சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 May 2015

தினம் ஒரு பணி...எம்.பி.யாக வேகமெடுக்கும் சச்சின்...!

ந்தியாவின் மிக பிரபலமான விளையாட்டு வீரர் யார் என்றால் சந்தேகமே இல்லாமல் சச்சினை நோக்கி கை காட்டலாம். அவரது கிரிக்கெட் சாதனைகளுக்காகவே அவர் எம்.பியாகவும் நியமிக்கப்பட்டார். எம்.பி.யாக பொறுப்பேற்றாலும் சச்சின் நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் நாடாளுமன்றத்து போகிறாரோ இல்லையோ தனக்கு அளிக்கப்பட்டுள்ள எம்.பி நிதியை மிக சரியாக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தி வருகிறார் என்றே மும்பையில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று சொல்கிறது.

சச்சின் தனக்கு ஒதுக்கப்பட்ட எம்.பி. நிதி யாருக்கு சேர வேண்டுமென்பதில் திட்டமிட்டு, செயல்படுவதாகவும் தான் அளிக்கும் நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை நேரில் சென்று பார்த்து திருப்தி அடையும் வகையில் பணிகள் இருக்க வேண்டுமென்பதில் சச்சின் கவனமாக இருப்பதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. தான் ஒதுக்கும் நிதி கண்ணியமான முறையில் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு போய் சேரும் வகையில் சச்சின் செயல்பட்டு வருவதாகவும் மும்பை அருகே ஆதிவாசி கிராம மக்களுக்கு சச்சின் செய்த உதவிகளையும் உதாரணமாக அந்த பத்திரிகை கூறுகிறது.

அண்மையில், மும்பை புறநகர் பகுதியில் உள்ள மலை கிராமமான ஆரே காலனி பகுதியில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. இந்த கிராம மக்களின் நிலையை கேள்விபட்ட சச்சின், தனது எம்.பி. நிதியில் இருந்து உடனடியாக அந்த கிராமத்தில் கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்தார். அதுபோல் நடைபாதை அமைத்துக் கொடுத்ததோடு, மின்சார வசதியில்லாத அந்த கிராமத்துக்கு 500 சூரிய மின் விளக்குகளையும் வழங்கியுள்ளார். இது போன்று சச்சின் உதவி செய்யும் மக்கள் அனேகமான இந்த சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு கிடப்பவர்களே என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது. 

மத்திய அரசின் திட்டப்படி எல்லா எம்.பி.க்களையும் போல சச்சினும் ஆந்திரத்தில் ஒரு சிறிய கிராமத்தை தத்து எடுத்தார். புட்டம்ராஜு கண்டிகா என்ற அந்த சிறிய கிராமத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை, பள்ளி கூடம், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி ஒரு மாதிரி கிராமமாகவே அதனை மாற்றிக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.  

சச்சின் கிரிக்கெட் பணியை குறைத்து விட்டு முழு நேர மக்கள் பணியாளராக உருவெடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. 


No comments:

Post a Comment