சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2015

பேக்கியோ போராடி தோல்வி : ஒரு மணி நேரச்சண்டையில் ஆயிரம் கோடி சம்பாதித்த மேவெதர்

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற குத்துச்சண்டை போட்டியாக கருதப்பட்ட உலக ஹெவி வெயிட்  சாம்பியன்களான அமெரிக்காவின் மேவெதர்- பிலிப்பைன்சின் மேனி பேக்கியோ மோதலில் மேவெதர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மேவெதருக்கு ஆயிரத்து 115 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்களான ஃப்ளாயிட் மேவெதர் மற்றும் மேனி பேக்கியோ ஆகியோருக்கிடையேயான 'வெல்டர் வெயிட்'  குத்துச்சண்டை போட்டி அமெரிக்காவின் லாஸ்கேவாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம். கிராண்டில் இன்று நடைபெற்றது. இந்த சண்டைக்காக லாஸ் வேகாஸ் நகரத்தில் ஆயிரக்கணக்கான குத்துச்சண்டை பிரியர்கள் குவிந்து வருகின்றனர்.ஏராளமான தொழிலதிபர்கள் தங்களது தனி குட்டி விமானங்களில் லாஸ் வேகாஸ் நகரில் குவிந்தனர்.

இந்திய நேரப்படி காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்த குத்துச்சண்டை போட்டி 12 சுற்றுகளாக நடத்தப்பட்டது. சுமார் 30 கோடி மக்கள் உலகம் முழுக்க இந்த சண்டையை தொலைகாட்சிகளில் ரசித்தனர். 
இந்த போட்டி தொடங்கிய முதல் சுற்றுகளில் பேக்கியோ அபாராமாக சண்டையில் ஈடுபட்டார். சில குத்துக்கள் மேவெதரை நிலை குலையவும் வைத்தன. ஆனால் முதலில் விட்டுப்பிடித்த, மேவெதல் இறுதி சுற்றுக்களில் பேக்கியோவின் குத்துக்களை அபாரமாக எதிர்கொண்டு பதில் தாக்குதலை கொடுக்கத் தொடங்கினார்,
இந்த போட்டிக்கு 3 நடுவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். முடிவில்  அவர்கள் அனைவருமே மேவெதருக்கு ஆதரவாகவே முடிவுகளை அறிவித்திருந்தனர். 118- 110 என்று ஒரு நடுவரும் 116-112 எனறு  மற்ற நடுவர்களும் புள்ளிகள் வழங்கியதால் மேவெதர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வெற்றி பெற்ற மேவெதருக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள சாம்பியன் பெல்ட் அணிவிக்கப்பட்ட போது, அரங்கமே அதிர்ந்தது.
 
வெற்றி குறித்து மேவெதர் கூறுகையில், ''இந்த வெற்றிக்காக முதலில் கடவுளுக்கும் உலகம் முழுக்கவுள்ள குத்துச்சண்டை பிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நானும் மேனி பேக்கியோவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பேக்கியோ கடுமையாக போட்டியாளராக திகழ்ந்தார் ''என்றார்.
தோல்வி குறித்து பேக்கியோ கூறுகையில், ''மிகத்திறமையாக நான் சண்டையிட்டேன். சில குத்துக்கள் மிக நேர்த்தியாக அவர் மீது இறங்கின. மேவெதரால் அவற்றை தவிர்க்க முடியவில்லை.இந்த சண்டையில் நான் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். சில குத்துச்சண்டை வீரர்களிடம் உள்ள அடிப்படை பலம் கூட மேவெதரிடம் இல்லை என்றே கருதுகிறேன்'' என தெரிவித்தார். 

           

இறுதி சுற்றுகளில் மேவெதரின் கையே பெரும்பாலும் ஓங்கியிருந்தது. இறுதியில் எதிர்பார்த்தது போல் மேவெதேர வெற்றி பெற்றார். இதுவரை 48 குத்துச்சண்டை போட்டிகளில் களமிறங்கியுள்ள மேவெதர் ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வி காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த சண்டையின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும். இதில் மேவெதருக்கு 60 சதவீதம் அதாவது ஆயிரத்து 115 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.  பேக்கியோவுக்கு ரூ.777 கோடி ரூபாய் கிடைத்தது. 


No comments:

Post a Comment