சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2015

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது!

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

பஞ்சாங்க முறைப்படி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று தொடங்கி வருகின்ற 29 ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு நீடிக்க உள்ளது.
ஆனால், வானிலை மையம் இதனை அங்கீகரிப்பதில்லை. இருந்த போதிலும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மேலும், இம்மாதம் 29 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிப்பதால், அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயரும் என்று கூறப்படுகிறது.

அதே நேரம், கடந்த ஏப்ரல் மாதத்தில், மாநிலத்தின் பல இடங்களில் சராசரியாக கோடை மழை பெய்தது. அதனால், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின்போது வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம். அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கடும் வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உடன், சிறிது நேரம் மின்விசிறியின் கீழ்அமர்ந்து, தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது. அதுவும் குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.
காய்ச்சி வடிகட்டிய நீர் 10 முதல் 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும். காரமான உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. இதன் மூலம், அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக்கொள்ள முடியும்.No comments:

Post a Comment