்டதாக ஒத்துழையாமை மாறவேண்டும்...' என்று நீண்டது அந்த அறிக்கை.

நேருவோ இந்தியாவில் காந்திக்கு அருகில் இருந்தார். வெகு வெறுமையாக உணர்ந்த நேரு, காதியை விற்றல், கைத்தறி நெய்தல், தையல் ஆகிய சமூகப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று காந்தி அழைத்ததில் அதிர்ந்துபோனார். அந்தக்காலகட்டத்தில் ‘இதுவா நாம் பின்பற்ற வேண்டிய அரசியல் செயல்திட்டம்? நானும், காந்தியும் வெகுதூரம் விலகிவிட்டோம். என்னையும், அவரையும் பிணைத்திருந்த எல்லா இழைகளும் அறுந்துவிட்டது. குத்தப்பட்ட வலியால் துடிக்கிறேன்’ என்று சொன்ன நேரு, காந்தியோடு வெளியுலகில் பிணைந்திருந்தாலும் மனதளவில் விலகிக்கொண்டு இருந்தார்.

இந்தத் தருணத்தில்தான் தனி வாக்காளர் தொகுதி விஷயத்தில் காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். நேரு கலங்கிப் போனார். தன்னுடைய பதினைந்து வயது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், ‘நான் மொத்தமாக ஆடிப்போயிருக்கிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. மோசமான செய்தி வந்திருக்கிறது. பாபு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார். நான் இனிமேல் அவரைப் பார்க்கவே மாட்டேனோ? இனிமேல் யாரிடம் போய் நான் சந்தேகம், அறிவுரை கேட்பேன். காயப்பட்டு இருக்கிறபொழுது, சோகமுற்று நிற்கிறபொழுது யாரிடம் அன்பான தேறுதலைப் பெறுவேன்?’ என்று புலம்பித் தள்ளினார்.
இதை கிட்டி குர்திக்கு எழுதிய கடிதத்தில் போஸ் கச்சிதமாகப் படம் பிடிக்கிறார் இப்படி- ’அவரின் மூளை ஒரு பக்கம் இழுக்கிறது, இதயம் வேறொரு திசையில் இழுக்கிறது. அவரின் இதயம் எப்பொழுதும் காந்தியுடன்தான் இருக்கிறது’ 

போஸ் ஐரோப்பாவில் இருந்த காலத்தில், இருமுறை முசோலினியை சந்தித்தார். ‘பிக் பாஸ்’ என்று அன்போடு முசோலினியைக் கொண்டாடிய நேதாஜி, அவரிடம் ‘நான் சீர்திருத்த முறையைவிட புரட்சிப் பாதையையே விரும்புகிறேன்’ என்று வாக்குமூலம் கொடுத்தார். அதை நோக்கி பயணப்படும் திட்டத்தை வகுக்குமாறு முசோலினி வழிகாட்டினார்.
1933-ல் லண்டனில் நடந்த மூன்றாவது இந்திய அரசியல் மாநாட்டில் பேசிய போஸ், ‘காந்திய முறையால் தீர்வு கிடைக்காது. அது சமரசம் செய்துகொள்கிறது. சமரசம் இல்லாத தீவிரவாதமே தீர்வு. அகிம்சையை நம்பாத, ஆட்சியைப் பிடிக்கும் கட்சி ஒன்றை உருவாக்கப்போகிறேன்... சோவியத் ரஷ்யா போன்ற மாதிரியைக் கொண்டு இந்தியா இயங்கும். அங்கே முதலாளிகளுக்கு இடமில்லை’ என்று முழங்கினார்.

ஜெர்மனிக்கு போஸ் பயணம் போனபொழுது, எப்படியாவது ஹிட்லரை சந்தித்துவிட துடித்தார். குறைந்தபட்சம் கெப்பல்ஸ் உடனான சந்திப்பு நிகழ்ந்துவிட்டால்கூட போதும் என்று அவர் எண்ணினார். இந்தியர்கள் பற்றிய கீழான பார்வையை தான் பேசினால் அவர்கள் மாற்றிக்கொள்வார்கள் என்று போஸ் நம்பினார். அவர் முனிச் நகரில் நடந்தபொழுது அவர் மீது கற்களை வீசி, ‘கருப்பன்!’ என்று குழந்தைகள் வசைபாடின. ஒரு கட்டத்துக்கு மேல், ஜெர்மானியர்கள் தங்களுடைய இனத்தூய்மைக் கொள்கையை விடமாட்டார்கள் என்று உணர்ந்த போஸ், ‘நீங்கள் உங்கள் இனவெறிக்கொள்கையை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இந்தியர்கள் பற்றிய கீழான பார்வையை மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள்.’ என்று ஜெர்மானிய அகாதமியின் இயக்குனருக்குக் கடிதம் எழுதினார்.

‘இந்திய தேசாந்திரி’ எனும் தன்னுடைய சுயசரிதையை எழுதுவதற்கு உதவ, யாரையேனும் தேடிக்கொண்டு இருந்த போஸ் தன்னைவிட பதிமூன்று வயது இளைய எமிலியை சந்தித்தார். திறமை, அழகு, ஆங்கிலப்புலமை மிகுந்த எமிலியிடம் மனதை பறிகொடுத்தார். தானே காதல் அத்தியாயத்தை துவக்கினார்.

போஸின் அப்பா இறந்துபோக, கண்ணீரோடு வந்து தந்தையின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டார். பின்னர் ஐரோப்பா திரும்பினார். இந்த ஐரோப்பா திரும்பும் காலத்தில் மீண்டும் முசோலினியை சந்தித்து தன்னுடைய சுயசரிதையான, ‘இந்திய தேசாந்திரி’ நூலை முசோலினிக்குப் போஸ் பரிசாகக் கொடுத்தார்.

இன்னொருபுறம் நேருவின் மனைவி தன்னுடைய வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் நின்றுகொண்டு இருந்தார். மேற்கத்திய பாணியிலான வாழ்க்கைமுறை கொண்ட நேருவின் குடும்பத்தில், கமலா வெகுகாலம் ஒட்ட முடியாமல், ஆங்கிலம் பேசத்தெரியாமல் சிரமப்பட்டார். இது ஒருபுறம் என்றால், உணர்வுப்பூர்வமாக எதையும் மனைவியிடம் வெளிப்படுத்த தெரியாத நேரு, இன்னொருபக்கம் படுத்தி எடுத்தார்.
‘எதுவாக இருந்தாலும் என்னோடு உறவில் இருக்கும் இன்னொரு நபரே விஷயத்தை துவங்க வேண்டும்’ என்று சொந்த வாழ்க்கையில் ஆசைப்படுவதை நேரு சொல்லியிருக்கிறார். கமலா, காசநோயாலும், கருக்கலைப்புகளாலும் உடல்நலம் குன்றிப் போராடிக்கொண்டிருந்தார். அவரை ஐரோப்பாவில் வைத்து மருத்துவம் பார்க்க நேரு கிளம்பிச் சென்றபொழுது, அங்கே போஸ் உடனிருந்து உதவிகள் செய்தார்.

மனைவி மரணப்படுக்கையில் இருந்தபொழுதும், எப்படி கடவுளின் மீது இவள் இன்னமும் பற்றோடு இருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார் நேரு. கமலா இறந்த பிறகு வெளிவந்த தன்னுடைய சுயசரிதையை அவருக்கு அர்ப்பணம் செய்தார். கமலாவின் இறுதிச்சடங்கில் லாசானே நகரில் போஸும் கலந்து கொண் டார் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

போஸ் இப்பொழுது நேருவுடன் இணைந்து பெரிய விஷயங்கள் செய்ய முடியும் என்று எண்ணினார். ‘காந் தியுடன் உங்கள் அளவுக்கு நெருக்கமானவர் யாருமில்லை. உங்களைப் பகைத்துக்கொள்ளும் எதையும் அவர் செய்ய மாட்டார்’ என்று நேருவுக்கு எழுதினார். இந்தியா திரும்பினால் ஆங்கிலேய அரசு கைது செய் யும் என்கிற சூழலில் என்ன செய்யலாம் என்று நேருவிடமே ஆலோசனை கேட்டார். முதலில் நேரு இந் தியாவுக்கு வரவேண்டாம் என்று அறிவுரை தந்தாலும், பின்னர் காந்தி முதலியோரின் வழிகாட்டுதலில் போஸை இந்தியாவுக்கு திரும்புமாறு அழைத்தார்.
எமிலியை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால் போஸ் காதல் தீயால் வெம்பினார். ‘பனிப்பாறையும் உருகும். இந்தியாவில், என் வாழ்க்கை சிறையில் கழியலாம். நான் சுட்டோ, தூக்கிலிடப்பட் டோ கொல்லப்படலாம். எப்படி இருந்தாலும் உன்னையே எண்ணிக்கொண்டு இருப்பேன். உன் காதலை அமைதியாக நினைத்து ஏங்குவேன். உன்னை மீண்டும் பார்ப்பேனா என்று தெரியாது. நீ எப்பொழுதும் என் மனம், எண்ணங்கள், கனவுகளில் வாழ்கிறாய். விதி நம்மை இந்தப் பிறவியில் பிரித்தால் நாம் அடுத்தப் பிறவியில் இணைவோம். 

நமக்குள் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா? என் தேசம், மக்கள், கலாசாரம், பழக்கங்கள், தட்பவெட்பம் எல்லாம் மாறுபட்டது என்றாலும், ஒரு கணத்தில் நாடுகளைப் பிரிக்கும் இவற்றை மறந்துவிட்டேன். நான் உனக்குள் இருக்கும் பெண்ணை நேசிக்கிறேன். உனக்குள் இருக்கும் ஆன்மாவை நேசிக்கிறேன்’ என்று எழுதிய காதல் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் சொன்னார். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. (சுகாதா போஸ் எழுதிய போஸின் வாழ்க்கை வரலாறு).

இருவரும் தாங்கள் காதலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் பன்மையில் தங்களை அழைத்துக்கொண்டார்கள். பாக்ஸிங் நாள் அன்று போஸ் எமிலியை ரகசியமாக மணந்து கொண்டார். எந்தக் கடிதத்திலும் எமிலியைக் கடிந்து கொள்ளாத போஸ், வேறு புத்தகங்களை இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்குமாறு எமிலி கேட்டபொழுது மட்டும், ‘இருக்கின்ற புத்தகங்களை முதலில் படித்து முடி!’ என்று கோபிக்கிறார். 

போஸ் 1936-ல் இந்தியா திரும்பியபொழுது நேரு மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்கப்பட் டிருந்தார். போஸ் கைது செய்யப்பட்டதும் இந்தியா முழுக்க ‘சுபாஸ் போஸ்’ தினம் அனுசரிக்க நேரு அழைப்பு விடுத்தார். நேருவிடம்கூட தன்னுடைய காதல் வாழ்க்கையைப் பற்றி போஸ் மூச்சு விடவில்லை. முசோலினி பற்றி பெருமிதமாக எழுதிக்கொண்டிருந்த போஸ், நேருவிடம் கம்யூனிச புத்தகங்களைக் கடன் கேட்டார். ‘போஸுக்கு தான் ஒரு முசோலினி என்று உள்ளுக்குள் நினைப்பு’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறித்திருக்கிறார் நேரு. 

கம்யூனிசம், பாசிசம் இரண்டையும் கவனத்தில் கொண்ட போஸ் பாசிசம் மீது பற்றுகொண்டவராக இருந் தார். ஏன் இந்தியாவில் கம்யூனிசம் எடுபடாமல் போகலாம் என்பதற்கு காரணங்களை அடுக்கியவர், பாசிசம் மீது அப்படி எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. ஆஸ்திரியாவில் அவர் தங்கியிருந்தபொழுது மிகக் கடுமையான நுரம்பெர்க் சட்டங்கள் யூதர்கள் மீது பாய்ச்சப்பட்டன.

‘யூத செல்வாக்கை ஒழிக்கவே நாஜிக்கள் முயல்கிறார்கள் என்று எண்ணுகிறேன்’ என்று எளிமையாக அத்தனை கொடூரங்களையும் அவர் கடக்கிறார். நேரு காங்கிரஸ் செயற்குழுவில் யூத அகதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க நாம் முயல வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தபொழுது, ‘வெளியுறவுக் கொள்கை பற்றிய தெளிவான, யதார்த்த புரிதல் இல்லாமல் நேரு இப்படியெல்லாம் தீர்மானம் கொண்டுவருகிறார்.’ என்று வருத்தப்பட்டார்.
போஸ் தன்னுடைய சுயசரிதையில், ‘தொடர் எதிர்ப்பு ஆயுதக் கிளர்ச்சியாக மாறும். காந்தி ஒரு சீர்திருத்தவாதி, விடுதலை வாங்கித்தரும் தலைவர் இல்லை.’ எனவும், ‘இந்திய நாகரீகம், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் சமூக-அரசியல் இயக்கங்களின் தாக்கங்களை உள்வாங்கித் தன்னுடைய வளர்ச்சியை அமைத்துக்கொள்ளும் திட்டத்தைப் போருக்கு பிந்தைய தன்னுடைய செயல்திட்டமாகவும் முன்வைக்கிறார். போஸின் சுயசரிதை இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

நேருவின் சுயசரிதை சிறையிலேயே எழுதப்பட்டது. அதில் மேற்கு, கிழக்கின் சங்கமமாக தான் இருப்பதையும், மேற்கின் ரசனையை விடமுடியாமல் இந்திய மனதை புரிந்துகொள்ள முடியாமல் துன்புறுவதைக் குறித்துப் பதிவு செய்கிறார். தன்னிடம் எல்லையற்ற அன்புகொண்ட மக்கள் எப்படி மதத்தின் மீது இத்தனை பற்றுகொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை எனவும், ஆனாலும், அது எண்ணற்ற இன்னலுற்ற மனங்களுக்கு நிம்மதியைத் தருகிறது.’ என்றும் பதிகிறார். மார்க்சியம் மீதும், சோசியலிசம் மீதும் அவருக்கு இருக்கும் மரியாதையும் நூலில் வெளிப்படுகிறது. 
நேருவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க காந்தி விரும்பினார். 1936-ல் முள்கிரீடத்தை மீண்டும் ஏற்க சம்மதமா என்று நேருவைக் கேட்டார். மேலும், ‘நேரு எந்தக் கொள்கை, தத்துவங்களுக்காக நிற்கிறாரோ அவற்றுக்கு நேர்மையாக அவர் இருக்கலாம்’ என்று உறுதியும் தந்தார். மனைவியின் மரணத்தில் வருந்திக் கொண்டிருந்த நேரு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதம் தெரிவித்தார். 

ஐரோப்பாவில் இருந்தபொழுது கம்யூனிச தலைவர் ரஜினி பாமி தத்தை சந்தித்திருந்த நேரு அவரிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க உதவுவதாக உறுதி தந்தார். அவர் மனமெல்லாம் பொதுவுடைமை தாக்கம் நிறைந்திருந்தது. 

நேரு தலைவர் ஆவதைத் தடுக்க காந்தியுடன் போராடிப் பார்த்தார் ராஜாஜி. அவர் அசையவில்லை. நேரு தலைவர் ஆனதும். தன்னுடைய உரையை ‘காம்ரேட்ஸ்!’ என்று சொல்லி ஆரம்பித்தார், ‘இந்திய அரசு சட்டம், 1935-ன்படி நாம் பதவியேற்பதில் தவறில்லை. அதே சமயம் அரசியலமைப்பு குழுவை உருவாக்க நாம் உறுதிபெற வேண்டும்.. காங்கிரஸ் மக்கள் பெருந்திரளுக்கான கட்சி, அது தன்னுடைய நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கைவிட வேண்டும். 

சோசியலிசம்தான் நம்முடைய எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு தரும். மேற்கு சோசியலிசத்தால், கிழக்கு தேசியத்தால் நிரம்பியிருக்கிறது. ஏகாதிபத்தியம், பாசிசம் இரண்டும் முதலாளித்துவத்தின் வெவ்வேறு முகங்கள். இரண்டையும் நாம் எதிர்ப்போம்.’ என்றெல்லாம் பேசினார்.
அவருடைய தீர்மானங்கள் கட்சியின் செயற்குழுவில் தோற்கடிக் கப்பட்டன. அவரின் சோசியலிசம் சார்ந்த கருத்துக்களை ஏற்க மறுத்து படேல், ராஜேந்திர பிரசாத், ராஜாஜி முதலியோர் தங்கள் பதவிகளை காந்தி யின் வழிகாட்டுதலில் ராஜினாமா செய்தார் கள். பின்னர் காந்தியின் வழிகாட்டுதலில் ராஜினாமாவை மாற் றிக்கொண்டு தாங்கள் ஏன் நேருவின் தீர்மானத்தை ஏற்க மறுக் கிறோம் என்று கடிதம் கொடுத்தார்கள். பிர்லா முதலிய இருபத்தி யொரு முதலாளிகள் நேருவைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றி னார்கள்.

எதுவும் மோசமாக நடக்காமல் காந்தி பார்த்துக்கொள்ள வேண் டும் என்று கேட்டுக்கொண்டார் பிர்லா. காந்தியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார். நேரு சொன்னவற் றையோ, சோசியலிசத்தையோ, புரட்சிகரமான செயல்திட்டங் களையோ கட்சி செயல்படுத்தாது என்பதை செயற்குழு தெளிவு படுத்தியது. நேரு ‘நான் மானமற்றவனாக உணர்கிறேன்...’ என்று நொந்துபோய் எழுதினார். ஆனால், அப்பா, மனைவி இருவரையும் இழந்துவிட்டு நின்றுகொண்டிருந்த நேரு, காந்தியை விட்டு விலக முடியாமல் இருந்தார். ‘நாங்கள் கருத்தியல் ரீதியாகக் கடல் அளவுக்கு முரண்பட் டாலும் இப்பொழுது மனதளவில் முன் எப்பொழுதையும்விட நெருக்கமாக உணர்கிறோம்...’ என்று அகதா ஹாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி குறிப்பிட்டார். 

நேரு இப்படி மனதளவில் பெரிய போராட்டத்தில் இருந்தபொழுது போஸ் ஆங்கிலேய அரசால் சிறையி லேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சி தேர்தலில் நிற்பது என்று முடிவாகி இருந்தது. கட்சி வெற்றி பெற்ற தும் இந்திய அரசு சட்டத்துக்கு என்னென்ன இடைஞ்சல்கள் உண்டு செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய வேண் டும் என்பது நேருவின் உறுதியான எண்ணமாக இருந்தது. தேர்தல் அறிக்கையை நேரு தயாரித்தபொழுது அதில் சோசியலிசம் என்கிற வார்த்தையை எங்கும் பயன் படுத்தவில்லை. ‘மன்னர்கூட தவறு செய்யலாம், செயற்குழு தவறு செய்யாது’ என்று வஞ்சப்புகழ்ச்சியாக நேரு குறிப்பிட்டார்.

‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்’ என்று குறிப்பிட்டார். தனிநபர் உரிமைகள், அரசியல் கைதிகளின் விடு விப்பு, விவசாயிகள், அரசு அமைப்புகள் ஆகியவற்றைச் சீர்செய்தல் ஆகியன முக்கியக் குறிக்கோள் களாகக் குறிப்பிடப்பட்டன. சோசியலிஸ்ட்கள், வலதுசாரிகள் என்று சகலரும் இந்தத் தீர்மானத்தால் பெரிதும் திருப்தி அடைந்தார்கள். எல்லாரும் இணைந்து தேர்தல் களம் கண்டார்கள்.

நேரு சுழன்று சூறாவளி போலப் பிரசாரம் செய்தார். மூன்று கோடி வாக்காளர் களில் பெரும்பாலானோரை சென்றடைந்தார். மக்கள் பெருந் திரளாக அவருக்கு ஆதரவு நல்கினார்கள். ஆறு மாகாணங்களில் தனிப் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், மூன்று மாகாணங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அமைச்சரவையில் கட்சி பங்கேற்கக் கூடாது என்று நேரு கருதியதை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. நேரு மாய்ந்து, மாய்ந்து எப்படியெல்லாம் அரசை செயல்படவிடாமல் தடுக்கலாம் என்கிற ரீதியில் எழுதி யிருந்தவற்றை அப்படியே வாசித்துவிட்டு, அதைக் காலி செய்வது போல காந்தி இறுதியாக ஒரு பத்தியை சேர்த்து, பதவியில் அமர விரும்பியவர்களுக்குச் சாதகமாக காரியத்தை முடித்தார். பதினெட்டு மாகாணத் தில் பதிமூன்று மாகாணங்கள் பதவியில் அமர்வதில் ஆர்வமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.என்.ராயை சந்தித்துப் படுக்கையில் விழுந்து அழுதுவிடுவது போலக் காட்சியளித்தார் நேரு. ‘நான் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்’ என்று அரற்றினார். அதோடு பெரிதாகக் கட்சித் தலைவராகத் தன்னுடைய பணிகளில் மனம் ஒப்பாமல் ஐரோப்பா நோக்கிப் பயணமானார்.
அடுத்த ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தை கொல்கத்தாவில் நடத்த போஸ் அழைப்பு விடுத்தார். அவரையே காங்கிரசின் அடுத்தத் தலைவராக ஆக்குவது என்று காந்தி முடிவு செய்தார். போஸ் தன்னுடைய உரையில், ’காந்தியின் அகிம்சை வழியில்தான் நாம் விடுதலை பெறவேண்டும். 

அது தீவிரமான போராட்ட முறை என்று அழைப்பதுதான் சரி. அதே சமயம் அந்தப் போராட்ட முறை சற்றும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும். நம்முடைய ஆட்சியில் எல்லா சிறுபான்மையினரும் எந்த ஆபத் தைப் பற்றிய கவலையும் இல்லாமல் சிறப்பாக வாழ முடியும். இந்தியும், உருதுவும் இணைந்த ஒரு மொழி யே நம்முடைய இணைப்பு மொழியாக வேண்டும்...’ என்றெல்லாம் பேசியவர் ‘தொழில்மயமாக்கல் பல் வேறு சிக்கல்களைக் கொண்டிருக்கிறது என்றாலும் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துக்கு நாம் போக முடியாது.’ என்று சொன்ன இடத்தில் மட்டும்தான் காந்தியை நேரடியாக தாக்கினார். 
மற்றபடி மிகவும் அமைதியான ஒரு உரையாகவே அது அமைந்திருந்தது. நேரு போஸுக்கு ஒரு வருடம் கழித்து இதைப்பற்றி எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் செயற்குழுவின் பார்வையோடு ஒத்துப்போவதை போலவே பேசினீர்கள். வழிகாட்டும் தலைவரைப்போல அல்லாமல் ஒரு சபா நாயகர் போலத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருந் தது.’ என்றார்.

நேரு ஐரோப்பாவில் கிளமண்ட் அட்லி முதலிய லேபர் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி அதிகார மாற்றத்தை நிகழ்த்துவார்கள் என்பது குறித்து விவாதித்தார். நேரு ஐரோப்பாவில் இருந் தபொழுது ஒருமுறைகூட போஸ் கடிதம் எழுதவில்லை. இந்தியாவுக்குத் திரும்பியதும், ‘நலமா நேரு?’ என்று உடனே கடிதம் எழுதினார்.

தேசிய திட்ட கமிட்டியை ஏற்படுத்திய போஸ் அதன் தலைவராக நேருவை நியமித்தார். பொதுச்செயலாளர் பதவி முதலிய எதுவும் வேண்டாம் என்று கடுப்போடு ஒதுங்கியிருந்த நேருவுக்கு, மீண்டும் பணியாற்ற இது உத்வேகம் தந்தது. ஆனால், இங்கேயும் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. காமத் என்கிற ஐ.சி.எஸ். அதிகாரி தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு இந்த கமிட்டி யின் உறுப்பினர் ஆகியிருந்தார். கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பொதுவெளியில் விமர்சனங்களை அவர் முன்வைக்க, கடுமையாகக் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. 

காமத்தை நியமித்த கட்சித் தலைவர் போஸிடம் பிரச்னையைக் கொண்டுசென்றார் நேரு. நேருவுக்கு மட் டும் தனிப்பட்ட முறையில் பிடிக்காமல் போய்த்தான் இப்படிக் கோருகிறார் என்று போஸ் எண்ணிக் கொண் டார். பின்னர் தனியாகப் பார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பித்தபொழுது அதற்கு காமத் பொதுச்செயலாளர் ஆனார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
தொடரும்...



No comments:

Post a Comment